Advertisment

மாவலி பதில்கள்

dineshkarthik

லட்சுமிசெங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)

உலகில் குறைந்த செலவில் வாழ்வதற்கான சிறந்த நகரங்களில் சென்னைக்கு ஏழாவது இடமாமே?

Advertisment

உழைத்துக் களைத்து பசியாறுபவர்களுக்கு குறைந்த விலையில் டீக்கடை பன்னும் உண்டு. ஊழல் செய்து பெருத்த தொப்பைகளை நிறைப்பதற்கு ஸ்டார் ஓட்டல் பஃபேவும் உண்டு. வந்தாரை வாழ வைக்கும் தருமமிகு சென்னைக்கு ஏழை-பணக்காரன் என்ற பேதம் கிடையாது. எல்லோருடைய பசியையும் போக்குவதில் சென்னை ஓர் அன்னை.

Advertisment

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்

ஆந்திரா மற்றும் கர்நாடகா சிறையில் ஏராளமான தமிழர்கள் வாடும்போது, ராஜீவ் கொலை வழக்கில் தமிழக சிறையில் வாடும் 7 பேர் விடுதலைக்காக மட்டும் ஏன் இந்தளவு போராட்டம்?

சட்ட நியாயத்தின் அடிப்படையில் எல்லோருடைய விடுதலைக்கான குரலும் ஓங்கி ஒலிக்க வேண்டும். எனினும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் லாப-நட்ட நோக்கங்களை முன்வைத்து சிறைப்படுத்தப்பட்டிருக்கும் 7 பேருக்கான விடுதலைக் குரல் வலுப்பெற்றுள்ளது. வ

லட்சுமிசெங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)

உலகில் குறைந்த செலவில் வாழ்வதற்கான சிறந்த நகரங்களில் சென்னைக்கு ஏழாவது இடமாமே?

Advertisment

உழைத்துக் களைத்து பசியாறுபவர்களுக்கு குறைந்த விலையில் டீக்கடை பன்னும் உண்டு. ஊழல் செய்து பெருத்த தொப்பைகளை நிறைப்பதற்கு ஸ்டார் ஓட்டல் பஃபேவும் உண்டு. வந்தாரை வாழ வைக்கும் தருமமிகு சென்னைக்கு ஏழை-பணக்காரன் என்ற பேதம் கிடையாது. எல்லோருடைய பசியையும் போக்குவதில் சென்னை ஓர் அன்னை.

Advertisment

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்

ஆந்திரா மற்றும் கர்நாடகா சிறையில் ஏராளமான தமிழர்கள் வாடும்போது, ராஜீவ் கொலை வழக்கில் தமிழக சிறையில் வாடும் 7 பேர் விடுதலைக்காக மட்டும் ஏன் இந்தளவு போராட்டம்?

சட்ட நியாயத்தின் அடிப்படையில் எல்லோருடைய விடுதலைக்கான குரலும் ஓங்கி ஒலிக்க வேண்டும். எனினும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் லாப-நட்ட நோக்கங்களை முன்வைத்து சிறைப்படுத்தப்பட்டிருக்கும் 7 பேருக்கான விடுதலைக் குரல் வலுப்பெற்றுள்ளது. வீரப்பன் காட்டுப் பகுதி மலைவாழ் மக்களை சிறைப்படுத்தி சித்ரவதை செய்யும் கர்நாடகத்திடமிருந்தும், செம்மரக் கடத்தல் வழக்கில் கூலித் தொழிலாளர்களை சிறைப்படுத்திய ஆந்திராவிடமிருந்தும் சட்ட நியாயத்தை முன்வைத்து தமிழர்களின் விடுதலையைக் கோரவேண்டியது அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, ஆட்சியாளர்களுக்கு உள்ள கடமையும்கூட.

க.நஞ்சையன், சூனேஸ்வரன்பட்டி, பொள்ளாச்சி

பகுதி நேர அரசியல்வாதி என்ற புதிய ட்ரெண்டை ரஜினி ஆரம்பித்து வைத்துள்ளாரே?

முழுநேர அரசியல்வாதிகள் என்றால் வேறு வேலை இல்லாமல் ஊழல் செய்பவர்கள் என்ற எண்ணம் பொதுமக்களின் மனதில் பதிந்திருப்பதால், அதற்கு மாற்றாக இப்படியெல்லாம் ட்ரெண்டை உருவாக்க வேண்டியிருக்கிறது. ரஜினி, கமலின் வருகையை எதிர்பார்க்கும் தமிழக மக்கள், நல்லகண்ணு-சங்கரய்யா போன்ற முழுநேர அரசியல்வாதிகளின் வரலாற்றை அறிவதில்லை.

