Advertisment
kuthoo

பத்து நிமிடக் கூட்டம்!

கோவை புறநகர் வடக்கு மாவட்டத்தில், தி.மு.க.வின் கொடியேற்றுவிழா மற்றும் ஈரோடு மண்டல மாநாட்டிற்கான விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.

Advertisment

ramachandran

மூன்றுமணி நேரம் நடந்திருக்க வேண்டிய கூட்டம் பத்து நிமிடத்தில் முடிந்துவிட்டது. சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்த குன்னூர் முபாரக், ""எதுக்காக இவ்வளவு தூரம் நம்மை அலையவிட்டார்கள்?'' என்று வழிச் செலவுக்குக்கூட வகையின்றி, சிரமப்பட்டுப்போனார்.

Advertisment

கூட்டம், கூட்டமின்றி முடிக்கப்பட்டதற்கு காரணம் என்ன?

""பெரியநாயக்கன்பாளையத்தின் முன்னாள் பேரூராட்சித் தலைவராக இருந்த கூடலூர் அறிவரசு, 18 வார்டுகளிலும் தி.மு.க.வுக்கு எதிராக சுயேச்சைகளை நிறுத்தி வேலை செய்தவர். அப்படிப்பட்ட அறிவரசுவுக்கு தி.மு.க.வில் பொறுப்பு கொடுத்து இந்தக் கூட்டத்திற்கு முன்னிலை வகிக்க வைத்தார் மாவட்டச் செயலாளர் இராமச்சந்திரன். இதை விரும்பாத பேரூர் கழகச் செயலாளர்கள் 18 பேரும் கழக சீனியர்களும் கூட்டத்தை புறக்கணித்துவிட்டோம்'' என்றார், வேதனையோடு ஒரு சீனியர் உடன்பிறப்பு.

-அருள்குமார்

கூட்டம் நடத்தக்கூடாதா?

வரலாற்றுப் ப

பத்து நிமிடக் கூட்டம்!

கோவை புறநகர் வடக்கு மாவட்டத்தில், தி.மு.க.வின் கொடியேற்றுவிழா மற்றும் ஈரோடு மண்டல மாநாட்டிற்கான விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.

Advertisment

ramachandran

மூன்றுமணி நேரம் நடந்திருக்க வேண்டிய கூட்டம் பத்து நிமிடத்தில் முடிந்துவிட்டது. சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்த குன்னூர் முபாரக், ""எதுக்காக இவ்வளவு தூரம் நம்மை அலையவிட்டார்கள்?'' என்று வழிச் செலவுக்குக்கூட வகையின்றி, சிரமப்பட்டுப்போனார்.

Advertisment

கூட்டம், கூட்டமின்றி முடிக்கப்பட்டதற்கு காரணம் என்ன?

""பெரியநாயக்கன்பாளையத்தின் முன்னாள் பேரூராட்சித் தலைவராக இருந்த கூடலூர் அறிவரசு, 18 வார்டுகளிலும் தி.மு.க.வுக்கு எதிராக சுயேச்சைகளை நிறுத்தி வேலை செய்தவர். அப்படிப்பட்ட அறிவரசுவுக்கு தி.மு.க.வில் பொறுப்பு கொடுத்து இந்தக் கூட்டத்திற்கு முன்னிலை வகிக்க வைத்தார் மாவட்டச் செயலாளர் இராமச்சந்திரன். இதை விரும்பாத பேரூர் கழகச் செயலாளர்கள் 18 பேரும் கழக சீனியர்களும் கூட்டத்தை புறக்கணித்துவிட்டோம்'' என்றார், வேதனையோடு ஒரு சீனியர் உடன்பிறப்பு.

-அருள்குமார்

கூட்டம் நடத்தக்கூடாதா?

வரலாற்றுப் புகழ்மிக்க வேலூர் கோட்டையும், சுற்றியுள்ள அகழியும், பூங்காக்களும் மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், மாநாடு, அரசு நிகழ்ச்சிகள், பிரமாண்ட பொருட்காட்சிகள் நடத்துவதற்கு, அண்ணாசாலைக்கு எதிரே கோட்டையின் நுழைவுவாயில் அருகேயுள்ள மைதானத்தில் தொல்பொருள் துறையிடம் பணம் கட்டி, அனுமதி பெற்று இதுவரை நடத்திக்கொண்டிருந்தார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த மைதானத்தில் பொருட்காட்சி நடத்துவதற்கு, ஒருவர் அனுமதி கேட்டிருக்கிறார். கட்டணத்தையும் கட்டணத்திற்கு பல மடங்கு அதிகமாக லஞ்சமும் கேட்டிருக்கிறார் அதிகாரி. அனுமதி கேட்டவர் கோர்ட்டுக்குப் போனார். கோர்ட் விசாரித்து முடிக்குமுன் அவருடைய ஆயுள் முடிந்துவிட்டது. அதிலிருந்து யாருக்கும் மைதானத்தை தர மறுத்தார்கள். இப்போது அந்த மைதானத்தை பூங்காவாக்க முடிவெடுத்திருக்கிறது தொல்பொருள் துறை.

""எங்களால் இந்த காலி இடத்தை பராமரிக்க முடியவில்லை. அதனால்தான் பூங்காவாக்க முயற்சிக்கிறோம்'' என்கிறார்கள் தொல்பொருள் துறை அதிகாரிகள்.

