என்னத்த சொல்ல?
சமூக ஊடகங்களில் இந்தவாரம் காக்கிச் சட்டை வாரம் போலிருக்கிறது. வாட்ஸ்ஆப், பேஸ்புக் தயவில் ஒரே நாளில் மாநிலம் முழுமைக்கும் அறிமுகமாகியிருக்கிறார் ஜெய்னூப் நிஷா. பழனி தாலுகா காவல் சரக கட்டுப்பாட்டிலுள்ள சாமிநாதபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர்தான் இந்த நிஷா. கடந்த வாரம் பணியை முடித்துவிட்டு நண்பர் ஒருவருடன் காரில் போகும்போது சீருடையுடன் மது அருந்தி போதையில் உளறுவதை வீடியோவிலிருந்த
என்னத்த சொல்ல?
சமூக ஊடகங்களில் இந்தவாரம் காக்கிச் சட்டை வாரம் போலிருக்கிறது. வாட்ஸ்ஆப், பேஸ்புக் தயவில் ஒரே நாளில் மாநிலம் முழுமைக்கும் அறிமுகமாகியிருக்கிறார் ஜெய்னூப் நிஷா. பழனி தாலுகா காவல் சரக கட்டுப்பாட்டிலுள்ள சாமிநாதபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர்தான் இந்த நிஷா. கடந்த வாரம் பணியை முடித்துவிட்டு நண்பர் ஒருவருடன் காரில் போகும்போது சீருடையுடன் மது அருந்தி போதையில் உளறுவதை வீடியோவிலிருந்த அவரது பேட்ஜ் (உஏக 283) காட்டிக் கொடுத்துவிட்டது. திண்டுக்கல் ஆயுதப்படை, பழனி, ஒட்டன்சத்திரம், ஆய்க்குடி, பழனி போன்ற இடங்களில் பணிபுரிந்தபோது இவர்மீது மது அருந்திவிட்டு பணிக்கு வந்த குற்றச்சாட்டு இருக்கிறதாம். எஸ்.பி. சக்திவேல் ஜெய்னூப் நிஷாவை தற்காலிக பணிநீக்கம் செய்திருக்கிறார். இவருக்கு முன்பாக மற்றொரு பெண் காவலரும் இதேபோல சஸ்பெண்ட் ஆகியுள்ளார். திட்டமிட்டு பெண் காவலர்களைச் சிக்கவைப்பதாக காவல்துறைக்குள் புகைச்சல் கிளம்புகிறது.
-சக்தி
"காரை சோதனை போடறது ஒரு குத்தமாய்யா?' என்கிறார்கள் கான்ஸ்டபிளுக்கு ஆதரவானவர்கள். "அனுமதியில்லாமல் வீடியோ எடுப்பது அத்துமீறலில்லையா?' என்கிறார்கள் உயர் காவலதிகாரி மகளுக்கு ஆதரவானவர்கள்.
சென்னை -நீலாங்கரை கடற்கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் கூடுதல் ஏ.டி.ஜி.பி.யின் மகளது காரை காவலரொருவர் சோதனை போடுவதும் வீடியோ எடுப்பதும், அவரை மிரட்டும்விதமாக உயரதிகாரியின் மகள் பேசுவதும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. காருக்குள், டிரைவிங் சீட் பக்கம் இருக்கும் மினி பீர் பாட்டிலிலிருந்து தொடங்கும் வீடியோ… காரின் எண், எந்த நிறுவன கார் என பதிவு பண்ணிக்கொண்டே வருகிறது. உயரதிகாரி மகளுடன் வந்திருக்கும் நபர், ""நாங்க ட்ரிங்க் பண்ணியிருக்கமான்னு பாருங்க. எதுக்கு காரை செக் பண்றீங்க?'' என எகிற... தன் கடமையைச் செய்வதாகச் சொல்கிறார் காவலர். ஒருகட்டத்தில், ஏ.டி.ஜி.பி. மகள், ""உங்க பேரென்ன, உங்களை ட்யூட்டிய விட்டே அனுப்பணுமா?'' என மிரட்டுகிறார். விசாரிக்கும் காவலரோ, "தான் கான்ஸ்டபிள், தன் பெயர் கார்த்திகேயன்' என சொல்லிக்கொண்டே தொடர்ந்து வீடியோ எடுக்கிறார். ""எவ்ளோ தைரியம். உங்களுக்கு உங்க வேலை வேண்டாமா?'' என அவரை மிரட்டுகிற அந்தப் பெண், ஏ.டி.ஜி.பி. தமிழ்ச்செல்வன் மகள் என்கிறது காக்கி வட்டாரம்.
விசாரித்த கான்ஸ்டபிள் மீது உயரதிகாரி மகள் புகார் கொடுத்திருக்கிறார்.
-கீரன்