Advertisment

மாவலி பதில்கள்

lenin-statue

வீ.ஹரிகிருஷ்ணன், புத்தூர், திருச்சி

அது என்ன சார், கமலும் ரஜினியும் தமிழக முதல்வராக வந்தால்தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியுமா? இத்தனை காலமாக தங்களின் ரசிகர் மன்றங்கள் மூலமாக இவர்கள் சாதித்தது என்ன?

Advertisment

இத்தனை காலமாக ரசிகர்களைத் தக்க வைத்த சாதனைதான், அவர்களுக்குத் தமிழக முதல்வராகும் ஆசையை உண்டாக்கியுள்ளது. அந்த ரசிகர்களுக்கு நன்மை செய்ய ஆட்சி வேண்டுமே.. ரசிகர்களும் மக்கள்தானே!

Advertisment

lenin

லட்சுமிபிரியா, வேலூர் (நாமக்கல்)

கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது பழிவாங்கும் நடவடிக்கையா?

2ஜி வழக்கில் தங்களுடன் கூட்டணியில் இருந்த கட்சியைச் சேர்ந்த ஆ.ராசாவையும் கனிமொழியையும் கைது செய்தபோது, மத்திய அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். அவரது மனசாட்சிக்குத் தெரியும், எது பழிவாங்கும் நடவடிக்கை, எது சட்டரீதியான நடவடிக்கை என்பது!

எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

"சமுதாய முன்னேற்றத்துக்கு ஒரே வழி அனைவரும் ஆர்

வீ.ஹரிகிருஷ்ணன், புத்தூர், திருச்சி

அது என்ன சார், கமலும் ரஜினியும் தமிழக முதல்வராக வந்தால்தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியுமா? இத்தனை காலமாக தங்களின் ரசிகர் மன்றங்கள் மூலமாக இவர்கள் சாதித்தது என்ன?

Advertisment

இத்தனை காலமாக ரசிகர்களைத் தக்க வைத்த சாதனைதான், அவர்களுக்குத் தமிழக முதல்வராகும் ஆசையை உண்டாக்கியுள்ளது. அந்த ரசிகர்களுக்கு நன்மை செய்ய ஆட்சி வேண்டுமே.. ரசிகர்களும் மக்கள்தானே!

Advertisment

lenin

லட்சுமிபிரியா, வேலூர் (நாமக்கல்)

கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது பழிவாங்கும் நடவடிக்கையா?

2ஜி வழக்கில் தங்களுடன் கூட்டணியில் இருந்த கட்சியைச் சேர்ந்த ஆ.ராசாவையும் கனிமொழியையும் கைது செய்தபோது, மத்திய அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். அவரது மனசாட்சிக்குத் தெரியும், எது பழிவாங்கும் நடவடிக்கை, எது சட்டரீதியான நடவடிக்கை என்பது!

எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

"சமுதாய முன்னேற்றத்துக்கு ஒரே வழி அனைவரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்வதுதான்' என்கிறாரே மோகன் பகவத்?

ஆர்.எஸ்.எஸ். சிந்தனைகளைத்தான் பா.ஜ.க. தன் ஆட்சியில் செயல்படுத்துகிறது. திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடித்த வேகத்தில் பா.ஜ.க. மேற்கொண்ட சமுதாய முன்னேற்றம் என்ன தெரியுமா? அங்கிருந்த சோவியத் புரட்சியாளர் லெனின் சிலையை அகற்றியதும், மார்க்சிஸ்ட்டுகள் மீதான வன்முறையும்தான். ஜனநாயகம் என்பது கொள்கைகளாலும் கருத்துகளாலும் மக்களின் மனதை ஈர்த்து சமுதாய மாற்றங்களை உண்டாக்குவதாகும். அதற்கு நேர் மாறாக, தேர்தல் வெற்றியை போரில் பெற்ற வெற்றியாகக் கருதி, ஆதிக்க மனப்பான்மையுடன் செயல்படுவது பாசிசத்தின் அப்பட்டமான வெளிப்பாடு. அது சமுதாய முன்னேற்றத்துக்கு வழி வகுக்காது. அமைதியை இழந்த வன்முறைச் சமுதாயத்துக்கு அடிகோலும். அந்த ஆபத்து விதைகளை விதைப்பதற்கு ஆர்.எஸ்.எஸ்.ஸும் பா.ஜ.க.வும் அரசு இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றன.

அ.குணசேகரன், புவனகிரி

நீரவ்மோடி மற்றொரு விஜய்மல்லையாதானே?

உங்கள் கேள்விக்கு, பொன்னியம்மன்மேடு, வண்ணை கணேசன் கேட்டுள்ள கேள்வியே பதிலாகிறது. "48 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாததை, பா.ஜ.க. அரசு செய்துள்ளது' என்று பிரதமர் மோடி பெருமிதம் கொள்கிறாரே?

உமரி.பொ.கணேசன், மும்பை-37

செம்மரக்கடத்தலில் தமிழர்களே அதிகம் ஈடுபட்டு பிடிபடும் நிலையிலும் தொடர்ந்து மரம் வெட்டச் செல்வது ஏன்?

பசிக்கின்ற வயிறும், அதைப் பயன்படுத்தி பொய் வாக்குறுதி அளிக்கும் புரோக்கர்களும், அவர்களோடு இணக்கமாக இருக்கும் தமிழ்நாடு அரசின் நிர்வாகமும்.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

"தமிழக உரிமைகளை துளி அளவுகூட நாங்கள் விட்டுக் கொடுத்ததில்லை' என்கிறாரே ஓ.பி.எஸ்.?

மிஸ்டர் டெபுடி சி.எம்., நீங்க சி.எம்.மாக இருந்தபோது சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சி ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தின் ஃபைல் டெல்லியில் எங்கே இருக்குன்னு துளிஅளவு க்ளூவாவது கொடுங்களேன்.

லட்சுமிசெங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)

கொள்ளுப்பேரனுடன் கலைஞர் விளையாடும் கிரிக்கெட் எப்படி?

தாத்தா எப்பவுமே ஆல்ரவுண்டர்தான்.

ஆன்மிக அரசியல்

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

திராவிட இயக்கங்களை ஆன்மிக அரசியல் ஒழிக்க முயற்சி செய்கிறதா?

எந்தப் பெயரிலாவது திராவிட இயக்கங்களை ஒழித்துவிடவேண்டும் என்கிற முயற்சி அரை நூற்றாண்டுக்கும் மேலாகவே நடக்கிறது. இப்போது நடப்பது, திராவிட அரசியல் கட்சிகளின் ஆட்சியை ஒழித்து, மாற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற முயற்சி. இதில், ஆன்மிக அரசியல் கைகொடுக்கும் என நம்புகிறார்கள். பா.ஜ.க.வின் நேரடி மதவாத அரசியலுக்குப் பதில், ரஜினியின் ஆன்மிக அரசியல் முன்னெடுக்கப்பட்டால், மக்கள் செல்வாக்குடன் அது வெற்றிபெற்று, திராவிட அரசியல் கட்சிகளின் ஆட்சியை அகற்றும் என்கிற வியூகம் வகுக்கப்படுகிறது. தத்துவங்கள் மாறுவதும் தலைவர்கள் மாறுவதும் காலத்தின் தேவையையும் மக்களின் விருப்பத்தையும் சார்ந்தது. அது ஜனநாயக இயல்பு. அதே நேரத்தில், திராவிடத்துக்கு மாற்று ஆன்மிகம் என நினைப்பது அடிப்படைச் சிக்கல். தேவாரம் பாடிய மூவருள் ஒருவரான திருஞானசம்பந்தரை "திராவிட சிசு' என்றவர் ஆதிசங்கரர். ஆழ்வார்களின் நாலாயிரதிவ்யபிரபந்தத்தை "திராவிட வேதம்' என ராமானுஜர் காலத்திலிருந்தே குறிப்பிடுகிறார்கள். மாமன்னன் ராஜராஜசோழனும் அவர் மகன் ராஜேந்திரசோழனும் அவர்கள் வழிவந்த சோழ அரசர்களும் கட்டிய சைவக்கோவில்கள் திராவிடக் கட்டடக்கலை மரபை அடிப்படையாகக் கொண்டவை. திராவிட அரசியல் கட்சிகளின் ஆட்சியில்தான் திருவரங்கம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல கோவில்கள் புனரமைக்கப்பட்டு, குடமுழுக்கு விழாக்களைக் கண்டன. திராவிடத் தலைவர்களில் சிலர் நாத்திகக் கொள்கையில் இருந்தாலும், திராவிட அரசியல் என்பது ஆன்மிக நெறியாளர்களை உள்ளடக்கி, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகும். நேரடி ஆன்மிக அரசியல் பேசும் தலைவர்களோ, வடமொழி பண்பாட்டு ஆதிக்கத்திற்குத் துதி பாடி "ஸந்த்தோஷ'ப்படுகிறார்கள்.

mavali answers
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe