""இதற்குத்தான் ஆசைப்பட்டேன்!''
எம்.எல்.ஏ. ஆகவேண்டும், அமைச்சர் ஆகவேண்டும் என்ற ஆசையோடுதான் கந்தர்வக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு வந்தார் குமார். ஆனால், ஒன்றுக்கு இரண்டு முறை எம்.பி. ஆனார். திருச்சி மாநகர் மா.செ. ஆகவேண்டும் என்பது இவரது ஏழாண்டு கனவு. அந்தக் கனவு பத்துநாட்களுக்கு முன் நிறைவேறியது.
திருச்சி மாநகர் மா.செ.யாக பொறுப்பேற்றதும், திருச்சியில் உள்ள 55 வட்டச் செயலாளர்களையும் வரவழைத்தார். தலா ஐயாயிரத்தை கவரில் போட்டுக் கொடுத்தார். பிறகு ""சிலைகளுக்கெல்லாம் மாலை போடப்போறேன், நீங்க உங்க ஏரியாவுல இருந்து தலைக்கு 200 கொடுத்தாவது ஆட்களைக் கூட்டி வரணும்'' என்றார். ""இதுக்குத்தான் கொடுத்தாரா?'' முணுமுணுத்தபடியே சென்றார்கள். அடுத்து, தனக்கு வேண்டிய மலைக்கோட்டை ஐயப்பனையும், அருள்ஜோதியையும் அழைத்து "டாஸ்மாக் பார் மாமூலுக்கு நீங்கதான் பொறுப்பு' என்றாராம்.
""அதெல்லாம் சரி... டி.டி.வி. அணி மா.செ. சீனிவாசன்கிட்ட இருக்கிற நான்கு பார்களை நம்ம கட்சிக்காரர்களிடம் மாத்திக் கொடுங்க'' திருப்ப
""இதற்குத்தான் ஆசைப்பட்டேன்!''
எம்.எல்.ஏ. ஆகவேண்டும், அமைச்சர் ஆகவேண்டும் என்ற ஆசையோடுதான் கந்தர்வக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு வந்தார் குமார். ஆனால், ஒன்றுக்கு இரண்டு முறை எம்.பி. ஆனார். திருச்சி மாநகர் மா.செ. ஆகவேண்டும் என்பது இவரது ஏழாண்டு கனவு. அந்தக் கனவு பத்துநாட்களுக்கு முன் நிறைவேறியது.
திருச்சி மாநகர் மா.செ.யாக பொறுப்பேற்றதும், திருச்சியில் உள்ள 55 வட்டச் செயலாளர்களையும் வரவழைத்தார். தலா ஐயாயிரத்தை கவரில் போட்டுக் கொடுத்தார். பிறகு ""சிலைகளுக்கெல்லாம் மாலை போடப்போறேன், நீங்க உங்க ஏரியாவுல இருந்து தலைக்கு 200 கொடுத்தாவது ஆட்களைக் கூட்டி வரணும்'' என்றார். ""இதுக்குத்தான் கொடுத்தாரா?'' முணுமுணுத்தபடியே சென்றார்கள். அடுத்து, தனக்கு வேண்டிய மலைக்கோட்டை ஐயப்பனையும், அருள்ஜோதியையும் அழைத்து "டாஸ்மாக் பார் மாமூலுக்கு நீங்கதான் பொறுப்பு' என்றாராம்.
""அதெல்லாம் சரி... டி.டி.வி. அணி மா.செ. சீனிவாசன்கிட்ட இருக்கிற நான்கு பார்களை நம்ம கட்சிக்காரர்களிடம் மாத்திக் கொடுங்க'' திருப்பிச் சொன்னார்களாம்.
-ஜெ.டி.ஆர்.
""நடத்திக் காட்னம்ல!''
அ.தி.மு.க.வினர் இதுவரை, தங்கள் செயல்வீரர்கள் கூட்டங்களையும், மற்ற ஆலோசனைக் கூட்டங்களையும் தனியார் திருமண மண்டபங்களில்தான் நடத்திக்கொண்டிருந்தார்கள். இப்போது அரசு அலுவலகங்களிலேயே நடத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
கூட்டுறவு சங்கங்களில், தேர்தல் வாயிலாக யார், யாருக்கு என்னென்ன பொறுப்புகள் என்பதைப் பற்றி ஆலோசனை செய்வதற்கான கூட்டத்தை ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலேயே நடத்தினார் அ.தி.மு.க. ரிஷிவந்தியம் ஒ.செ. அருணகிரி.
காரசாரமான இரண்டுமணி நேரக் கூட்டம். இருநூறுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்துகொண்ட கூட்டம். ஒன்றிய ஆணையரும் அலுவலர்களும் வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்தனர். கூட்டத்தை அ.தி.மு.க.வினரே படம் பிடித்து வாட்ஸ்ஆப்களிலும் ஃபேஸ்புக்குகளிலும் போட்டு தங்கள் சாதனையை, துணிச்சலை பகிரங்கப்படுத்திக்கொண்டார்கள்.
-எஸ்.பி.சேகர்
""யோ! நான் அமைச்சருய்யா!''
ஜெ. பிறந்தநாளை முன்னிட்டு 120 ஜோடிகளுக்கு, முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் இலவச திருமணம் நடந்தது.
விழா ஏற்பாடுகளைச் செய்த வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், முதலமைச்சரை வரவேற்பதற்காக இளைஞரணியினரை ஸ்போர்ட்ஸ் டிரஸ்ஸில் வரிசையாக நிற்கவைத்ததோடு, தானும் ஸ்போர்ட்ஸ் டிரஸ் அணிந்து நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கோவை எஸ்.பி. தர்மராஜ், ""இங்கே யாரும் நிற்கக்கூடாது... கிளம்புங்க, கிளம்புங்க'' சத்தம் போட்டார்.
""நான் மினிஸ்டர் உதயகுமார். சார்... என்னையே வெளியே போகச் சொல்றீங்களே... சி.எம்.மை வரவேற்கத்தான் நாங்க நிக்கிறோம்'' அமைச்சர் சொன்னார். இதை கோவை எஸ்.பி. காதில் வாங்கவேயில்லை. ""யோவ்... ஒருதரம், ரெண்டுதரம் சொன்னா தெரியாது? கிளம்பு... கிளம்பு...'' எஸ்.பி. சூடாகச் சத்தம் போட்டார்.
""என்னய்யா எஸ்.பி. நீ? ஒரு மினிஸ்டரை அடையாளம் தெரியாம? நீ வெளியே போய்யா?'' அமைச்சர் பதிலுக்கு கோபத்தைக் கொட்டினார். அந்தநேரம் அங்கே வந்த ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ், கோவை எஸ்.பி.யின் கையைப் பிடித்து "வாங்க... வாங்க...' என்றபடி இழுத்துச்சென்றார்.
-அண்ணல்
""தேர்வு எழுத விடு!''
திருவண்ணாமலை மாவட்ட செய்யாறு நகரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் முக்கூர் தணிகைமலை. வறுமையின் காரணமாக பெட்ரோல் பங்க்கிலும் வேலை செய்தார்.
கல்லூரிக்கு வருகைப் பதிவு மிகவும் குறைவாக இருந்ததால், மே மாத பொதுத்தேர்வுக்கான கட்டணத்தை வாங்க மறுத்துவிட்டது கல்லூரி. துறைத் தலைவர், கல்லூரி முதல்வர் என பலரையும் பார்த்தார் மாணவர் தணிகைமலை. எல்லோரும் கையை விரித்துவிட்டார்கள். மனமுடைந்த அந்த மாணவர், 27-03-2018 அன்று தன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
28-03-2018 அன்று கல்லூரிக்கு வந்த மாணவர்கள், தணிகைமலையின் சாவுக்கு நியாயம் கேட்டும், இப்படி இனி யாரும் சாகக்கூடாது என்றும் போராடினார்கள். கல்லூரியின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியதும் செய்யாறு டி.எஸ்.பி. குணசேகரன் தலைமையில் போலீஸ் வந்தது. அதன் பிறகே பொறுப்பு முதல்வர் வந்தார். ""வருகைப் பதிவு குறைவாக உள்ளவர்கள் மருத்துவரிடம் சான்றிதழ் வாங்கிவந்தால், இயக்குநரகத்தில் சொல்லிப் பரிசீலிக்கிறோம்'' என்று மாணவர்களோடு சமாதானமானார்.
-து.ராஜா
""இவருக்காக ஏனுங்க தீ மிதிக்கணும்?''
சத்தியமங்கலம் அருகிலுள்ள பண்ணாரி அம்மன் கோயில் பூக்குழித் திருவிழா புகழ்மிக்கது. பங்குனி மூன்றாம் செவ்வாயில் நடக்கும் பண்ணாரி அம்மன் கோயில் பூக்குழியில் லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக இறங்குவர்.
"அம்மா ஆட்சி நீடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க. அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆயிரக்கணக்கில் பூக்குழி இறங்குவார்கள். கடந்த ஆண்டுகூட எம்.பி. சத்தியபாமா உட்பட ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் இறங்கினர்.
இந்த வருடம் 3-4-18 அன்று பண்ணாரி அம்மன்கோயில் திருவிழா. பக்தர்கள் லட்சக்கணக்கில் பூக்குழி இறங்கினர். ஆனால் அ.தி.மு.க.வினர் எவரும் இறங்கவில்லை. ஏன்? அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் கேட்டோம்.
"அம்மாவுக்காக நேர்த்திக்கடன் வைப்போம்; தீ மிதிப்போம். ஆனால் எடப்படிக்காகவும், எடப்பாடி ஆட்சிக்காகவும் ஏனுங்க தீ மிதிக்கணும்?'' எரிச்சலோடு சொன்னார்கள்.
-ஜீவாதங்கவேல்