Advertisment

வந்த செய்தி! விசாரித்த உண்மை!

news

ந்த செய்தி: அ.தி.மு.க. தலைமைக் கழக மகாலிங்கத்தைப் பார்த்தால் பயந்து பம்மும் அமைச்சர்கள்.

Advertisment

mahalingamவிசாரித்த உண்மை: அ.தி.மு.க. அமைச்சர்கள், மா.செ.க்கள் பற்றி தமிழகம் முழுவதிலுமிருந்து வரும் புகார்களை வரிசைப்படுத்தி, ஜெ.வின் பார்வைக்காக போயஸ் கார்டனுக்கு அனுப்பி வந்தவர், தலைமைக் கழக நிர்வாகியான மகாலிங்கம். அப்படி வரும் புகார்களை ஜெ.வின் பார்வைக்குப் போகாதபடி தடுப்பதற்காக, அமைச்சர்களும் மா.செ.க்களும் மகாலிங்கத்திடம் பவ்யம் காட்டியதோடு, அவருக்குத் தோதாகவும் நடந்துகொண்டனர். ஆனால் ஜெ. மறைந்துவிட்ட பிறகு, இப்போதும் அமைச்சர்கள் அனைவரும் மகாலிங்கத்தைப் பார்த்தால் பயபக்தியுடன் வணங்குகிறார்களாம். ""அமைச்சர்களைப் பற்றிய ரகசியங்கள் சில மகாலிங்கத்திடம் மாட்டியிருக்கு. அதான் இப்படிப் பயப்படுகிறார்கள்''’என்கிறார்கள் அ.தி.மு.க. தலைமைக்கழக ஊழியர்கள்.

-இளையர்

வந்த செய்தி: மொய்ப்பணம் வராத கோபம், அரசு வக்கீல் பதவியைப் பறித்தார் அமைச்சர்.

dmk

Advertisment

விசாரித்த உண்மை: முதல்வர் எடப்பாடி, துணை

ந்த செய்தி: அ.தி.மு.க. தலைமைக் கழக மகாலிங்கத்தைப் பார்த்தால் பயந்து பம்மும் அமைச்சர்கள்.

Advertisment

mahalingamவிசாரித்த உண்மை: அ.தி.மு.க. அமைச்சர்கள், மா.செ.க்கள் பற்றி தமிழகம் முழுவதிலுமிருந்து வரும் புகார்களை வரிசைப்படுத்தி, ஜெ.வின் பார்வைக்காக போயஸ் கார்டனுக்கு அனுப்பி வந்தவர், தலைமைக் கழக நிர்வாகியான மகாலிங்கம். அப்படி வரும் புகார்களை ஜெ.வின் பார்வைக்குப் போகாதபடி தடுப்பதற்காக, அமைச்சர்களும் மா.செ.க்களும் மகாலிங்கத்திடம் பவ்யம் காட்டியதோடு, அவருக்குத் தோதாகவும் நடந்துகொண்டனர். ஆனால் ஜெ. மறைந்துவிட்ட பிறகு, இப்போதும் அமைச்சர்கள் அனைவரும் மகாலிங்கத்தைப் பார்த்தால் பயபக்தியுடன் வணங்குகிறார்களாம். ""அமைச்சர்களைப் பற்றிய ரகசியங்கள் சில மகாலிங்கத்திடம் மாட்டியிருக்கு. அதான் இப்படிப் பயப்படுகிறார்கள்''’என்கிறார்கள் அ.தி.மு.க. தலைமைக்கழக ஊழியர்கள்.

-இளையர்

வந்த செய்தி: மொய்ப்பணம் வராத கோபம், அரசு வக்கீல் பதவியைப் பறித்தார் அமைச்சர்.

dmk

Advertisment

விசாரித்த உண்மை: முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் பன்னீர் மற்றும் அமைச்சர்கள் சகிதம் தனது பேரக்குழந்தைகளின் காதுகுத்து விழாவை மதுரையில் தடபுடலாக நடத்தினார் தெர்மாக்கோல் மினிஸ்டர் செல்லூர் ராஜு. காதுகுத்து விழா முடிந்து இரு வாரங்களுக்கு மேலாகிவிட்டாலும் மொய் கணக்குப் பட்டியலை இன்னும் சரிபார்த்துக் கொண்டிருக்கிறாராம் செல்லூரார். அந்தப் பட்டியலில் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து அரசு வக்கீல்களின் பெயரும் இருக்க, மதுரை மகிளா கோர்ட் அரசு வக்கீல் கிறிஸ்டி தெபோராள் பெயர் இல்லாததைப் பார்த்ததும் அமைச்சருக்கு பி.பி. எகிறிவிட்டது. கிறிஸ்டியை செல்போனில் பிடித்த செல்லூரார், "ஏன் மொய் செய்யல?' எனக் கேட்டு, ஏறுக்குமாறாகப் பேசியதோடு, அரசு வக்கீல் பதவியை ராஜினாமா செய்யும்படியும் கடுமை காட்டினாராம். பதவியை ராஜினாமா பண்ணிய சூட்டோடு, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. பி.டி.ஆர்.பி.தியாகராஜன் முன்னிலையில் தி.மு.க.விலும் சேர்ந்துவிட்டார் கிறிஸ்டி.

