Advertisment
deepa

ஜெய்ஆனந்த்தை ஏமாற்றிய தில்லாலங்கடி!

jaianandசென்னை திருவொற்றியூரில் ஒரு தொண்டு நிறுவனம், திவாகரன் மகன் ஜெய்ஆனந்த்தின் போஸ் அறக்கட்டளையை அணுகியது. ஏழை மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றவுடன் ஜெய்ஆனந்த் ஐந்து லட்ச ரூபாய் ஒதுக்கி துணிமணிகள் மற்றும் விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுத்தார். உடனே ஜெய்ஆனந்த், திவாகரன் என்ற பெயரில் பேனர் எல்லாம் அடித்து விழா ஏற்பாடுகள் செய்தார்கள். ஜெய்ஆனந்த் ஆட்கள் அந்த விழா நடக்கும் இடத்திற்குப் போய் பார்த்தபோது ஜெய்ஆனந்த் பெயரைவிட தி.மு.க. பிரமுகரான கே.பி.பி.சாமி பெயர் அதிக இடங்களில் காணப்பட்டது. தி.மு.க. பிரமுகருடன் விழாவில் பங்கேற்கக்கூடாது என ஜெய்ஆனந்த் திரும்பிவிட்டார். பிறகு விசாரித்ததில், ஜெய்ஆனந்த்துடன் கே.பி.பி.சாமி போன்ற பிரமுகர்களிடமும் நன்கொடை வாங்கி, விழா என்ற பெயரில்... "கும்மியடிக்கும் கும்பல் நடத்தும் விழா' அது என தெரிந்தவுடன் ஜெய்ஆனந்த் நொந்துபோனார். ஆனாலும் வாங்கிய பொருட்களை அவர்களுக்கே கொடுத்துவிடுமாறு சொல்லிவிட்டார் ஜெய்ஆனந்த்.

-தாமோதரன் பிரகாஷ்

கோபத்தைக் காட்டிய தீபா!

Advertisment

deepaஎம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவைத் தலைவி தீபா, கட்

ஜெய்ஆனந்த்தை ஏமாற்றிய தில்லாலங்கடி!

jaianandசென்னை திருவொற்றியூரில் ஒரு தொண்டு நிறுவனம், திவாகரன் மகன் ஜெய்ஆனந்த்தின் போஸ் அறக்கட்டளையை அணுகியது. ஏழை மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றவுடன் ஜெய்ஆனந்த் ஐந்து லட்ச ரூபாய் ஒதுக்கி துணிமணிகள் மற்றும் விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுத்தார். உடனே ஜெய்ஆனந்த், திவாகரன் என்ற பெயரில் பேனர் எல்லாம் அடித்து விழா ஏற்பாடுகள் செய்தார்கள். ஜெய்ஆனந்த் ஆட்கள் அந்த விழா நடக்கும் இடத்திற்குப் போய் பார்த்தபோது ஜெய்ஆனந்த் பெயரைவிட தி.மு.க. பிரமுகரான கே.பி.பி.சாமி பெயர் அதிக இடங்களில் காணப்பட்டது. தி.மு.க. பிரமுகருடன் விழாவில் பங்கேற்கக்கூடாது என ஜெய்ஆனந்த் திரும்பிவிட்டார். பிறகு விசாரித்ததில், ஜெய்ஆனந்த்துடன் கே.பி.பி.சாமி போன்ற பிரமுகர்களிடமும் நன்கொடை வாங்கி, விழா என்ற பெயரில்... "கும்மியடிக்கும் கும்பல் நடத்தும் விழா' அது என தெரிந்தவுடன் ஜெய்ஆனந்த் நொந்துபோனார். ஆனாலும் வாங்கிய பொருட்களை அவர்களுக்கே கொடுத்துவிடுமாறு சொல்லிவிட்டார் ஜெய்ஆனந்த்.

-தாமோதரன் பிரகாஷ்

கோபத்தைக் காட்டிய தீபா!

Advertisment

deepaஎம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவைத் தலைவி தீபா, கட்சிப் பொதுக்கூட்டத்திற்காக 2-3-18 அன்று திருப்பூருக்கு வந்தார். மறுநாள் ஈரோட்டுக்கு வந்து தனியார் ஹோட்டலில் தங்கினார். புறநகர் மா.செ. சரவணகுமாரை அழைத்து, ""பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்'' என்றார். நினைத்தவுடன் என்னால ஏற்பாடு செய்ய முடியாது என்று மறுத்துவிட்டார் அவர். 6-3-18 வரை ஈரோட்டில் தங்கிய தீபா, துணிக்கடைகள், உறவினர் வீடு, பண்ணாரி அம்மன் கோயில் என சுற்றிப் பார்த்தார்.

அங்கே தொண்டர்கள், நிர்வாகிகளுடன் வந்த மா.செ. சரவணகுமார், ""மேடம்.... எல்லாரும் உங்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள்'' என்றார். ""பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யாத உங்களோடு போட்டோ எடுத்துக்கொள்ள மாட்டேன்'' என்று தீபா மறுத்துவிட்டார். ""உங்களால் 45 லட்சத்தை இழந்துவிட்டேன். நானும் தொண்டர்கள் ஐயாயிரம் பேரும் உங்கள் கட்சியில் இருந்து விலகிக்கொள்கிறோம்'' என்றார் சரவணக்குமார். ""அதைச் செய்ங்க'' கோபமாகக் கூறிவிட்டு... ஆயில்ராஜா, வக்கீல் சாமி, சின்னப்பிள்ளை ஆகியோருடன் கிருஷ்ணகிரிக்கு கிளம்பினார் தீபா.

-ஜீவாதங்கவேல்

தி.மு.க. -அ.தி.மு.க. ஒற்றுமை!

கள்ளக்குறிச்சி தொகுதியின் எம்.பி., அ.தி.மு.க. காமராஜ். இதற்கு உட்பட்ட ரிஷிவந்தியம் தொகுதியின் எம்.எல்.ஏ., தி.மு.க. வசந்தன் கார்த்தி. ரிஷிவந்தியத்திற்கு உட்பட்ட தத்தனூர், பாசார், கீழ்ப்பாடி, பேரால், அவரியூர், நூரோலை, சிங்காரபேட்டை, பள்ளிப்பட்டு, இளையனார்குப்பம், எருத்தனூர், சிவபுரம், அரும்பராம்பட்டு ஆகிய கிராமங்களை இணைக்கும் சாலைத் திட்டத்திற்கு மத்திய அரசு 18 லட்ச ரூபாய் ஒதுக்கியது. இந்நிதி தனது முயற்சியால் கிடைத்தது என போஸ்டர் அடித்தார் தி.மு.க. எம்.எல்.ஏ. வசந்தன் கார்த்தி. ""இல்லை... இல்லை... இந்த நிதியை கொண்டு வந்தது நான்தான்'' என்றார் எம்.பி. காமராஜ். ""போட்டி போடவேண்டாம். இருவருமே விழாவில் கலந்துகொள்ளுங்கள்'' என்றது அதிகாரிகள் தரப்பு. அப்படியே இருவரும் மேடையேறினார்கள். கை குலுக்கிக் கொண்டார்கள். இதைப்பார்த்து இரண்டு கட்சிக்காரர்களும் வியக்கிறார்கள்!

-எஸ்.பி.சேகர்

சான்றிதழ் கேட்கும் பிராமணர்!

Advertisment

தமிழகத்தில் அனைத்து சாதியினருக்கும் சாதிச் சான்று வழங்கும் அரசு, பிராமண சமுதாயத்தினருக்கு மட்டும் வழங்குவதில்லை எனக் கூறி சென்னை -கொட்டிவாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் அருணகிரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கான தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆவணத்தையும் தாக்கல் செய்தார். சாதிகள் பட்டியலில் பிராமணர் சாதியையும் சேர்த்து சாதிச்சான்று வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, பிராமணர்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு நான்கு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டது.

-சி.ஜீவா பாரதி

புத்தகம் விற்றால் குண்டாஸ்!

tamilanbabuராஜீவ் கொலை, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் என சில புத்தகங்களை எழுதியுள்ளார் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் வசிக்கும் தமிழன்பாபு. இப்புத்தகங்களோடு பிரபாகரன் படம், பிரபாகரன் படம் போட்ட டைரிகள், காலண்டர்களை ஊர் ஊராகக் கொண்டுசென்று விற்பனை செய்வதுதான் தமிழன்பாபுவின் தொழில். 2-03-18 அன்று மயிலாடுதுறையில் நடந்த பழ.நெடுமாறன் கூட்டத்தில் விற்பனை செய்துவிட்டு கிளம்பியவரை பேருந்துநிலையத்தில் கைது செய்து, போளூர் போலீசாரிடம் ஒப்படைத்தார்கள் க்யூ பிராஞ்ச் போலீசார்.

6-03-18 அன்று ஜாமீனில் வெளியே வந்த தமிழன்பாபு, ""ஒரு பெரிய தீவிரவாதியை கைது செய்வதுபோல, நாற்பது போலீசார் சூழ்ந்து நின்று என்னை கைது செய்து வேனில் ஏற்றினார்கள். இதுவரை மூன்று வழக்குகள் பதிவாகியுள்ளன. இன்னொரு வழக்குப் பதிவு செய்தால் குண்டாஸில் போட்டுவிட திட்டமிடுகிறது போலீஸ்'' என்கிறார்.

-து.ராஜா

mo-mla

வக்கீல்களோடு மோதும் எஸ்.ஐ.!

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல்நிலையம்.

வக்கீல் பெரியசாமி: அய்யா! நிலத்தை ஆக்கிரமிச்சு வேலி போட்டுட்டான். எஃப்.ஐ.ஆர். போட்டு நடவடிக்கை எடுங்கய்யா.

எஸ்.ஐ. சுந்தரம்: நீரு வக்கீலு. நீரு சொல்லிட்டா ஒடனே எஃப்.ஐ.ஆர். போடணுமோ? வக்கீல்னா ஸ்டேஷனுக்கு வெளியே வச்சுக்கணும்.

பிரச்சினை பெரிதானது. கைகலப்பு ஏற்பட்டது; தாக்கிக்கொண்டார்கள். இருவரின் முகங்களிலும் ரத்தம் வழிந்தது; கட்டிப் புரண்டார்கள்.

சற்று நேரத்தில் காவல்நிலையத்திற்கு வக்கீல்கள் திரண்டு வந்தார்கள். அதே நேரத்தில் டி.எஸ்.பி. பாலச்சந்திரனும் வந்தார். எஸ்.ஐ. சுந்தரம் மீதும், உயர்நீதிமன்ற வக்கீல் பெரியசாமி மீதும் எஃப்.ஐ.ஆர். போட்டார்.

இதே மாதிரி போன மாதமும் எஸ்.ஐ. சுந்தரத்திற்கும் வேறொரு வக்கீலான சேவியர் சுதாகருக்கும் பிரச்சினையாகி தட்டார்மடம் காவல்நிலையம் ரணகளப்பட்டதாம்.

-பரமசிவன்

Deepa jai anand
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe