Yuga : ஆயிரம் பேரை கட்சியில் வச்சிருக்கிறவன் கூட நிம்மதியாய் இருக்கான். இந்த ஒத்த ஆளை கட்சியில் வச்சுக்கிட்டு நான் படுற பாடு இருக்கே?.. உய்யையோ முடியலைடா சாமி-தமிழிசை அக்கா மைண்ட் வாய்ஸ்.!!
YR : கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர வன்முறையால் அல்ல- எச்.ராஜா * ஓ.. அப்ப அந்த "சோடா பாட்டில் வீசுறது' எல்லாம் கருத்துக்களால் எதிர்கொள்ளுறது போல..?
கதிர் : அதிக பயத்தோடு எப்போதும் வாகனத்தை இயக்குவது எச்.ராஜாவின் கார் ஓட்டுனராகத் தான் இருக்கும் * எவன் எங்கிருந்து கல் எறிய போறான்னு தெரியாம... பாவம்
மெத்த வீட்டான் : பெரியார் சிலையை உடைத்த பா.ஜ.க. நிர்வாகி நீக்கம் - தமிழிசை * நல்லதுன்னு போவாரு அவரு!
Parthi : நான் அந்த பதிவை போட வில்லை. போட்ட பேஸ்புக் அட்மினை நீக்கிட்டேன்-எச். ராஜா * யாரு பேஸ்புக் மார்க்கையாப்பா?
மித்ரன் : பா.ஜ.க.வை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் மோடி –-தமிழிசை நி அது சரி தமிழ்நாட்டை பொறுத்தவரை பவர் ஸ்டார் நீங்களும் எச். ராஜாவும் தானே!?
அருண் குமார் : பெரியார் சிலையை உடைப்பவர் கை, கால்கள் வெட்டப்படும் : அருவா பிடிச்ச கை இது - வைகோ ஆவேசம். * கியாரே, கலிங்கப்பட்டி வைகோ ஒத்தையில வந்து நிக்கேன்,மொத்தமா வாங்கலே மொமண்ட்.
ராஜ் : பெரியார் சிலை மீது கை வைத்தால் என்ன நடக்கும் என்பது எச்.ராஜாவுக்கு தெரியும் - சீமான் * இப்ப தெரியுதா இது பெரியார் மண்ணுன்னு.
தொகுப்பு : ஜீவாபாரதி,
அருண்பாண்டியன், துரை.கணேசன்