Advertisment

மாவலி பதில்கள்

advani

mavali

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

துணை முதல்வர் என்ற பதவி அரசியல் சாசனத்திலேயே கிடையாது என்கிறதே உச்சநீதிமன்றம்?

Advertisment

துணை முதல்வர் மட்டுமல்ல, துணை பிரதமர் என்ற பதவிக்கும் தனி முக்கியத்துவம் கிடையாது. ஆளுங்கட்சியில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்யவோ அல்லது பிரச்சினைகள் உருவாகாமல் இருக்கவோ இந்த இரண்டு பெயர்களிலும் பதவிகள் வழங்கப்படுகின்றன. தேவிலால், அத்வானி போன்றவர்கள் துணைப் பிரதமர்களாக்கப்பட்டதும், மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் துணை முதல்வர்களாக்கப்பட்டதும் அப்படித்தான். அரசியல் சாசனப்படி அவர்களும் மற்ற அமைச்சர்களைப் போன்றவர்கள்தான்.

Advertisment

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளதா?

மரண தண்டனையை ரத்துசெய்த உச்சநீதிமன்றம், அவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கையை உரிய அரசு மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்ததற்கான சட்ட விளக்கம் முற்றுப் பெறவில்லை. மத்திய-மாநில அரசுகளின் சட்ட விள

mavali

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

துணை முதல்வர் என்ற பதவி அரசியல் சாசனத்திலேயே கிடையாது என்கிறதே உச்சநீதிமன்றம்?

Advertisment

துணை முதல்வர் மட்டுமல்ல, துணை பிரதமர் என்ற பதவிக்கும் தனி முக்கியத்துவம் கிடையாது. ஆளுங்கட்சியில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்யவோ அல்லது பிரச்சினைகள் உருவாகாமல் இருக்கவோ இந்த இரண்டு பெயர்களிலும் பதவிகள் வழங்கப்படுகின்றன. தேவிலால், அத்வானி போன்றவர்கள் துணைப் பிரதமர்களாக்கப்பட்டதும், மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் துணை முதல்வர்களாக்கப்பட்டதும் அப்படித்தான். அரசியல் சாசனப்படி அவர்களும் மற்ற அமைச்சர்களைப் போன்றவர்கள்தான்.

Advertisment

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளதா?

மரண தண்டனையை ரத்துசெய்த உச்சநீதிமன்றம், அவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கையை உரிய அரசு மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்ததற்கான சட்ட விளக்கம் முற்றுப் பெறவில்லை. மத்திய-மாநில அரசுகளின் சட்ட விளையாட்டுகளை முடிவுக்கு கொண்டுவரும் அதிகாரம் உச்சநீதிமன்றத்தின் கைகளில்தான் உள்ளது.

mavali1

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

தமிழகத்தின் வாழ்வாதாரத்திற்குக் காரணமான காவிரி ஆற்றைக் காப்பாற்ற தமிழக அரசு எடுக்கும் செயல்திட்டங்கள் என்ன?

திட்டத் திட்டக் கவலைப்படாமல் மணல்அள்ளும் செயல்தான் தமிழக அரசின் திட்டமாக இருக்கிறது. தற்போதைய நிலையே தொடர்ந்தால் இன்னும் 120 ஆண்டுகளில் காவிரிஆறு என்ற ஒன்றே இருக்காது என எச்சரிக்கின்றனர் சூழல் ஆர்வலர்கள். காவிரி உற்பத்தியாகும் கர்நாடகாவின் குடகு பகுதியிலேயே பிளாஸ்டிக் போன்ற குப்பைகளால் நதிநீர் சீர்கெட்டுப் போவதாகக் கூறி, ஆற்றைப் பாதுகாக்கும் விழிப்புணர்வுக் குரல்கள் வெளிப்படுகின்றன.

லட்சுமிகாந்தம், வேலூர்

கவிப்பேரரசுக்கு எதிராக கேப்டன் குரல் உயர்த்தியது ஏன்?

ஆண்டாள் சன்னிதியில் தம்பதி சமேதராக திவ்ய தரிசனம் செய்பவர் கேப்டன். அந்த தரிசனத்திற்கு துணைநிற்போர் சொன்னபடி குரல் உயர்த்தி, "காணிக்கை' செலுத்திவிட்டார்.

