உள்ளத்தில் விளையும் விதைகள்!
சமூகத்திற்கான சத்திய எழுத்துக்குச் சொந்தக்காரர் சு.குமணராசன். "தமிழ் இலெமுரியா' இதழின் ஆசிரியர். அதில், இவர் எழுதிய கட்டுரைகள்தான் "செய் நன் விதைகள்' என்னும் இந்நூல்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/book_5.jpg)
ஜெயலலிதா என்கிற ஓர் அதிகாரச் சொல்லுக்கு கட்சியும் ஆட்சியும் அடிமை சாசனம் நீட்டி மண்டியிட்டுக் கிடந்தது. இன்று இல்லாத ஜெ.வின் வெற்றிடத்தில் பா.ஜ.க. பல்லாங்குழி ஆடுவதையும், பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் மீதான விடுதலை நடவடிக்கைகளையும் பகிர்ந்து, அவருடைய தனித்தன்மையான பாதையின் மைல்கற்களையும் அடுக்குகிறார்.
தமிழன்னைக்கு ஓர் இருக்கை மற்றும் மது என்பது அரசியல் மாநாடுகளுக்கு ஓர் உபாயப் பானமாகவே பயன்படுத்தப்படுகிறது. இவைபோன்ற தாது உப்புக்களான கட்டுரைகள் நம் உணர்வுகளைப் புதுப்பிக்கின்றன.
கேரள அரசு முல்லைப்பெரியாறு நிலைப்பாட்டில் ஒரே அணியாய் செயல்படுகிறது. அந்தப் பண்பு மத்திய அரசுக்கு பல்லக்குத் தூக்குகிற தமிழகத்திடம் இல்லை. ஆபத்துக் காலங்களில் தோள்கொடுத்தாலும் கூட வடகுல மன்னர்களின் பார்வைக்கு தமிழகம் எப்போதும் ஒரு சுண்ணாம்புக் கண்தான்.
பிரதமர் மோடி, "இந்தியப் பொருளாதார குதிரை நொண்டி அடிக்கவில்லை' என்றது, பிறகு "ஆமாம்' போட்டது, பெண்ணுரிமையில் ஆணாதிக்க சாட்டை, காவிரி நீரில் கரையும் இறையாண்மை குறித்தெல்லாம் பேசுகிற ஆசிரியர், ஒவ்வொரு கட்டுரையின் இறுதிப் பின்னலிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு திருக்குறள் எனும் குறுந்தடியால் இரண்டடி போடுவது அறிவான அழகு.
பக்கங்கள்: 304 விலை:ரூ.190
தமிழ் அலை
80/24-பி, பார்த்தசாரதி பேட்டை தெரு,
தேனாம்பேட்டை,
சென்னை-600 086.
தொலைபேசி: 044-2434 0200
-சேரன்குலத்தான்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-03-26/book-n.jpg)