க்கீரன் இதழில் (மார்ச் 12-14, 2018) செ.கு.தமிழரசன், எச்.ராஜாவுக்கு பதில் அளித்திருக்கிறார். இதுகுறித்து சில வற்றை அவர் கவனத்திற்குக் கொண்டுசெல்ல நக்கீரன் வழி இதனை எழுதுகின்றேன்.

Advertisment

historynote

1. நீதிக்கட்சிதான் தாழ்த்தப்பட்டோருக்கு ஆதிதிராவிடர் என்கிற பெயரை அதிகாரப் பூர்வமாக மாற்றியது. அரசிதழில் வெளியிட்டது. ஆதிதிராவிடர்கள் என்றால் ஆதிதமிழர்கள் என்றுதான் பொருள். 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆதி திராவிடத் தலைவர்கள்தான் "திராவிடர்' எனும் சொல்லில் அமைப்புகளுக்கு முதன்முதலாகச் சூட்டியவர்கள். அதன்பிறகுதான் திராவிட இயக்கக் கட்சிகள் அச்சொல்லைப் பயன் படுத்தின. திராவிட, திராவிடன், திராவிடர், திராவிடம் எல்லாம் தமிழ் சார்ந்த பொரு ளுடைய சொற்களே. வஜ்ர நந்தி, குமாருலப் பட்டர் காலத்திலிருந்து இச்சொற் கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எச்.ராஜா இந்நாட்டின் ஆகச்சிறந்த ஆய்வாளரோ, மக்கள் திரட்சிப் பின்னே வருகிற பெருந்தலைவரோ இல்லை. அவருடைய பேச்சை நாம் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை.

Advertisment

thirunavukarasu2. செ.கு.தமிழரசன் கூறும் சென்னை மாகாண சபை என்பது இரட்டை ஆட்சிக் காலத்தில் இயங்கிய சட்டமன்ற மாகும். இச்சபை இயங்கிய கால கட்டத்தில் மேலே குறிப்பிட்டுள்ள "திராவிட' பத்தி ரிகைகளை அயோத்திதாசர் தெளிவுபடுத்தி யுள்ளார் என்ற கருத்து தமிழரசனின் நக்கீரன் செய்தியில் இருக்கிறது. 1920-ல்தானே "இரட்டை ஆட்சி' மாகாண சபை இயங்கத் தொடங்கியது. அப்போது அயோத்தி தாசர் உயிருடன் இல்லையே. அவர் 1914-ல் மரணம் அடைந்துவிடுகிறாரே. விவரத்தை அவர் எப்படித் தெளிவுபடுத்தியிருக்க முடியும்?

3. நீதிக்கட்சிதான் அரசின் சார்பாக ஆதிதிராவிடர் என்று சட்டப்பூர்வமாக அறிவிக்கச் செய்தது. அயோத்திதாசர், ஆதி திராவிடர் என்று வரலாற்றில் பதிவு செய் திருப்பது வேறு, அரசின் சார்பாக ஓர் அறிவிப்பாக வெளியிடுவது வேறு அல்லவா?

4. நீதிக்கட்சியின் பொதுச் செயலாளர்களாக ரெட்டை மலை சீனிவாசன், சிவராஜ் இருந்துள்ளார்களா? எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டுவரை?

இவையே தமிழரசனை கவனங்கொள்ளச் செய்ய என் கருத்தாக முன்வைக்க விரும்புகிறேன்.