""கூட்டம் நடத்துவதற்கு வேலூர் மாநகரில் வேறு இடமில்லை. பூங்கா அமைக்காமல் இங்கே கூட்டம் நடத்த மீண்டும் அனுமதி வேண்டும்'' என்று ஆளுநரிடம் மனு கொடுத்திருக்கிறார் வேலூர் எம்.எல்.ஏ. தி.மு.க. கார்த்திகேயன்.

-து.ராஜா

kuthoo

நாற்காலிகள் உடைப்புக் கூட்டம்!

விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வின் கூட்டுறவு சங்க தேர்தலில் பங்கெடுப்பது பற்றிய ஆலோசனைக் கூட்டம் அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

எம்.பி.யும் மா.செ.யுமான லட்சுமணன், அமைச்சர் சண்முகம், ஆரணி எம்.பி. ஏழுமலை, எம்.எல்.ஏ. சக்கரபாணி, ஒ.செ.க்கள், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆலோசனைகள் தாராளமாக பெருகிக்கொண்டிருந்த நேரத்தில், விக்கிரவாண்டி எம்.ஜி.ஆர். இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ் எழுந்து, உரத்த குரலில் ""தேர்தலுக்கு வேலை செய்ய, கூட்டம் சேர்க்க, போஸ்டர் ஒட்ட, விளம்பரம் எழுதுறதுக்கு எங்களைக் கூப்பிட்டு ஆலோசனை சொல்ற நீங்க, சத்துணவு, அரசு வேலைகளுக்கு மட்டும் எங்களுக்கு சிபாரிசு செய்றதில்லை. பணம்... பணம்... பணம்னு அலையிறீங்க'' இடித்துரைத்தார். அப்புறமென்ன...?

வாக்குவாதம்... நாற்காலிகள் உடைப்பு என கலவரமானது. அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சமாதானமெல்லாம் எடுபடவில்லை. போலீஸ் படை வந்த பிறகுதான் அமளி அடங்கி, கூட்டம் கலைந்தது.

-எஸ்.பி.சேகர்

விபத்துகளைத் தடுக்க யாகம்!

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கான மருத்துவமனையை, பழைய மருத்துவமனையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள மஞ்சுவாடியில் கடந்த ஆண்டு கட்டித் திறந்தார்கள். அதனால் தொண்டைமான் கட்டிய பழைய மருத்துவமனையையும், ராணி மகப்பேறு மருத்துவமனையையும் இழுத்து மூடிவிட்டார்கள்.

புதிய மருத்துவமனைக்கு நோயாளிகளை, உறவினர்களை, பணியாளர்களை ஏற்றிச் செல்லும் நகரப் பேருந்துகள், மருத்துவமனை நுழைவுவாயிலில் உள்ள தூணில் மோதி விபத்துக்குள்ளாவதும், பயணிகளுக்கும் ஓட்டுநர்-நடத்துநர்களுக்கும் காயம் ஏற்படுவதும் சர்வசாதாரணமாகிவிட்டது.

""இந்தப் புது மருத்துவமனையில் நோயாளிகளின் சாவும் அதிகமாகிவிட்டது. விபத்துகளும் அதிகமாகிவிட்டன. அதனால் ஒரு யாகம் நடத்தினால் நன்றாக இருக்கும் என மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. இந்தச் சிறப்பு யாகத்துக்கு அமைச்சரும் கலெக்டரும் வருவதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்'' என்கிறார் மருத்துவமனை பணியாளர்கள்.

""அட... நுழைவுவாயில்ல டைல்ஸை எடுத்துட்டு தார்ரோடு போடச் சொல்லுங்கய்யா... கிரிப் இல்லாமத்தான் பிரேக் பிடிக்கமாட்டேங்குது'' என்கிறார்கள் ஓட்டுநர்கள்.

-செம்பருத்தி

கூட்டிப் பெருக்கும் ஆசிரியர்கள்!

புதுச்சேரி மாநிலம் திருபுவனம் அருகிலுள்ள பி.எஸ்.பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவன் வேல்முருகன், வகுப்பறையில் தூங்கியது தெரியாமல் அறையை பூட்டிவிட்டுப் போய்விட்டார் ஆசிரியை.

ஊடகங்களில் இச்செய்தி பெரிதானதும் வகுப்பாசிரியை கலைவாணியையும் தலைமை ஆசிரியை இந்திராவையும் பணியிடை நீக்கம் செய்தது கல்வித்துறை.

இச்சம்பவத்தை முன்னிறுத்தி கல்வித்துறை அலுவலகம் அருகில் மொட்டையடித்து நூதனப் போராட்டம் நடத்தியது பா.ஜ.க.

""புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் சுகாதாரப் பணியாளர், காவலருக்கான சுமார் 250 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதனால் காவலர் வேலைகளை, சுகாதாரப் பணியாளர் வேலைகளை ஆசிரியர்களே செய்ய வேண்டியுள்ளது. பணிச்சுமையை அதிகமாக்கிவிட்டு எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்வது சரியான தீர்வாகாது'' என்பதுதான் புதுச்சேரி பா.ஜ.க.வினர், ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக வைக்கும் குற்றச்சாட்டு.

-சுந்தரபாண்டியன்

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe