கிரியேட்டிவ் : புதிய தொழில் தொடங்க 4 லட்சம் நிதி தரப்படும் -மத்திய அரசு * நீங்க ஏற்கெனவே போட்ட அந்த 15 லட்சத்தையே செலவுபண்ணத் தெரியாம சுத்திக்கிட்டு இருக்கோம், இதுல இன்னும் 4 லட்சமா?
SK Soundhararajan : மக்களைக் காப்பாற்ற எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும் -குஷ்பு* முதல்ல... உங்க கட்சி நிர்வாகிகளை ஓரணியில் திரட்டுங்க.
நித்யா : கட்சியில் இணைய 200 கோடி பெற்றார் ஓ.பி.எஸ். -கே.சி பழனிசாமி * "பாகுபலி'க்கு பிறகு இந்திய அளவில் அதிக வசூல் செய்து சாதனை படைத்த படம்... "தர்மயுத்தம்'.
YR : காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் நாடக மாடுகின்றன -தமிழிசை * அதில் பி.ஜே.பி.யும் உண்டுதானே?
கடைநிலை ஊழியன் : ""காவிரி விவகாரத்தை முதல்வர் பழனிசாமி சிறப்பாக கையாள்கிறார்'' -அமைச்சர் செல்லூர் ராஜு * காவிரில தெர்மோ கோல் திட்டத்தை செயல்படுத்த பிளான் இருக்குமோ?
வினோத் : ""சிறப்பான எதிர்காலத்துக்கு புதிய கண்டுபிடிப்புகள் அவசியம்'' -மோடி* செல்லூர் ராஜுவை நினைச்சுதான் பிரதமர் பேசுறாரோ!
பரமசிவம் : தி.மு.க.வை மக்கள் வெறுத்துவிட்டனர் -ராஜேந்திர பாலாஜி * ஆமாம்! அ.தி.மு.க.வை மக்கள் கட்டிப்பிடிச்சி முத்தம் கொடுக்குறாங்க.
தொகுப்பு : ஜீவாபாரதி,
அருண்பாண்டியன், துரை.கணேசன்