அன்புநாதன் இல்ல விழாவில் வி.ஐ.பி.கள்!
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோடி கோடிகளை ஆம்புலன்சில் கடத்தி, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் கரூர் அன்புநாதன். அமைச்சர்களுக்கு வெளிநாட்டுக் கரன்ஸியை மாற்றிக்கொடுக்கும் பணியை வெற்றிகரமாகச் செய்தவர். கட்சி பேதமின்றி அனைத்துக்கட்சி பிரமுகர்களுக்கும் தேர்தல் செலவுக்குப் பணம் கொடுத்தவர்.
வருமானவரித்துறை, உளவுத்துறை, அமலாக்கத்துறை என்று பல துறைகளின் ரெய்டால் தலைமறைவு வாழ்க்கை நடத்திய அன்புநாதன், சமீபத்தில் வெளியே வந்தார். கரூரில் மிகப்பெரிய மண்டபத்தில் தனது அக்கா மகன் நவீன் திருமணத்தை நடத்தினார். மணமகனுக்கு பி.எம்.டபுள்யூ கார் அளித்தார். டி.ராஜேந்தர், காங்கிரஸ் மாநில செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி, ரிட்டயர்டு காவல்துறை அதிகாரி ராம.சுப்பிரமணியன் உட்பட ஏராளமான வி.ஐ.பி.கள் ஆஜரான அன்புநாதன் இல்லத் திருமணத்திற்காக, போஸ்டர் அடித்து கரூர் முழுக்க ஒட்டி அசத்தினார்கள் டி.ராஜேந்தர் ரசிகர் மன்றத்தினர்.
-ஜெ.டி.ஆர்.
கட்சி ஆபீஸான கழிப்பறை!
"வீட்டுக்கு வீடு கழிப்பறை கட்டுங்கள்' என்ற பிர
அன்புநாதன் இல்ல விழாவில் வி.ஐ.பி.கள்!
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோடி கோடிகளை ஆம்புலன்சில் கடத்தி, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் கரூர் அன்புநாதன். அமைச்சர்களுக்கு வெளிநாட்டுக் கரன்ஸியை மாற்றிக்கொடுக்கும் பணியை வெற்றிகரமாகச் செய்தவர். கட்சி பேதமின்றி அனைத்துக்கட்சி பிரமுகர்களுக்கும் தேர்தல் செலவுக்குப் பணம் கொடுத்தவர்.
வருமானவரித்துறை, உளவுத்துறை, அமலாக்கத்துறை என்று பல துறைகளின் ரெய்டால் தலைமறைவு வாழ்க்கை நடத்திய அன்புநாதன், சமீபத்தில் வெளியே வந்தார். கரூரில் மிகப்பெரிய மண்டபத்தில் தனது அக்கா மகன் நவீன் திருமணத்தை நடத்தினார். மணமகனுக்கு பி.எம்.டபுள்யூ கார் அளித்தார். டி.ராஜேந்தர், காங்கிரஸ் மாநில செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி, ரிட்டயர்டு காவல்துறை அதிகாரி ராம.சுப்பிரமணியன் உட்பட ஏராளமான வி.ஐ.பி.கள் ஆஜரான அன்புநாதன் இல்லத் திருமணத்திற்காக, போஸ்டர் அடித்து கரூர் முழுக்க ஒட்டி அசத்தினார்கள் டி.ராஜேந்தர் ரசிகர் மன்றத்தினர்.
-ஜெ.டி.ஆர்.
கட்சி ஆபீஸான கழிப்பறை!
"வீட்டுக்கு வீடு கழிப்பறை கட்டுங்கள்' என்ற பிரச்சாரம் தீவிரமாகிக்கொண்டிருக்கிறது. சென்னையில் ஐஸ்ஹவுஸ் ஏரியாவில் என்.கே.டி. பள்ளிக்கு அருகில் வஃக்ப் வாரியத்திற்கு முன்பு மாநகராட்சி கட்டியிருந்த கழிப்பறையை தங்கள் அ.தி.மு.க. கட்சி அலுவலகமாக மாற்றிவிட்டார்கள் 116-வது வட்ட முன்னாள் வ.செ. தேனப்பனும், முன்னாள் கவுன்சிலர் பி.எஸ்.வாசனும்.
வஃக்ப் வாரியம் புகாருக்கு மேல் புகாராகக் கொடுத்தது. பதிலளித்த மாவட்ட வருவாய் அலுவலர், ""ஆமாம், அந்த இடம் மாநகராட்சியின் சொந்த இடம். இப்போதும் அங்கே கழிப்பறைதான் இருக்கிறது'' கண்ணைத் திறந்துகொண்டே சான்றிதழ் அறிக்கை கொடுத்தார்.
விசாரணைக்காக ஸ்பாட்டுக்கு வந்த ஆர்.டி.ஐ., பி.டி.ஓ., ஏ.சி. என எல்லாரும் ""கழிப்பறையை கழிப்பறையாக உபயோகப்படுத்தவேண்டும், இப்படி கட்சியின் ஆபீஸ் ஆக்கக்கூடாது'' என்று எவ்வளவோ எடுத்துச் சொன்னார்கள். முன்னாள் வ.செ.யும் முன்னாள் கவுன்சிலரும் காலிசெய்ய முடியாது என்று கூறிவிட்டார்கள். காலி செய்ய வந்தவர்களும் "சரி' என்று போய்விட்டார்கள்.
-அருண்பாண்டியன்
எங்கேயும் எப்போதும்!
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தினகரன் அணி நிர்வாகிகள் கூட்டம் வந்தவாசி ராஜா மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு வந்த மா.செ. போளூர் ஏழுமலை, தே.மு.தி.க.வில் இருந்து வந்த ஜாபர் என்பவரைக் காட்டி ""இனிமேல் இவர்தான் புதிய ந.செ.'' என்று அறிவித்தார்.
ந.செ.யாக இருந்த செந்தில்குமார், தினகரனின் தளபதியான தங்க தமிழ்ச்செல்வனின் உறவினர். அவருடைய ஆணையால் ந.செ.யானவர். ஆனால் நிறைய பணம் வாங்கிக்கொண்டு நிர்வாகிகளை நியமிக்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் வந்ததால்தான் அவரை நீக்கிவிட்டு ஜாபரை நியமித்தார் மா.செ.ஜாபர்.
புதிய ந.செ.யை நியமித்துவிட்டுக் கிளம்பிய போளூர் ஏழுமலையை வழிமறித்த செந்தில்குமார், ""என்னை மாற்றுவதற்கு நீ யார்?'' என்றரீதியில் மிகச்சூடாகப் பேசினார். திக்கித் திணறிய மா.செ. ""இல்லப்பா... நீயே ந.செ.யா இருந்துக்க... நீயே பார்த்துக்க...'' என்று கூறிவிட்டுப் போனார் மா.செ.
-து.ராஜா
தனிப்பெருங் கருணை!
நெய்வேலியில் தனியார் பள்ளி +2 மாணவர் மொனீஷ்ஹென்றியை அதே பள்ளியில் அதே வகுப்பில் பயிலும் வடகுத்து கிராம வினோத்தும், இவரது நண்பர்களான கல்லூரி மாணவர்கள் ரகுபதி, மதிவதனன், அருண்சித்தார்த், ஆனந்த்தும் சேர்ந்து ஹென்றியை கடுமையாகத் தாக்கினார்கள். படுகாயமடைந்த ஹென்றி, கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருக்கிறார். நெய்வேலி டவுன் காவல்நிலையத்தில் வழக்கு பதிவானது.
இவ்வழக்கு நெய்வேலி நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கின் விவரத்தை முழுமையாக அறிந்த நீதிபதி சுப்பையா, இரண்டு நிமிடம் கண்மூடி மௌனமாக இருந்தார். பிறகு, ""இது வள்ளலார் பெருமகனார் வாழ்ந்த மண். இந்த மண்ணின் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடலாமா?'' என்று வேதனையோடு கேட்ட நீதிபதி... ""வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் மார்ச் 31 முதல் ஏப்ரல் 30 வரை சனி, ஞாயிறு நாட்களில் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் சேவை செய்யவேண்டும். பிறகு அங்கிருந்து சான்றிதழ் பெற்று மே முதல் தேதி இந்த கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும்'' என்றார்.
-காளிதாஸ்
கடலுக்கே உப்பா?
கோவை காட்டூர் போலீஸ் நிலையத்திற்கு வந்த ஒரு போனில், "ஹலோ... நான் விஜயவாடா எஸ்.பி. ரவிகாந்த் பேசறேன். என் ரிலேட்டிவ் ஒருத்தர் இன்டர்வியூ விஷயமா கோவை வந்துகிட்டு இருக்கிறார். வழியில அவரோட பர்ஸ் காணாம போயிருச்சு. உங்க இன்ஸ்பெக்டர்கிட்ட சொல்லி ஒரு ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை ரெடி பண்ணி அவர்கிட்ட கொடுத்திடுங்க. உங்க இன்ஸ்பெக்டரோட பேங்க் அக்கவுண்ட் நம்பரை எனக்கு எஸ்.எம்.எஸ். பண்ணுங்க; நான் அவரோட அக்கவுண்ட்ல பணத்தை போட்டு விட்டுறேன்''’ என்று அந்த போன்குரல் கம்பீரமாய் கரகரத்திருக்கிறது.
அதனை நம்பிய காட்டூர் போலீசாரும் ஐந்தாயிரம் ரூபாயை ஏற்பாடு செய்துவிட்டு, அந்த விஜயவாடா எஸ்.பி.க்கு போன் செய்தபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. உடனே காட்டூர் போலீஸ் விஜயவாடா எஸ்.பி. ஆபீசுக்கு போன் செய்தபோதுதான், அப்படி ஒரு எஸ்.பி.யே இல்லை என்பது காட்டூர் போலீசாருக்கு தெரியவந்தது.
அந்த நேரத்தில் காட்டூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த ஒருவர், "விஜயவாடா எஸ்.பி. அனுப்பினார். நான்தான் பர்சை தவறவிட்டவர்' என்றார். உஷாரான போலீசார், தங்களது ஸ்டைலில் விசாரிக்க, கோயில்பட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பது தெரிய வந்தது. அவரே எஸ்.பி பேசுவது போல பேசி பல ஊர்களில் போலீசாரிடமே வசூல் வேட்டையை நடத்தி வந்திருக்கிறார் கோபாலகிருஷ்ணன்.
-அருள்குமார்