Advertisment

மாவலி பதில்கள்

sathyaraj

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி, பொள்ளாச்சி

"சசிகலா நினைத்திருந்தால் இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஜெயலலிதா இருந்திருப்பார். ஆனால் திட்டமிட்டு, இறப்புக்கு காரணமாக இருந்துவிட்டார்' என அமைச்சர் வீரமணி கூறுகிறாரே?

Advertisment

ஜெயலலிதா மரணமடைந்து, சசிகலா சிறைக்குப் போனபிறகு "உண்மை பேசும்' இப்படிப்பட்ட துணிச்சலானவர்களை அமைச்சர்களாக்காமல் இருந்திருந்தால், ஜெயலலிதா இன்னும் 20 ஆண்டுகளுக்கு மேலும் வாழ்ந்திருப்பாரோ!

Advertisment

எஸ்.பூவேந்தஅரசு, பெரியமதியாக்கூடலூர்

"எழுதுகோல் தெய்வம்' என்று மகாகவி பாரதி கூறினாலும், எல்லாருக்கும் சோறு போட பேனாவால் முடிகிறதா?

தெய்வம் நேரடியாக சோறு போடுவதில்லை. பக்தர்கள்தான் தங்களுக்குக் கிடைக்கும் சோற்றை... தெய்வத்துக்கு நன்றியுடன் படையலிடுகிறார்கள். செய்யும் தொழிலே தெய்வம் என்பதை உழைப்பவர்கள் உணர்வார்கள். வயலில் உழவு செய்யும் ஏர்க்கலப்பையின் நோக்கம், பயிர் வளர்ந்து மக்களின் வயிறு நிறைய வேண்டும் என்பது

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி, பொள்ளாச்சி

"சசிகலா நினைத்திருந்தால் இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஜெயலலிதா இருந்திருப்பார். ஆனால் திட்டமிட்டு, இறப்புக்கு காரணமாக இருந்துவிட்டார்' என அமைச்சர் வீரமணி கூறுகிறாரே?

Advertisment

ஜெயலலிதா மரணமடைந்து, சசிகலா சிறைக்குப் போனபிறகு "உண்மை பேசும்' இப்படிப்பட்ட துணிச்சலானவர்களை அமைச்சர்களாக்காமல் இருந்திருந்தால், ஜெயலலிதா இன்னும் 20 ஆண்டுகளுக்கு மேலும் வாழ்ந்திருப்பாரோ!

Advertisment

எஸ்.பூவேந்தஅரசு, பெரியமதியாக்கூடலூர்

"எழுதுகோல் தெய்வம்' என்று மகாகவி பாரதி கூறினாலும், எல்லாருக்கும் சோறு போட பேனாவால் முடிகிறதா?

தெய்வம் நேரடியாக சோறு போடுவதில்லை. பக்தர்கள்தான் தங்களுக்குக் கிடைக்கும் சோற்றை... தெய்வத்துக்கு நன்றியுடன் படையலிடுகிறார்கள். செய்யும் தொழிலே தெய்வம் என்பதை உழைப்பவர்கள் உணர்வார்கள். வயலில் உழவு செய்யும் ஏர்க்கலப்பையின் நோக்கம், பயிர் வளர்ந்து மக்களின் வயிறு நிறைய வேண்டும் என்பதுதான். அதுபோல எழுதுகோலின் நோக்கமும் இலக்கும் மக்களுக்கானதாக அமைந்தால் பேனா வளர்க்கும் சிந்தனைப் பயிர், தனி மனிதர்களுக்கு மட்டுமல்ல, சமுதாயத்திற்கே சோறு போடும்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"அப்பாவின் கட்சியில் சேரமாட்டேன்' என நடிகை ஸ்ருதிஹாசன் கூறுகிறாரே?

வாரிசு அரசியல் எல்லாப் பக்கமும் பரவியிருக்கும் நிலையில், கமலின் மகள் எடுத்திருக்கும் முடிவு பாராட்டுக்குரியது. சொந்த வீட்டிலிருக்கும் ஒரு ஓட்டே கமலுக்கு கிடைக்கவில்லை என்பது பரிதாபத்திற்குரியது.

எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

பட்ஜெட்டைவிட உபரி வருவாய் அதிகம் இருப்பதால், அந்நாட்டு குடிமக்களுக்கு 300 டாலர்கள் போனஸாக வழங்குகிறதே சிங்கப்பூர் அரசு?

நாட்டு பட்ஜெட்டின் உபரியை வீட்டுக்கு வழங்குகிறது சிங்கப்பூர். வீட்டு பட்ஜெட்டின் உபரியை செல்லாக்காசாக்கியது இந்தியா. அச்சே தின்.

sathyaraj

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

"அரசியலுக்கு வரும் நடிகர்களை நம்பாதீர்கள்' என்று நடிகராக இருக்கும் சத்யராஜ் கூறுகிறாரே?

அவர் இப்போதுதானா சொல்கிறார்? மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான, தமிழக அரசியல் பற்றிய மாஸ்டர் பீஸ் படமான "அமைதிப்படை'யில் "அரசியல்வாதிகளை நம்பாதீர்கள்' என நடித்தே காட்டிவிட்டாரே! நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் அதேதான் என்பதை இப்போது சொல்லியிருக்கிறார் "மகாநடிகன்'.

மு.செ.மு.புகாரி, சித்தார்கோட்டை

தேசியக்கட்சிக்காரரின் வாரிசான கமல் போன்றோர் திராவிட அரசியல் பேசுவதும், திராவிட இயக்க வழி வந்தவர்களான திருநாவுக்கரசர், இளங்கோவன் போன்றோர் காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகளில் பங்கேற்பதும் இமாலய மாற்றம்தானே?

மாற்றங்களுக்கு இமாலய அளவிலான காரணங்கள் தேவையில்லை. சின்னச் சின்ன கற்களை வழியில் போட்டாலே வாகனங்கள் பாதை மாறிச் சென்றுவிடும். காலமாற்றங்களும், அவரவரின் சொந்த அனுபவங்களால் ஏற்படும் சிந்தனை மாற்றங்களுமே முந்தைய அரசியல் பாதையிலிருந்து விலகிச் செல்ல வைக்கின்றன.

உமரி பொ.கணேசன், மும்பை-37

உ.பி.யில் முதல்வராக யோகி பதவி ஏற்றபின் 10 மாதங்களில் 900 என்கவுன்ட்டர்கள் நடந்துள்ளன. இது பிரதமர் மோடிக்கு தெரியுமா?

மோடி முதல்வராக இருந்தபோது குஜராத்தில் என்கவுன்ட்டருக்காளான சொராபுதீன், இர்ஷத்ஜகான் உள்ளிட்டோரின் என்கவுன்ட்டர்களுக்கே இன்னும் முழுமையான விடை தெரியாமல் இருக்கிறதே!

ஆன்மிக அரசியல்

வீ.ஹரிகிருஷ்ணன், புத்தூர், திருச்சி-17

"திடீர் திடீர் என கோயில்களில் தீவிபத்து ஏற்பட்டுவரும் நிலையில், ஆன்மிக அரசியலை முன்வைத்து கட்சி நடத்துபவர்களெல்லாம் கோயில்களை இந்து அறநிலையத்துறையிலிருந்து விடுவித்து தனிநபர்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என முழக்கமிடுகிறார்களே?

அவர்கள் முன்வைப்பது ஆன்மிக அரசியல் அல்ல... மதவாத அரசியல். அதிலும் ஒரு மதத்தின் பெயரால் குறிப்பிட்ட சில சமூகத்தினரின் நலனுக்காக மட்டும் முன்வைக்கப்படும் அரசியல். அதுமட்டுமின்றி, கோவில்களில் தீ விபத்து ஏற்பட்டதன் உண்மைக் காரணத்தை ஆராயாமல், வழக்கம்போல அவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டு, ஆண்டவனின் சக்தியை கேள்விக்குள்ளாக்குவதாக அமைகிறது. திருவாலங்காடு கோயில் மரம் (தலவிருட்சம்) தீப்பிடித்து எரிந்தது. பச்சை மரம் எப்படி எரிந்தது என்பதுதான் கேள்வி. ""தமிழ்நாட்டு அறநிலையத்துறையினர் மோசமாகச் செயல்படுவதால் கடவுளே கோபம் கொண்டதன் விளைவுதான் இதுபோன்ற தீவிபத்துகள்'' என்பவர்கள், ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி கோயில் கோபுரம் இடி விழுந்து சேதமானதற்கு யாருடைய மோசமான விளைவு காரணம் என்பதையும் யோசிக்க வேண்டும். பாதுகாப்பின்மையும் கவனக்குறைவும் நிர்வாகச் சீர்கேடுகளும் அரசு நிர்வாகத்திலும் உண்டு, தனியார் நிர்வாகத்திலும் உண்டு. கும்பகோணத்தில் 90-க்கும் மேற்பட்ட பிஞ்சுகளின் உயிரைப் பறித்த தீ விபத்து தனியார் பள்ளி நிர்வாகத்தில் ஏற்பட்டதுதான். எனவே பிரச்சினை அரசாங்கமா, தனியாரா என்பதல்ல. அறநிலையத்துறை என்பது இந்து மதத்தின் அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்கக்கூடிய அமைப்பாக உள்ளது. அதைத் தகர்க்கவேண்டும் என்பதுதான் மதவாத அரசியலின் நோக்கம்.

Sathayaraj mavali answers
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe