Advertisment

கொள்ளை-அரசியல்! கோபத்தில் மீனாட்சி!

maduraikovil

madurai

யிரம்கால் மண்டபத்திலிருந்து முதலில் வெளிப்பட்ட அந்தத் தீ, மதுரையை பதற வைத்துவிட்டது. மீனாட்சிஅம்மன் கோயிலின் கிழக்குக் கோபுர வாசலில் தீயணைப்பு வாகனங்களும் போலீஸ் வண்டிகளும் குவிக்கப்பட்டன. பிப்ரவரி 2-ந் தேதி இரவிலிருந்து விடியற்காலைவரை பதற்றம் தணியவில்லை. தீயின் நாக்குகளை தண்ணீர்வண்டிகள் அணைத்தபிறகு, ஆபத்து குறைந்தாலும் ஆவேசம் குறையவில்லை.

Advertisment

ஆட்சியர் வீரராகவ ராவ் அங்கேயே இருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுக்கொண்டிருந்தார்.…அவர் நம்மிடம், ""தீயை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டோம். அடுத்தகட்ட விசாரணை நடத்தவிருக்கிறோம்''’என்றார். பிப்ரவரி 3-ந் தேதி காலையில், பக்தர்களும் இந்து அமைப்பினரும் பொதுமக்களும் கோயில் வாசலில் திரண்டுவிட்டனர்.

Advertisment

maduraikovil

இந்து மக்கள் கட்சியின் ஆர்ப்பாட்டம், பா.ஜ.க.வினர் மறியல், இந்து முன்னணி போராட்டம் என ரணகளமாக காணப்பட...…நம்மிடம், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கண்ணன், ""உள்ளே கூட்டுக்கொள்ளை

madurai

யிரம்கால் மண்டபத்திலிருந்து முதலில் வெளிப்பட்ட அந்தத் தீ, மதுரையை பதற வைத்துவிட்டது. மீனாட்சிஅம்மன் கோயிலின் கிழக்குக் கோபுர வாசலில் தீயணைப்பு வாகனங்களும் போலீஸ் வண்டிகளும் குவிக்கப்பட்டன. பிப்ரவரி 2-ந் தேதி இரவிலிருந்து விடியற்காலைவரை பதற்றம் தணியவில்லை. தீயின் நாக்குகளை தண்ணீர்வண்டிகள் அணைத்தபிறகு, ஆபத்து குறைந்தாலும் ஆவேசம் குறையவில்லை.

Advertisment

ஆட்சியர் வீரராகவ ராவ் அங்கேயே இருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுக்கொண்டிருந்தார்.…அவர் நம்மிடம், ""தீயை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டோம். அடுத்தகட்ட விசாரணை நடத்தவிருக்கிறோம்''’என்றார். பிப்ரவரி 3-ந் தேதி காலையில், பக்தர்களும் இந்து அமைப்பினரும் பொதுமக்களும் கோயில் வாசலில் திரண்டுவிட்டனர்.

Advertisment

maduraikovil

இந்து மக்கள் கட்சியின் ஆர்ப்பாட்டம், பா.ஜ.க.வினர் மறியல், இந்து முன்னணி போராட்டம் என ரணகளமாக காணப்பட...…நம்மிடம், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கண்ணன், ""உள்ளே கூட்டுக்கொள்ளை நடக்கிறது. எங்கள் யாரையும் உள்ளே விடவில்லை. கோயிலைச்சுற்றி காஷ்மீர்காரனும் முஸ்லிம்களும்தான் கடையை வைத்திருக்கிறார்கள். ஆகம விதிப்படி கோபுரத்திற்கு உயரமாக கட்டடங்கள் கட்டக்கூடாது. ஆனா சுத்தி கட்டியிருக்கிறாங்க. உள்ளே நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த வாடகையை வாங்கித்தான் கோயிலை நிர்வகிக்க முடியுமா?'' என மதரீதியாகப் பொங்கினார்.

கோயில் நிர்வாகத்தின் முறைகேடுகளுக்கு எதிராகத் திரண்டு "நாம் தமிழர்' கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய, அதில் அறம்சிவா நம்மிடம்,’""இதில் ஏதோ சதி இருக்கும்னு நினைக்கிறோம். இங்கு ஏன் பா.ஜ.க., வி.எச்.பி., இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சின்னு இவ்வளவு காவி கட்சிகள்? எல்லோரும் சம்பவத்தை விட்டுவிட்டு, முஸ்லிம்கள் கடை வைத்திருப்பதை முன்னிலைப்படுத்தி பிரச்சினை செய்கிறார்கள். அதுபோல, "இந்து அறநிலையத்துறையை தூக்கிவிட்டு, கோயிலை இந்துக்களிடம் கொடு' என்று கோஷம் போடுகிறார்கள். விசயத்தை திசைதிருப்பி மதுரையை இன்னொரு கோயம்புத்தூராக்க முற்படுகிறார்கள். வியாபாரத்திற்காக, மார்வாடிகளின் தூண்டுதலாக இது இருக்குமோ என யோசிக்க வைக்கிறது'' என்றார்.

