லட்சுமிசெங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)
ஜெ. சமாதியில் சசி, பன்னீர். தினகரன் செய்த சபதங்கள் எல்லாம் என்னாச்சு?
"மக்களால் நான் மக்களுக்காக நான்' என்று பரந்துவிரிந்த கொடநாடு எஸ்டேட் பங்களாவிலிருந்து ஜெ. கொடுத்த அறிக்கைகள் போலத்தான்.
உமரி பொ.கணேசன், மும்பை-37
மத்திய அரசை எதிர்ப்பதில் தெலுங்கு தேச கட்சிக்கு உள்ள தைரியம் அ.தி.மு.க.வுக்கு இல்லாமல் போனது ஏன்?
அடுத்து நடைபெறும் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என தெலுங்கு தேசம் நினைப்பதால், மத்திய அரசை எதிர்க்கிறது. அடுத்த தேர்தல் முன்கூட்டியே வந்துவிடாதபடி ஆட்சியின் பலன்களை அனுபவித்துக்கொள்ள வேண்டும் என அ.தி.மு.க. நினைப்பதால், மத்திய அரசுக்கு மண்டியிடுகிறது.
எஸ்.பூவேந்தஅரசு, பெரியமதியாக்கூடலூர்
திராவிடம் என்ற சொல்லாட்சியின் எழுச்சி அடங்காமல் கவனம் செலுத்துவதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியுள்ளதா?
திராவிடம் என்பது இன -மொழி -சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டோரின் விடுதலை உரிமைக்கான சொல். அதனை செயல்
லட்சுமிசெங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)
ஜெ. சமாதியில் சசி, பன்னீர். தினகரன் செய்த சபதங்கள் எல்லாம் என்னாச்சு?
"மக்களால் நான் மக்களுக்காக நான்' என்று பரந்துவிரிந்த கொடநாடு எஸ்டேட் பங்களாவிலிருந்து ஜெ. கொடுத்த அறிக்கைகள் போலத்தான்.
உமரி பொ.கணேசன், மும்பை-37
மத்திய அரசை எதிர்ப்பதில் தெலுங்கு தேச கட்சிக்கு உள்ள தைரியம் அ.தி.மு.க.வுக்கு இல்லாமல் போனது ஏன்?
அடுத்து நடைபெறும் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என தெலுங்கு தேசம் நினைப்பதால், மத்திய அரசை எதிர்க்கிறது. அடுத்த தேர்தல் முன்கூட்டியே வந்துவிடாதபடி ஆட்சியின் பலன்களை அனுபவித்துக்கொள்ள வேண்டும் என அ.தி.மு.க. நினைப்பதால், மத்திய அரசுக்கு மண்டியிடுகிறது.
எஸ்.பூவேந்தஅரசு, பெரியமதியாக்கூடலூர்
திராவிடம் என்ற சொல்லாட்சியின் எழுச்சி அடங்காமல் கவனம் செலுத்துவதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியுள்ளதா?
திராவிடம் என்பது இன -மொழி -சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டோரின் விடுதலை உரிமைக்கான சொல். அதனை செயல்கள் மூலம்தான் கட்டிக் காக்க முடியும். அதற்காகத்தான் ஈரோட்டில் மாளிகை போன்ற தனது வீட்டின் ஒரு பகுதியை "குடிஅரசு', "விடுதலை' பத்திரிகைகளின் அலுவலகமாக்கினார் பெரியார். அங்கே தங்கியிருந்துதான் அண்ணாவும் கலைஞரும் திராவிடக் கொள்கைகளை வளர்க்கும் பயிற்சியைப் பெற்றனர். "விடுதலை' பத்திரிகையின் ஆசிரியராக தமிழ் எழுத்து நடையில் மறுமலர்ச்சியை உண்டாக்கிய அண்ணாவுக்கு, தனது மாளிகையின் பின்பக்கம் இருந்த ஒரு வீட்டை ஒதுக்கிக் கொடுத்தார் பெரியார். தன் குடும்பத்தினருடன் தங்கியிருந்த அண்ணா, அந்த வீட்டில் உள்ள ஒரு சிறிய அறையையும் தனது எழுத்து -படிப்பு பணிக்கான அலுவலகமாக மாற்றிக்கொண்டார். கூடத்தில் தங்கியபடி, சிறிய அடுப்பங்கரையின் புகைமண்டலத்திற்கு நடுவேதான் அண்ணா குடும்பத்தினரின் வாழ்க்கை நகர்ந்தது. இந்த எளிமையை முதல்வர் பொறுப்புக்கு வந்தபோதும் கடைப்பிடித்தவர் அண்ணா. கொள்கை வளர்ச்சிக்காக, தனது சுயவளர்ச்சிக்கான தேவைகளைக் குறைத்துக் கொண்டு வாழும்போதுதான் உரிமைப் போரில் தொடர்ந்து வெற்றிபெற முடியும்.
ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்
ஜெயலலிதா வாரிசு என நினைத்த அ.தி.மு.க. தலைவர் யார்?
அவர் உயிருடன் இருந்தவரை, போயஸ் கார்டனில் உள்ள அவரது அறையில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தினந்தோறும் அந்தத் தலைவரைப் பார்த்துக்கொண்டிருந்தாராம்.
பி.மணி, குப்பம், ஆந்திரா
திரைப்படத்தில் ஒரு பாட்டு வெற்றிபெறக் காரணம் பாடலாசிரியரா, பாடகரா, இசையமைப்பாளரா?
திரைப்படம் என்பதே கூட்டு முயற்சி. வெற்றி-தோல்வி இரண்டும் அனைவருக்கும் பொருந்தும். படம் பார்க்காதவர்களையும்கூட ஈர்க்கும் சக்தி பாடலுக்கு உண்டு. ஒரு படத்தின் பெயரை காலங்கடந்தும் நினைவில் நிறுத்துவதில் பாடல்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அதில் பாடலாசிரியர் -பாடகர் -இசையமைப்பாளர் மூவருக்கும் பங்கு இருக்கிறது. தற்போது தொலைக்காட்சிகளிலும் பாடல் களை அடிக்கடி ஒளிபரப்புவதால் பாடலைக் காட்சியாக்கும் விதத்தில் இயக்குநர் -ஒளிப்பதிவாளர் -நடிகர் -நடிகையரின் பங்கும் பாடல் வெற்றிக்கு முக்கியமாகிறது.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு,
இந்த ஆண்டு வங்கிகளின் மொத்த மோசடிகள் 19 ஆயிரத்து 194 கோடி ரூபாய் என்றும் இது மூன்றே மாதங்களில் 2017ஆம் ஆண்டை மிஞ்சிவிட்டதாகவும் சொல்கிறார்களே?
மோ(ச)டி அரசின் அபரிமிதமான வளர்ச்சியின் வெளிப்படையான எடுத்துக்காட்டு.
-------------------------
ஆன்மிக அரசியல்
அயன்புரம் த. சத்தியநாராயணன், சென்னை-72
ஆன்மிக அரசியல்வாதிகள் என்று யார், யாரை பட்டியலிடலாம்?
வரலாற்றில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். வேதங்களின் அடிப்படையிலும்- வருணாசிரமத்தின் அடிப்படையிலும் பாகுபாடு காட்டிய சமூகத்தில் அனைவரிடமும் அன்பு காட்டி ஆசையைத் துறக்கச் சொல்லும் பவுத்த மதத்தை நிறுவிய இளவரசன் சித்தார்த்தன், உருவ வழிபாடுகளின் அடிப்படையில் மாய மந்திரங்களைக் கொண்டு மக்களைத் தம்வசப்படுத்தியவர்களின் நடுவே ஓர் இறைக்கொள்கையை முன்வைத்து, படைகளை எதிர்கொண்ட முகமதுநபி, கத்தோலிக்க மத குருமார்களின் ஆதிக்க உணர்வுக்கு எதிராக கிறிஸ்தவ மதத்தில் புதிய பாதை கண்ட மார்ட்டின் லூதர், உயர்குடியில் பிறந்த தனக்கு மட்டும் பிரத்யேகமாக சொல்லிக் கொடுக்கப்பட்ட மந்திரத்தை திருக்கோஷ்டியூர் கோவில் கோபுரத்தின் உச்சியில் ஏறிநின்று அனைத்து மக்களும் கேட்டு புண்ணியம் பெறுமாறு செய்த ராமானுஜர், உருவ வழிபாட்டுக்கு மாற்றாக ஒளி வழிபாட்டை முன்வைத்து சமரச சுத்த சன்மார்க்க நெறி கண்ட வள்ளலார் என காலந்தோறும் பல சீர்திருத்தவாதிகள் உருவாகியிருக்கிறார்கள். அப்போது இந்தளவு ஜனநாயகம் இல்லை, அரசியல் கட்சிகள் எதுவும் இல்லை.
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகின் பல பகுதிகளிலும் ஜனநாயக காற்று மெல்ல வீசத்தொடங்கிய நிலையில், சென்னை -மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் திருப்பணிக்கு பெருந்தொகையை நன்கொடையாக அளித்தும், பிறப்பின் அடிப்படையிலான சாதி ஏற்றத்தாழ்வின் காரணமாக அனுமதி மறுக்கப்பட்ட பிட்டி.தியாகராயர், ஆன்மிக -சமூக உரிமைக்காக முன்னெடுத்த முயற்சியால்தான் நீதிக்கட்சி என்ற அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டது. அதுதான் திராவிட அரசியலின் தொடக்கம். இன்று அந்த திராவிட அரசியலுக்கு எதிராக ஆன்மிக அரசியலை முன்னிறுத்துகிறார்கள். வரலாறு விசித்திரமானது.