Advertisment

பார்வை! அம்பலம்! -யுவராஜ், 

parvai

parvai

Advertisment

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் (1991-1996) நக்கீரன் எதிர்கொண்ட அடக்குமுறைகள்தான் அதன் பக்கம் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது. பத்திரிகைகளை ஒழிப்பதில் ஜெயலலிதா கடைப்பிடித்த இருண்ட காலம் அது. அந்த சமயத்தில் நக்கீரனும் அதன் ஆசிரியரும் எதிர்கொண்ட கொடுமைகள் போல வேறு எந்த பத்திரிகையும் சந்தித்ததில்லை. அப்போது நான், மாணவர் காங்கிரசில் இணைந்து தீவிர அரசியலில் இருந்ததால், தமிழக அரசியல் நிலவரங்களை அறிந்துகொள்ள

parvai

Advertisment

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் (1991-1996) நக்கீரன் எதிர்கொண்ட அடக்குமுறைகள்தான் அதன் பக்கம் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது. பத்திரிகைகளை ஒழிப்பதில் ஜெயலலிதா கடைப்பிடித்த இருண்ட காலம் அது. அந்த சமயத்தில் நக்கீரனும் அதன் ஆசிரியரும் எதிர்கொண்ட கொடுமைகள் போல வேறு எந்த பத்திரிகையும் சந்தித்ததில்லை. அப்போது நான், மாணவர் காங்கிரசில் இணைந்து தீவிர அரசியலில் இருந்ததால், தமிழக அரசியல் நிலவரங்களை அறிந்துகொள்ள நாங்கள் முதலில் படிப்பது நக்கீரனைத்தான்.

அ.தி.மு.க. மட்டுமல்ல தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளிலும் நடக்கும் உள்விவகாரங்களை நக்கீரன் மட்டுமே அம்பலப்படுத்தியது. புலனாய்வுச் செய்திகளில் நக்கீரன் கடைப்பிடித்த நேர்மைதான் அதன் வாசகனாய் என்னை இன்னமும் வைத்திருக்கிறது.

2018, பிப்ரவரி 04-06 இதழ் :

தி.மு.க. ஆதரவு பத்திரிகை என்கிற முத்திரை நக்கீரன்மீது அண்மைக் காலங்களில் இருந்து வந்ததை உடைத்து, நடுநிலை பத்திரிகைதான் என நிரூபிக்கும் வகையில் இருந்தது ஸ்டாலின் சந்திக்கும் சவால் செய்தி. "தொண்டர்களுக்கும் தலைமைக்கும் தொடர்பில்லை' என்கிற தி.மு.க. உடன்பிறப்புகளின் குரல்களை பிரதிபலிப்பது போல ஸ்டாலின் பேசியதையும் தொண்டர்களின் உணர்வுகளையும் அப்படியே பதிவு செய்திருந்தது சிறப்பு. "வீதியில் இரண்டு லட்சம் இன்ஜினியர்கள்', "தாலியைச் சுரண்டும் அதிகாரிகள்' ஆகிய இரண்டும் சமூக பிரச்சனைகளில் நக்கீரனுக்கு இருக்கும் அக்கறையைக் காட்டுகிறது. "வலை வீச்சு' பகுதியில் நக்கலுக்கும் நையாண்டிகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் தராமல் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு தருகிற "மீம்ஸ்'களையும் பதிவு செய்யுங்கள். சில மாதங்களாக அரசியல் செய்திகளில் பரபரப்பும், அதிரடியும் இல்லாமல் இருக்கிறது.

Advertisment

வாசகர் கடிதங்கள்!

என்ன நிச்சயம்?

"உங்கள் மனதை அழுத்தும் விஷயங்களை தீர்வு காணும் "புகார் பெட்டி'யில் போடுங்க, ஆய்வு செய்யப்படும்' என்று சொல்கிறார் மு.க.ஸ்டாலின். வாஸ்தவம்தான்... ஆனால் அதில் உள்ள எல்லா கடிதங்களும் அவரது பார்வைக்குப் போகும்னு என்ன நிச்சயம்?

-மு.திருநாவுக்கரசு, பெரம்பலூர்.

பா.ஜ.க. பாம்பு!

இ.பி.எஸ்., சசிக்கு தூது! அந்தப் படலம் முடிந்து, இப்போது ஓ.பி.எஸ்.ஸை ஓரங்கட்ட சசிக்கு பச்சைக் கொடியா? அரசியல் பரமபத ஆட்டத்தில் ஆட்சி ஏணியில் ஊஞ்சலாடுகிற எடப்பாடியை பா.ஜ.க. பாம்பு கொத்தாமல் விடாது போலிருக்கே?

-அ.பி.சந்திரா, சேந்தமங்கலம்.

இதையும் படியுங்கள்
Subscribe