Advertisment

மீனவர்களை விழுங்கும் "கடல் பாம்பு'! -மோடி அரசின் திட்டம்!

fisherman

யாரும் பட்டா போட முடியாது என்ற கடல் கூட கார்ப்பரேட்டின் சொந்தமாகும் காலம் இது. மோடி தலைமையிலான மத்திய அரசின் தனியார்மய முயற்சிகளுக்கு எதிராக, தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க போராட வேண்டிய ஆபத்து அதிகரிக்கிறது. ஆனால், ஆளும் அ.தி.மு.க.வோ தனது அரசை தக்கவைக்க தமிழகத்தையே தாரை வார்க்க தயாராக இருக்கிறது.

Advertisment

modi-fisherman

மத்திய அரசு கொண்டுவந்துள்ள "சாகர்மாலா' என்ற திட்டம் தமிழக மீனவர்களின் வளத்தை அழிப்பது மட்டுமல்ல, மீனவ சமுதாயத்தையே ஒழித்துக்கட்டிவிடும் என்று பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால், மத்திய அரசோ, இந்திய துறைமுகங்கள் அனைத்தையும் சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்கிறது. இதன்மூலம், கடற்கரைப் பகுதிகளில் தொழில் மற்றும் போக்குவரத்து வசதிகள் மேம்படும் என்றும், பழைய மீன்பிடி துறைமுகங்களையும், வணிகத் துறைமுகங்களையும் மேம்படுத்துவதே இலக்கு என்கிறது. இந்தத் திட்டத்திற்காக 80 லட்சம் கோ

யாரும் பட்டா போட முடியாது என்ற கடல் கூட கார்ப்பரேட்டின் சொந்தமாகும் காலம் இது. மோடி தலைமையிலான மத்திய அரசின் தனியார்மய முயற்சிகளுக்கு எதிராக, தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க போராட வேண்டிய ஆபத்து அதிகரிக்கிறது. ஆனால், ஆளும் அ.தி.மு.க.வோ தனது அரசை தக்கவைக்க தமிழகத்தையே தாரை வார்க்க தயாராக இருக்கிறது.

Advertisment

modi-fisherman

மத்திய அரசு கொண்டுவந்துள்ள "சாகர்மாலா' என்ற திட்டம் தமிழக மீனவர்களின் வளத்தை அழிப்பது மட்டுமல்ல, மீனவ சமுதாயத்தையே ஒழித்துக்கட்டிவிடும் என்று பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால், மத்திய அரசோ, இந்திய துறைமுகங்கள் அனைத்தையும் சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்கிறது. இதன்மூலம், கடற்கரைப் பகுதிகளில் தொழில் மற்றும் போக்குவரத்து வசதிகள் மேம்படும் என்றும், பழைய மீன்பிடி துறைமுகங்களையும், வணிகத் துறைமுகங்களையும் மேம்படுத்துவதே இலக்கு என்கிறது. இந்தத் திட்டத்திற்காக 80 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய தீர்மானித்து இருப்பதாக அறிவித்துள்ளது.

seeman,gautham,thirumuragangandhi

Advertisment

வாஜ்பாய் பிரதமராக இருந்த சமயத்தில் பேசப்பட்ட இந்தத் திட்டம், மோடி பொறுப்புக்கு வந்தபிறகு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 2015-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2016, ஜூலை 20-ஆம் தேதி ஆயிரம் கோடி ரூபாய் மூலதனத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அரசின் பங்காக வெறும் 90 கோடி ரூபாய்தான் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தை அமலாக்குவதற்கு, உயர்மட்டக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்து அமைச்சர், நிதி உதவி வழங்கும் மத்திய அமைச்சகங்களின் அமைச்சர்கள், துறைமுகங்கள் அமைந்த மாநில முதல்வர்கள், மாநில துறைமுக அமைச்சர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இந்தத் திட்டத்தின்கீழ் இந்தியாவில் உள்ள 12 துறைமுகங்கள், 1208 தீவுகள் மேம்படுத்தப்படும் என்கிறார்கள். இது நிஜமா? உண்மையில் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படுமா? பிறகு ஏன் மீனவர்கள் இந்தத் திட்டத்தை எதிர்க்கிறார்கள்?