உமரி பொ.கணேசன், மும்பை-37

தமிழகத்தைப்போல மற்ற மாநிலங்களில் இந்த அளவு புதிய கட்சிகள் தொடங்கப்படுவதில்லையே?

எல்லா மாநிலங்களிலும் அங்குள்ள பிரச்சினைகளுக்கேற்பவும் தேவைக்கேற்பவும் புதுப்புது கட்சிகள் உருவாகிக்கொண்டுதான் இருக்கின்றன. தமிழகத்தில் மட்டும்தான் தொடங்கப்படாத கட்சிகளுக்கெல்லாம் பூதாகர விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு, ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன.

எம்.முகமது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்து, "தனித்துப் போட்டி' என அறிவித்துள்ளதே சிவசேனா?

பால்தாக்கரே இருந்தவரை மகாராஷ்டிராவில் அவர்தான் கூட்டணியை இயக்கும் ரிமோட் கண்ட்ரோலாக இருந்தார். ரிமோட் பேட்டரி செயலிழந்ததும், நிலைமை மாறியது. ஒரு கட்டத்தில் சிவசேனாவின் தயவின்றியே பயணிக்கும் பலம் பா.ஜ.க.வுக்கு வந்துவிட்டது. தான் உதாசீனப்படுத்தப்படுவதை உணர்ந்தே இந்த முடிவுக்கு வந்துள்ளது சிவசேனா.

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்பாளிகளுடைய புத்தகங்களின் விலை பதிப்பகத்துக்குப் பதிப்பகம் மாறுகிறதே?

படைப்பாளியின் எழுத்துக்கு ஒரே மதிப்புதான். பதிப்பகம் அச்சிடும் புத்தகத்தின் தாள், தரம் இவைதான் சந்தை விலையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

தூயா, நெய்வேலி

"நானும் பச்சை திராவிடன்தான்' என்கிறாரே பா.ஜ.க.வின் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்?

"திராவிடம் என்பதே வெள்ளைக்காரர்கள் செய்த மோசடி' என்கிறார் அதே பா.ஜ.க.வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. தன்னை "பச்சை திராவிடன்' என்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன். என்னதான் இந்து என்ற லேபிளில் ஒன்றுபட்டிருப்பதுபோலக் காட்ட முயன்றாலும் உள்ளுக்குள் ஆரிய-திராவிட யுத்தம் ஆண்டாண்டுகாலமாக தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பதற்கு பா.ஜ.க. தலைகளே சாட்சி.

ஆன்மிக அரசியல்

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு சார்பில் கோயில்களில் பூஜை நடத்தி, ஆன்மிக அரசியல் ஆரம்பமாகியுள்ளதே?

மேற்குவங்கத்தில் அழுத்தமாக காலூன்ற நினைக்கும் பா.ஜ.க.வுக்கு எதிராக மம்தாவின் அரசியல் கணக்கு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், வழிபாட்டுத்தலங்களில் முறைப்படி பூஜை நடக்கச் செய்வதும், வழிபாட்டுக்குத் தொடர்பில்லாத இடங்களில் மதநம்பிக்கைகளைத் திணிப்பதைத் தடுப்பதும் அரசாங்கத்தின் கடமை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, முதல்வராக அறிஞர் அண்ணா பொறுப்பேற்றதும் "அரசு அலுவலகங்களில் மதஉணர்வுகளைத் தூண்டும் வகையில் கடவுளர் படங்கள், சிலைகள் இடம்பெறுதல் கூடாது' என அரசாணை வெளியிட்டார். அதேநேரத்தில், கோயில்களில் வழிபாடுகள் முறையாக நடைபெறுவதற்கு தி.மு.க. அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. கலைஞர் முதல்வரானபோது மயிலாப்பூர் கோயில் குளம் தூர்வாரப்பட்டது. நீண்டகாலமாக ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை செப்பனிட்டு ஓடச்செய்தார். பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. அனைத்துக் கோயில்களிலும் ஒருகால பூஜையாவது நடைபெறவேண்டும் என்பதை அரசு உறுதி செய்தது. பின்னர் அமைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது ஆட்சிக் காலங்களிலும் கோயில் திருப்பணி-வழிபாடு ஆகியவை தொடர்ந்தன. இது ஆன்மிக அரசியல் அல்ல, அரசின் கடமை.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe