தன்னம்பிக்கையின் நெம்புகோல்!

thairu

"மலைமீது உள்ள பட்டணம் கண்களுக்குப் புலப்படாமல் போகாது' என்கிற விவிலிய வசனத்துக்கு வாசம் கூட்டுவதுபோல், அகழாய்வுக்கான வாழ்க்கைப் பந்தயத்தை நகலெடுத்துப் பேசுகிறது "வாழ்ந்திடச் சொல்கிறேன்' எனும் இந்நூல். ஆசிரியர் தியாரூ.

book"முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் காய்க்கும்போது அதன் தொடர்ச்சியா

"மலைமீது உள்ள பட்டணம் கண்களுக்குப் புலப்படாமல் போகாது' என்கிற விவிலிய வசனத்துக்கு வாசம் கூட்டுவதுபோல், அகழாய்வுக்கான வாழ்க்கைப் பந்தயத்தை நகலெடுத்துப் பேசுகிறது "வாழ்ந்திடச் சொல்கிறேன்' எனும் இந்நூல். ஆசிரியர் தியாரூ.

book"முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் காய்க்கும்போது அதன் தொடர்ச்சியான சூழ்நிலைகள் நம்மை மிரட்டுகின்றன', பக்குவப்பட்ட மனம் பேதங்கள் அறியாது', "பிறருக்கு நாம் கொடுக்கும்போது வாழ்த்துச் சொல்லி கொடுத்திட வேண்டும்' -இப்படியான பழரசப் போதனைகள் வாசிப்பவரை நூலுக்குள் இழுத்து அடிக்கோடிட வைக்கின்றன.

உடலுறுப்புகளின் ஒன்றுபட்ட எழுச்சியே கோபம். ஒவ்வோர் உயிருக்குள்ளும் இயல்பாக விருத்தியாகும் கோபத்தைப் பாவம் என்கிறார் கவிஞர். கோபத்துக்கு தூபம் போடுபவர்கள், கைகலப்பை மூட்டிவிட்டு கலகலப்பாய் இருப்பவர்கள் ஆகியோர் சமாதானத்திற்கு எதிரானவர்கள். கோபத்தை தணியச் செய்வது மிகப்பெரிய தர்மம் என்றெல்லாம் கோபத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை அடையாளப்படுத்துகிறார்.

மௌனம் ஒரு ஞானக்கலை. அற்புதமான ஓர் ஆயுதமும்கூட. நெடுங்கிளையாய் வளரும் பிரச்சினைகளை மாயம் செய்கிறது அமைதி. அமைதியின் தயவில் வாழ்கிறது அன்பின் ரகசியம். இதுபோல வாழ்க்கை சுபிட்சத்துக்கானதை சங்கத்தமிழ் பாடல்கள், இதிகாச கதைகள் வழியே நெறிப்படுத்துகின்றது.

சமூகத்தில் ஊக்கமிழந்தவர்களைத் தட்டிக்கொடுத்து உழைக்கச் சொல்லும் இந்நூல், வலிமையான ஒரு துவக்கத்திற்கான தன்னம்பிக்கை நெம்புகோலை திடமான உற்சாகத்தோடு நீட்டுகிறது.

பக்கங்கள்: 312 விலை: ரூ.300

ஜே.பி.ரூபன் பப்ளிகேஷன்ஸ்,

37, வி.ஜி.பி. செல்வா நகர் விரிவு,

வேளச்சேரி, சென்னை-42

தொலைபேசி: 044-22430964

-சேரன்குலத்தான்

இதையும் படியுங்கள்
Subscribe