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் கேட்டபோது, மக்களைப் பாதிக்காமல், மண்ணின் இயற்கை வளத்தை சேதப்படுத்தாமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்பே இல்லை என்றார்கள்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நம்மிடம் கூறும்போது, ""இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் அமைப்பை "பீம்ஸ்டெக்' என்று அழைக்கிறார்கள். வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. கடல்வழிப் பாதை, நீர்வழிப்பாதை, சாலை வழி, ரயில் வழி என இணைக்கப்பட்டு, ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் என்கிறார்கள்.

ஏற்றுமதி இறக்குமதி என்றால் எதை ஏற்றுமதி செய்துவிட்டு எதை இறக்குமதி செய்வார்கள் என்பது தெரியவில்லை. வெங்காயத்தையும், வெள்ளைப் பூண்டையும்தான் இறக்குமதி செய்வார்களா? அவற்றை இங்கு உற்பத்தி செய்யமுடியாதா?

மீனவர்களுக்கு துறைமுகம் சார்ந்த பயிற்சி, கடல்சாரா மாற்றுத்திறனுக்கான பயிற்சி, ஏற்றுமதி இறக்குமதிக்கான பயிற்சி கொடுக்கப்படும் என்கிறார்கள். பயிற்சி எனும்போதே, இப்போது இவர்கள் செய்யும் தொழிலை விட்டு விரட்டுவதற்கான வேலையைத்தான் செய்யப்போகிறார்கள் என்பது புரிகிறது. மீன் பிடிப்பதற்கே மீனவர்களைக் கையேந்த வைக்கவே திட்டமிடுகிறார்கள். மக்களைத் திரட்டி இந்தத் திட்டத்தை விரட்டுவோம்'' என்றார் ஆவேசமாக.

"மே 17' இயக்கத்தின் திருமுருகன் காந்தி கூறும்போது, ""பூர்வீக மக்களுக்குச் சொந்தமான கனிமவளங்கள், சிறுதொழில், காடு, விவசாயம், கடல் என ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட் கையில் கொடுப்பதே இவர்களின் திட்டமாக இருக்கிறது. எப்படி காடுகளில் இருந்து பழங்குடி மக்களை அகற்றினார்களோ, விவசாயிகளை எப்படி வெளியேற்றினார்களோ, அப்படி மீனவர்களை வெளியேற்றுவதே இவர்களின் திட்டமாக இருக்கிறது. துறைமுகங்களை தனியார் மயமாக்குவதே இவர்களுடைய நோக்கம். அந்தத் துறைமுகங்களை மோடியின் உறவினர்களும், அமித்ஷாவின் உறவினர்களும்தான் இயக்குவார்கள். அவர்களிடம் தமிழர்கள் கூலிக்காக கையேந்தி நிற்கவேண்டும். இந்தத் திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக நாசம்செய்ய ஆர்.எஸ்.எஸ்., இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி ஆகியவை இணைந்து திட்டமிடுகிறார்கள்''’என்றார் கோபம் தெறிக்க.

இயக்குநர் கௌதமன் கூறும்போது, ""சுருக்கமாகச் சொன்னால் இந்தத் திட்டம் மிகவும் ஆபத்தானது. முழுமையாக எம் மண்ணை அழித்து எங்களை அடிமையாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். அதானிகள் வளர எம் இனம் அழியவேண்டுமா? ஏற்கனவே ஹைட்ரோ கார்பன், மீத்தேன் என்று நிலப்பரப்பை அழித்தார்கள். இப்போ கடல் வளத்தையும் அழிக்க திட்டம் போட்டால் அதை வேடிக்கை பார்க்கமாட்டோம். இந்தத் திட்டத்தை திரும்பப் பெறாவிட்டால், மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்''’என்றார் சூடாக.

"சாகர்மாலா' என்றால் "கடல் மாலை' என அர்த்தம். இது மாலையா, மீனவர்களை விழுங்கும் பாம்பா?

-அ.அருண்பாண்டியன்

படம்: அசோக்

fisherman modi
இதையும் படியுங்கள்
Subscribe