madurai2

அங்கு வந்த வழக்கறிஞர் குமாரோ, ""நான் கடந்த 15 வருடமா இங்கு நடக்கும் கொள்ளைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடிவருகிறேன். சமீபகாலமா மேற்கு நுழைவாயிலை இழுத்து மூடிவிட்டார்கள். ஏன் என்று கடிதம் மூலமும், நேராகவும் கேட்டதற்கு "ஜாதகப்படி சரியில்லை' என்றார்கள். மேற்கு கோபுரத்திலிருந்து வண்டியூர் தெப்பக்குளம் வரை ஒரு பெரிய சுரங்கம் இருக்கு. எம்.ஜி.ஆர்.கூட இறங்கிப்பார்த்தார். அதை நந்தியை வைத்து மூடிவிட்டார்கள்.…அதற்குள் பல லட்சம் கோடி மதிப்பிலான தங்கப்புதையல் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதை திறக்கச்சொல்லி ஆட்சியரிடம் மனு கொடுக்கவிருக்கிறோம்.…இதுபோக ஆயிரம்கால் மண்டபத்தில் உள்ள பல தூண்கள் தற்போது குறைகிறது. அதைப்பற்றி தகவல் உரிமை சட்டத்தின்படி கேட்டதற்கு, இதுவரை பதில் இல்லை.…ஒவ்வொரு தூணும் ஒவ்வொருவிதமாக சத்தம் எழுப்பும் அதிசய தூண்கள். புராதனச் செல்வங்களை மோசடி செய்வதை மறைக்கத்தான் இப்படி தீ விபத்து நடக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது''…என முடித்தார்.

நம் எதிரே வந்த ஒரு சாமியார், ""நான் நேற்று அழகர்மலையிலிருந்து நடந்தே இங்கு வருகிறேன். …1988-ல் இதுபோல் தீ விபத்து நடந்தது. மதுரையின் மய்யத்தில் இருக்கும் மீனாட்சி ஒரு தமிழ்த்தாய். அதை ஒரு கூட்டம் கபளீகரம்பண்ணி உட்கார்ந்துகொண்டு, பல வேண்டாத செயல்கள் எல்லாம் நடக்கிறது. அதைத் தாங்கமுடியாமத்தான், அம்மன் தீயை காண்பிக்கிறா.…தமிழகத்தோட நெற்றிக்கண் மதுரை. ஏற்கனவே கண்ணகி எரிச்சுட்டா... இது நாலாவது மதுரை. இது கெட்டசகுனமா தெரியுது. என்ன நடக்கப்போகிறதோ'' என அவர் சொல்ல... பக்தர்களிடமும் அதே எண்ணம்தான் வெளிப்படுகிறது.

3-ந் தேதியன்று அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுடன் லோக்கல் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, எம்.பி. கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வந்தனர். பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட பின், பேசிய சேவூர் ராமச்சந்திரன், ""கோயில் வளாகத்தில் மொத்தம் 140 கடைகள் உள்ளன. விபத்தில் 20 கடைகள் சேதமடைந்துள்ளன. சாமி சிலைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. விபத்துக்கான காரணத்தை ஆராய்வதுடன், பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளோம்'' என்று சொல்லிவிட்டுப் போனார்.

"கோயிலை வருமான ஸ்தலமாக்கி, நிர்வாகத்தில் இருப்பவர்களிலிருந்து மேல்மட்டம் வரை கொள்ளையடிப்பது தொடர்வதால் அலட்சியப் போக்கு அதிகரித்து வருகிறது. மின்சப்ளை உள்ளிட்ட எதிலும் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை. அதன் விளைவுதான் இத்தகைய விபத்துகள்' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

"கவர்னர் புரோகித் வந்த அன்று, பிரசாத சமையல் அறையில் தீ பிடிக்க... உடனே அது வெளியே தெரியாமல் அணைக்கப்பட்டது' என்கிறார்கள் கோயிலுக்குள் இருப்பவர்கள். அதற்குமுன் கோபுர கலசம் சரிந்து விழுந்தது. அடுத்து, சாதாரண மழைக்கே கோயிலுக்குள்ளே வெள்ளம் வந்தது.… இப்ப நெருப்பு'…என மீனாட்சியின் கோபத்திற்கான காரணம் புரியாமல் இருக்கிறது மாமதுரை.

-அண்ணல்

-ஷாகுல்

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe