Advertisment

நக்கீரன் தீட்டிய அறிவாயுதங்கள்!

book

பொய்வழக்கும் போராட்டமும்!

நக்கீரன்’’இதழின் முதன்மை செய்தியாளர் பெ.சிவசுப்ரமணியம் எழுதி நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டுள்ள பொய் வழக்கும் போராட்டமும் நூல் அறிமுக விழா சேலத்தில் நடைபெற்றது.

Advertisment

shivabook

சேலம் மாவட்ட செய்தியாளர்கள் மன்ற தலைவர் கதிரவன் வரவேற்றார். நூலைத் திறனாய்வு செய்த மூத்த வழக்குரைஞர் ப.பா.மோகன் பேசும்போது "இந்த நூல் பரபரப்பும், மர்மமும் கலந்து விறுவிறுப்புடன் செல்வதாக கூறினார். தன்மீது பொய்யாக புனையப்பட்ட எட்டு வழக்குகளில் இருந்து நூலாசிரியர் விடுதலை பெற்று வெளியேவரும் வரையிலான போராட்டம் ஒவ்வோர் எழுத்தாளனும், செய்தியாளனும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்' என்றார்.

நக்கீரன் ஆசிரியரை கைது செய்து, நக்கீரன் இதழை முடக்க அன்றைய முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகளையும் அவர் பட்டியலிட்டார். "தனக்கு தெரிந்து வேறு எந்த ஓர் இதழியல் நிறுவனமும், ஆள

பொய்வழக்கும் போராட்டமும்!

நக்கீரன்’’இதழின் முதன்மை செய்தியாளர் பெ.சிவசுப்ரமணியம் எழுதி நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டுள்ள பொய் வழக்கும் போராட்டமும் நூல் அறிமுக விழா சேலத்தில் நடைபெற்றது.

Advertisment

shivabook

சேலம் மாவட்ட செய்தியாளர்கள் மன்ற தலைவர் கதிரவன் வரவேற்றார். நூலைத் திறனாய்வு செய்த மூத்த வழக்குரைஞர் ப.பா.மோகன் பேசும்போது "இந்த நூல் பரபரப்பும், மர்மமும் கலந்து விறுவிறுப்புடன் செல்வதாக கூறினார். தன்மீது பொய்யாக புனையப்பட்ட எட்டு வழக்குகளில் இருந்து நூலாசிரியர் விடுதலை பெற்று வெளியேவரும் வரையிலான போராட்டம் ஒவ்வோர் எழுத்தாளனும், செய்தியாளனும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்' என்றார்.

நக்கீரன் ஆசிரியரை கைது செய்து, நக்கீரன் இதழை முடக்க அன்றைய முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகளையும் அவர் பட்டியலிட்டார். "தனக்கு தெரிந்து வேறு எந்த ஓர் இதழியல் நிறுவனமும், ஆளும் அரசுக்கு எதிராக இவ்வளவு வீரம்செறிந்த போரை நடத்தியிருக்க முடியாது'’’ என்றார்.

Advertisment

திராவிடர் விடுதலைக்கழக தலைவர் கொளத்தூர் மணி, எழுத்தாளர் கோவை பாமரன் ஆகியோர் பேசினர். பாமரன் பேசும்போது, "யாரெனத் தெரியாமல் மாயாவியாக இருந்த வீரப்பனை நக்கீரன் தான் முதன்முதலாக வெளியே கொண்டு வந்தது. நக்கீரன் வெளியிட்ட வீரப்பன் நேர்காணல் ஆட்சி மாற்றத்துக்கே காரணமாக இருந்தது' என்றார்.

book release

நமது ஆசிரியர் பேசும்போது, "நான் எழுதிய "சேலஞ்ச்' மற்றும் "யுத்தம்' போன்ற நூல்களில் நாங்கள் சந்தித்த கொடூரமானவர்களை பற்றி மட்டுமே எழுதினேன். ஆனால், தம்பி சிவசுப்ரமணியம் தான் சந்தித்த பல நல்லவர்களைனளப் பற்றியும் எழுதியுள்ளார். “"பொய் வழக்கும் போராட்டமும்'’’ என்ற இந்த நூலைப்போல ஒருநூலை இன்னொருவரால் இனிமேல் எழுதமுடியது. இவ்வளவு கொடிய போராட்டங்களை இனியொரு பத்திரிகையாளர் சந்திக்கவும் கூடாது என்பதே நாங்கள் வைக்கும் வேண்டுகோள்' என்றார்.

நக்கீரன் வெளியீடு

விலை : ரூ.395/-

அமைப்பாய்த் திரள்வோம்!

thirumaaவிடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் "தாய்மண்', "நமது தமிழ்மண்' ஆகிய இதழ்களில் தனது அமைப்பினருக்கு நடத்திய பாடங்களே இந்தப் புத்தகத்தில் எழுத்துகளாக இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு தலைப்பிலும் அவர் தனது அமைப்பினருக்கு கற்றுத் தந்திருக்கிற விஷயங்கள் பிரமிக்க வைக்கின்றன.

"இந்தப் புத்தகத்தில் ஓர் இடத்தில்கூட மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. ஆனால், அவர்களுடைய bookபோதனைகள் இந்த புத்தகத்தில் பல இடங்களில் திருமாவின் எழுத்துகளாக வெளிப்படுகின்றன' என்று தனது அணிந்துரையில் குறிப்பிடுகிறார் மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவஹர்.

"தன்னை மாற்றுவதென்பது தன் அடையாளத்தை இழப்பதாகவோ, தன்னை தாழ்த்திக் கொள்வதாகவோ, தான் தோற்றுப் போனதாகவோ பொருளாகாது'’என்கிறார் திருமா.

"இந்தப் புத்தகம் விடுதலைச் சிறுத்தைகளுக்கான புத்தகம் அல்ல, விடுதலை விரும்பிகள் அனைவருக்கும் ஆனது' என்கிறார் தணிகைச்செல்வன்.

நக்கீரன் வெளியீடு

விலை : ரூ.325/-

மௌனவலிகளின் வாக்குமூலம்!

booதலைப்பைப் போலவே, இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 21 நிஜக்கதைகளும் பிரகடனம் செய்கிற வலிகள் படிப்போர் நெஞ்சத்தை பிசைந்து உருட்டும் உணர்வை ஏற்படுத்தும். ஈழப்போரின் பல்வேறு காலகட்டங்களில் தமிழ் மக்கள் அனுபவித்த வேதனைகளை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு கதையும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சமூக சிற்பிகள் என்ற அமைப்புக்காக கௌரிஅனந்தன் தொகுத்துள்ள இந்தக் கதைகள் அனைத்துமே இலங்கை தமிழ் நடையில் நம்மை உள்வாங்கிக் கொள்கின்றன. சில கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையை படித்து முடிக்கும்போதும் ஈழப்போராட்டம் தொடங்கிய காலம் முதல், இந்திய அமைதிப்படையால் ஈழத்தமிழச்சிகள் பட்ட வேதனைகள், 2009 ஈழப்படுகொலை சமயத்தில் குண்டுவீச்சுகளில் உடல்சிதைந்து ரத்தச் சகதியில் சிதறிக்கிடந்தவர்களின் ஓலம் என எல்லாவற்றையும் உணர முடிகிறது.

நக்கீரன் வெளியீடு

விலை : ரூ.150/-

இரண்டாவது உலக யுத்தம்

2ndworldwarஇரண்டாவது உலக யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததில் முக்கிய பங்காற்றியது சோவியத் யூனியன். லட்சக்கணக்கான மக்களை பலிகொடுத்து தனது தேசத்தை மட்டுமின்றி, உலகையும் காப்பாற்றிய ஒப்பற்ற பங்களிப்பு சோவியத் யூனியனுடையது. இரண்டாவது உலகயுத்தம் குறித்த இந்த நூல், சோவியத் யூனியனின் முன்னேற்றப் பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்தது. இன்றைக்கு முதலாளித்துவ சதியால் சோவியத் யூனியன் சிதறியிருந்தாலும், வி.அ.மத்சுலேன்கோ எழுதிய இந்த நூல் இரண்டாவது உலகயுத்தம் குறித்த அறியப்படாத உண்மைகளை வெளிப்படுத்துகிறது.

நக்கீரன் வெளியீடு

விலை : ரூ.350/-

இதையும் படியுங்கள்
Subscribe