Advertisment

கனவை நனவாக்கும் "கலைஞர் படிப்பகம்' -பெண் கவிஞரின் நம்பிக்கை விதை!

kalaingar-library

நீட் பயமுறுத்தும் நாட்டில், லட்சக்கணக்கில் செலவு செய்ய முடியாத கிராமப்புற மாணவர்களுக்கு அரசுப் பணிகளுக்கான இலவசப் பயிற்சியை முறையான ஆசிரியர்களைக் கொண்டு நடத்துவது என்பது சாதனைப் பணிதான். சொந்த ஊரில் அதை செயல்படுத்தியிருக்கிறார் இலக்கியப் படைப்பாளியான அரசியல் பெண்மணி.

Advertisment

தி.மு.க.வைச் சேர்ந்த கவிஞர் சல்மா, திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் உருவாக்கிய கலைஞர் படிப்பகத்தின் மூலம் போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சிகளை கிராமப்புற மாணவர்களுக்கு வழங்கி வருக

நீட் பயமுறுத்தும் நாட்டில், லட்சக்கணக்கில் செலவு செய்ய முடியாத கிராமப்புற மாணவர்களுக்கு அரசுப் பணிகளுக்கான இலவசப் பயிற்சியை முறையான ஆசிரியர்களைக் கொண்டு நடத்துவது என்பது சாதனைப் பணிதான். சொந்த ஊரில் அதை செயல்படுத்தியிருக்கிறார் இலக்கியப் படைப்பாளியான அரசியல் பெண்மணி.

Advertisment

தி.மு.க.வைச் சேர்ந்த கவிஞர் சல்மா, திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் உருவாக்கிய கலைஞர் படிப்பகத்தின் மூலம் போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சிகளை கிராமப்புற மாணவர்களுக்கு வழங்கி வருகிறார். TNPSC Group-4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் முடித்து மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் கொடுக்கும் நிகழ்ச்சியை நேரில் கண்டோம்.

Advertisment

kalaingar-library

துவரங்குறிச்சியிலிருந்தும் அதனைச் சுற்றியுள்ள மணப்பாறை, மருங்காபுரி சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் கல்லூரி மாணவர்கள், கல்லூரி முடித்த மாணவிகள், பட்டப்படிப்பு படித்து திருமணம் ஆகியிருக்கும் பெண்கள் என பலரும் வகுப்பறையில் நிறைந்திருந்தனர். வகுப்பு எடுத்த காஜாமொய்தீன் நம்மிடம், ""ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைதோறும் முழுமையாக வகுப்புகள் நடக்கும். நான் மதுரையில் வேலை பார்த்தாலும் விடுமுறை நாட்களில் கிராமப்புற மாணவர்களுக்குப் போட்டித் தேர்வுக்குப் பயிற்சி கொடுப்பதையே அதிகம் விரும்புகிறேன். இதேபோல ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர் ஒருவர் தமிழுக்கான சிறப்பு வகுப்புகள் எடுக்கிறார்'' என்றார்.

தேர்வுக்கு செல்வதற்கான நம்பிக்கையைப் பெற்றிருந்த மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துச் சொல்லிக்கொண்டிருந்த கவிஞர் சல்மா நம்மிடம், ""இந்தப் பகுதியில் 49% ஆண்கள், 51% பெண்கள் இருக்கிறார்கள். பொன்னாம்பட்டி துவரங்குறிச்சியில் மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 55%. இங்கே இருக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு அரசுப்பணியில் சேர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்கிற எண்ணத்தில் இதை இலவசமா ஏற்பாடு செய்திருக்கிறோம். என் கணவரும், இந்த ஊராட்சியின் முன்னாள் தலைவருமான அப்துல்மாலிக், என் உதவியாளர் பி.பி.டி.ராஜா ஆகியோர் இதற்கு உறுதுணையாக இருக்கிறார்கள். "கலைஞர் படிப்பகம்' என்ற பெயரே இளையதலைமுறைக்கு நம்பிக்கையை உருவாக்கும். வகுப்பு நடத்த பாரத் பள்ளி நிர்வாகத்தினர் இடம் கொடுத்திருக்கிறார்கள். தகுதியான, திறமையான ஆசிரியர்களைக் கொண்டு சிறப்பான முறையில் பயிற்சி தரப்படுகிறது. குரூப்-4 தேர்வுக்காக 2 மாதங்கள் பயிற்சி தரப்பட்டுள்ளது. அடுத்ததாக, ஏப்ரல் மாதம் குரூப்-2 போட்டி தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்க இருக்கிறோம்'' என்றார் உற்சாகமாகவும் நம்பிக்கையாகவும்.

அந்த நம்பிக்கை குரூப்-4 தேர்வை அண்மையில் எழுதிய கலைஞர் படிப்பகம் மாணவ-மாணவிகளின் முகத்திலும் பிரதிபலிக்கிறது.

kalaingar library
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe