vcc

Advertisment

பேராசிரியர்கள் பணி நியமனத்தில் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து, கையும் களவுமாக பிடிபட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கோவை, பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் கணபதியின் ஜாமீன் மனு தள்ளுபடியாகியுள்ளது.

தகுதியே இல்லாதவர்களுக்கு போஸ்டிங் போடப்பட்டதைக் கண்டித்தும் தகுதியானவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார் வழக்கறிஞரும் சமூக நீதிக்கட்சியின் தலைவருமான பன்னீர்செல்வம். அவர் நம்மிடம் பேசியபோது... ""தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய போஸ்டிங்கை பொதுப்பிரிவினருக்கும், எஸ்.சி. பிரிவில் பெண்களுக்கு போடவேண்டிய போஸ்டிங்கை ஆண்களுக்கும் போட்டு அதகளம் பண்ணியிருக்கிறார் கணபதி. அவருடைய ஒவ்வொரு முறைகேட்டையும் அம்பலப்படுத்தியுள்ளேன்.

பல்கலைக்கழகத்திலும் உறுப்புக் கல்லூரிகளிலும் போஸ்டிங் போட்டதில் பலகோடி வசூல் என்றால், தொலைதூரக் கல்வி இயக்குநர் மதிவாணன் மூலம் தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் தொலைதூரக் கல்வி மையங்களை நிறுவியதில் மட்டும் இரண்டு ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் புழங்கியிருக்கிறது. அதனால்தான் கணபதி போட்ட போஸ்டிங்குகளை ரத்து செய்யவும், இந்த லஞ்சக் கொள்ளை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தால் மட்டுமே பல உண்மைகள் வெளிவரும் என்பதை கவர்னர் புரோஹித்துக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருக்கிறேன்''’என பொங்கி வெடித்தார் பன்னீர்செல்வம்.

Advertisment

vcss

கணபதி மீது வழக்குத் தொடர்ந்த லட்சுமிபிரபா நம்மிடம் பேசியபோது, ""யுனிவர்சிட்டி பயோடெக்னாலஜி டிபார்ட்மெண்டில் எஸ்.சி. பிரிவில் இரண்டு பெண்களுக்கான உதவிப்பேராசிரியர் பணிக்கு கால்ஃபர் பண்ணியதைப் பார்த்து அப்ளிகேஷன் போட்டேன். நேர்முகத் தேர்விலும் கலந்து கொண்டு, எனது ஒரிஜினல் சர்ட்டிபிகேட்டுகளையும் சமர்ப்பித்தேன். ஆனால் வேலாயுதம் பிரபு என்பவருக்கு போஸ்டிங் போட்டுவிட்டார் கணபதி. காரணம் அதே பயோடெக்னாலஜி டிபார்ட்மெண்டில் இருக்கும் டாக்டர் கிரிஜாவின் தம்பிதான் இந்த வேலாயுதம் பிரபு. எப்படியெல்லாம் அநியாயம் நடந்திருக்கு பாருங்க. அதனால்தான் ஐகோர்ட்டுக்குப் போனேன்''’என்றார்.

லட்சுமிபிரபா வழக்குத் தொடர்ந்ததும், சிண்டிகேட் மெம்பர்கள் மூலம்தான் எல்லா போஸ்டிங்குகளும் போடப்பட்டன என்ற காரணத்தைச் சொல்லி ஸ்டே வாங்கியிருக்கிறார் கணபதி. அதேநேரம் உயர்கல்வி படிக்க, டெல்லி யு.ஜி.சி.யால் லட்சுமிபிரபா செலக்ட் ஆனதும், கணபதியிடம் சென்று தனது ஒரிஜினல் சர்ட்டிபிகேட்டுகளைக் கேட்டிருக்கிறார் லட்சுமி பிரபா. "கேஸை வாபஸ் வாங்கிட்டு, பதிவாளர் வனிதாவைப் போய்ப் பார்' என கறார் காட்டிவிட்டாராம் கணபதி.

Advertisment

இதையெல்லாம் கலெக்ட் பண்ணிவிட்ட விஜிலென்ஸ் அதிகாரிகள், இப்போது பதிவாளர் வனிதாவிடம் விசாரணையை ஆரம்பித்திருப்பதோடு, டாக்டர் கிரிஜா மற்றும் சிண்டிகேட் மெம்பர் 21 பேரை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளனர்.

-அருள்குமார்