-அண்ணல்

வந்த செய்தி: ’""படத்தை ரிலீஸ்பண்ணிக் கொடுங்கய்யா...''’கதறுகிறார் ஒரு தயாரிப்பாளர்.

aravindsamy

விசாரித்த உண்மை: மலையாளத்தில் மம்முட்டி-நயன்தாரா ஜோடியில் சித்திக் டைரக்ட் பண்ணி செமஹிட் அடித்த படம், "பாஸ்கர் தி ராஸ்கல்.' தமிழில் "பாஸ்கர் ஒரு ராஸ்கல்' என்ற பெயரில் அரவிந்த்சாமி-அமலாபால் ஜோடிபோட, சித்திக்தான் டைரக்ஷன் பண்ணினார். பட வேலைகள் அனைத்தும் முடிந்து, பொங்கலுக்கு ரிலீஸ் தேதி குறிக்கப்பட்டதும், ஒட்டுமொத்த தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமையையும் வாங்கினார் திருச்சியைச் சேர்ந்த பரதன் பிலிம்ஸ் உரிமையாளர் ஆர்.வி. என்கிற ஆர்.விஸ்வநாதன். இதே விஸ்வநாதன், ஞானவேல்ராஜா தயாரித்த சூர்யாவின் படமான ‘"தானா சேர்ந்த கூட்டம்'’ ரிலீஸ் ரைட்சையும் வாங்கியிருந்தார். பொங்கலுக்கு ‘"தா.சே.கூ.'’ரிலீசானதால், ‘"பா.ஒரு.ரா.'’ ரிலீஸ் தேதியை ஜனவரி 26-க்கு தள்ளி வைத்தனர். பிறகு பிப். 02-ஆம் தேதி என்றனர், அதன்பின் விரைவில் என்ற அறிவிப்பு வெளியானது. "பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் தயாரிப்பாளர் முருகன் இதுபற்றி விஸ்வநாதனிடம் கேட்டதற்கு, ""தா.சே.கூ.’படத்தால 12 கோடி ரூபாய் நட்டமாகிப் போச்சு, அதனால உங்க படத்தை அப்புறம் பார்க்கலாம், சரிப்பட்டு வரலைன்னா, கூடுதல் அமௌன்ட்டை கொடுத்துட்டு, படத்தை நீங்களே வாங்கிக்கங்க''’என்றாராம். "எப்படியாவது படத்தை ரிலீஸ்பண்ணிக் கொடுங்க'’என ஆர்.வி.யிடம் கதறிக்கொண்டிருக்கிறாராம் முருகன்.

-பரமேஷ்

வந்த செய்தி: வருங்கால அரசியல் கணக்கு, அரசு விழாக்களுக்கு மகனை அழைத்துச் செல்லும் துணை முதல்வர்.

விசாரித்த உண்மை: துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சின் மகனான ரவீந்திரநாத், அப்பாவின் ஆசியுடனும் அரவணைப்புடனும் தேனி மாவட்ட அரசு விழாக்களில் ஆர்வமுடன் கலந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார். கடந்த 09-ஆம் தேதி மேகமலை, குரங்கனி, சோத்துப்பாறை வனப்பகுதிகளில் சாலைகளை சீரமைப்பது தொடர்பாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுடனும் அரசு அதிகாரிகளுடனும் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தியபோது உடனிருந்தார் ரவீந்திரநாத். 10-ஆம் தேதி தேனியில் சமூகநலத்துறை சார்பாக நடந்த தாலிக்குத் தங்கம் வழங்குதல் மற்றும் வளைகாப்பு விழாவிலும் 11-ஆம் தேதி சின்னமனூர் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் ஓ.பி.எஸ்.துவக்கி வைத்த ஜல்லிக்கட்டு விழாவிலும் ஆஜரானார் ரவீந்திரநாத். "எல்லாம் வருங்கால அரசியல் கணக்குதான்'’என்கிறார்கள் தேனி மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள்.

-சக்தி

வந்த செய்தி: காஞ்சி சங்கரமடத்தின் புதிய நாட்டாமை, புலம்பும் பக்தர்கள்.

ravendranath

விசாரித்த உண்மை: ஜெயேந்திரர், விஜயேந்திரர் என இரண்டு சங்கராச்சாரியார்கள் கோலோச்சும் காஞ்சிபுரம் சங்கரமடத்தில் பாரம்பரிய ஆன்மிக நடைமுறைகளை ஒழுங்குபடுத்துபவர் ஸ்ரீகாரி என அழைக்கப்படுகிறார். அரசின் நடைமுறைகளை ஒழுங்குபடுத்த நிர்வாக அதிகாரி ஒருவர் இருக்கிறார். ஆனால், இந்த இருவரையும் ஓவர்டேக் பண்ணி, நாராயணன் என்பவர் புதிய நாட்டாமையாகி மடத்தையே படுத்தி எடுக்கிறாராம். ""நாராயணன் அமல்படுத்தியுள்ள விதிகளால், காஞ்சிமடம், கார்ப்பரேட் கம்பெனியாகி, பாரம்பரிய தன்மையை இழந்துவிட்டதால், மடத்துக்குச் சென்றுவந்தால் கிடைத்த நிம்மதி இப்போது கிடைக்கவில்லை''’என்று புலம்பி வருகிறார்கள் சங்கரமட பக்தர்கள். இதற்கிடையேதான் காஞ்சிமட அதிபர்கள் வெளியில் சர்ச்சைகளை உருவாக்குவதுடன், உள்ளுக்குள்ளும் புகைச்சல் ஓயவில்லை.

-சோழன்

இதையும் படியுங்கள்
Subscribe