மீஞ்சூர் கோதை ஜெயராமன், சென்னை-106

நடிகவேள் எம்.ஆர்.ராதா நடித்த "ரத்தக்கண்ணீர்' படத்தை ரீமேக் செய்தால் கமல், ரஜினி, அஜீத், விஜய், விக்ரம், சூர்யா, விஜய்சேதுபதி இவர்களில் யாரால் ரசிகர்களைக் கவர முடியும்?

ரத்தக் கண்ணீர் என்றாலே எம்.ஆர்.ராதாதான் நம் கண் முன்னால் தோன்றுவார். அந்த இடத்தில் இன்னொருவரைத் தமிழ் ரசிகர்களால் பொருத்திப் பார்க்க முடியாது. எனினும், கன்னடத்தில் உபேந்திரா இதனை முயற்சித்திருக்கிறார். ரத்தக்கண்ணீரை தமிழ் சினிமா காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் ரீ-மேக் செய்ய முயற்சித்தால், சீனியர் நடிகர்களைவிட சின்சியர் நடிகரான விஜய்சேதுபதி பொருந்துவார்.

dineshkarthik

நித்திலா, தேவதானப்பட்டி

அரசியல் விளையாட்டு மட்டும்தான் மாவலிக்குப் பிடிக்குமா?

விளையாட்டுப் போட்டிகளில் உள்ள அரசியலும் பிடிக்கும். அதையெல்லாம் தாண்டி, திறமை வெளிப்படும் விளையாட்டுகள் ரொம்பவே பிடிக்கும். வங்காள தேசத்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியின் கடைசிப் பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் கொஞ்சமும் பதற்றமின்றி சிக்ஸர் அடித்து வெற்றியைத் தொட்டதும், பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.எஸ்.எல். கால்பந்து இறுதி ஆட்டத்தில் சென்னை அணி பெற்ற வெற்றியும் கண்களுக்கு விருந்து.

உமரி. பொ.கணேசன், மும்பை-37

எந்தத் தொழிலும் இல்லாமல் எம்.பி., எம்.எல்.ஏக்களின் சொத்து மதிப்பு வேகமாக வளர்வது எப்படி?

அது ஒன்றுதானே 5 ஆண்டுகாலத் தொழில்.

ஆன்மிக அரசியல்

தூயா, நெய்வேலி

லிங்காயத்துகளை தனி மதமாக கர்நாடக அரசு அறிவித்திருப்பது மத அரசியலா, ஆன்மிக அரசியலா?

மதத்தில் உள்ள ஆன்மிக உரிமையை வலியுறுத்தும் அரசியல். கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நேரத்தில் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா இதனை அறிவித்திருந்தாலும், லிங்காயத்துகள் தங்களை இந்துமதத்திலிருந்து பிரித்து, தனி மதமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுப்பி வருகிறார்கள். வேதம், வர்ணாசிரமம், பார்ப்பனியம் ஆகியவை கடுமையாக ஆதிக்கம் செய்த நிலையில், அதற்கு எதிரான ஆன்மிக வழியை சித்தர்கள், சைவ சித்தாந்தத்தினர் உள்ளிட்டவர்கள் கடைப்பிடித்துள்ளனர். வீரசைவர்கள் என அழைக்கப்படுகிற பிரிவும் உண்டு. இந்த அடிப்படையில்தான் வடக்கு கர்நாடகத்தில் 12-ஆம் நூற்றாண்டில் பசவன்னர் என்பவரின் வழிகாட்டுதல்படி வசனக்காரர்கள் என்ற பிரிவினர் உருவாகி வேத மறுப்பு மரபைக் கடைப்பிடித்தனர்.

பிறப்பின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்படும் சாதி ஏற்றத்தாழ்வுகளைத் தகர்த்தும், ஆண்-பெண் பேதத்தை அகற்றியும் பக்தி ஒன்றையே முதன்மையாகக் கொண்ட லிங்க வழிபாட்டைக் கடைப்பிடித்த இவர்கள் "லிங்காயத்துகள்' எனப் பெயர் பெற்றனர். இவர்களுக்கென கர்நாடகத்திலும் மற்ற தென் மாநிலங்களிலும் மடங்கள் உண்டு. இந்தியாவைப் பொறுத்தவரை பல பிரிவுகளைச் சேர்ந்தவர்களையும் இந்து என ஒற்றை அடையாளத்தில் வைத்துள்ள நிலையில், கர்நாடகாவில் வாழும் 17% லிங்காயத்துகள் தங்களைத் தனிமதமாக அறிவிக்கும் கோரிக்கையில் தேர்தல்நேர அரசியல் சூழலில் மாநில அளவில் வெற்றி பெற்றுள்ளனர். மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு, எப்படி இதை கையாயப்போகிறது என்பது இனி தெரியும்.

Dinesh Karthick
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe