Advertisment

இறுதிச் சுற்று!

kanimoli

முதல்வரை ஓரங்கட்டிய மத்திய அரசு!

nirmalasetharamanகுரங்கணி மலையின் காட்டுத் தீயில் சிக்கி, பலரும் உயிருக்குப் போராடுகிறார்கள் என்ற செய்தி மீடியாவில் வெளியானபோது, சேலத்தில் மானிய ஸ்கூட்டி வழங்கும் விழாவில் பிஸியாக இருந்தார் முதல்வர் பழனிசாமி. மேடையைவிட்டு இறங்கிவந்தவரிடம் ஊடகங்கள் மைக்கை நீட்டியபோது, ""நான் இப்போதுதான் விழா மேடையிலிருந்து இறங்குறேன். நீங்க சொல்ற விஷயம் பற்றி முழுமையாகத் தெரியாது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என சமாளித்தார். ஆனால், அதற்கு முன்பாகவே மத்திய பாதுகாப்பு அமைச்சர்

முதல்வரை ஓரங்கட்டிய மத்திய அரசு!

nirmalasetharamanகுரங்கணி மலையின் காட்டுத் தீயில் சிக்கி, பலரும் உயிருக்குப் போராடுகிறார்கள் என்ற செய்தி மீடியாவில் வெளியானபோது, சேலத்தில் மானிய ஸ்கூட்டி வழங்கும் விழாவில் பிஸியாக இருந்தார் முதல்வர் பழனிசாமி. மேடையைவிட்டு இறங்கிவந்தவரிடம் ஊடகங்கள் மைக்கை நீட்டியபோது, ""நான் இப்போதுதான் விழா மேடையிலிருந்து இறங்குறேன். நீங்க சொல்ற விஷயம் பற்றி முழுமையாகத் தெரியாது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என சமாளித்தார். ஆனால், அதற்கு முன்பாகவே மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், "காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்க ராணுவ ஹெலிகாப்டர்கள் அனுப்பப்படும்'‘ என ட்விட்டர் மூலம் தெரிவித்தார்.

Advertisment

தமிழக முதல்வருக்கு விவரம் தெரியாத நிலையில், மத்திய அமைச்சர் எப்படி விவரம் பெற்று, நடவடிக்கையில் இறங்கினார் என விசாரித்தபோது, ""தமிழ்நாட்டில் ஆளுநரையும் அதிகாரிகளையும் வைத்து ஆட்சி நடத்துவது மத்திய அரசுதான். காட்டுத்தீ பற்றிய செய்தி கிடைத்த அதிகாரிகள் உடனடியாக கவர்னர் மாளிகைக்குத் தெரிவித்தனர். கவர்னர் புரோகித் அதனை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல, டெல்லி ஆலோசனைப்படியே மத்திய அமைச்சர் செயல்பட்டார். இது எதுவும் அந்த நிமிடம்வரை முதல்வர் எடப்பாடிக்குத் தெரியாது'' என்கிறார்கள்.

-இளையர்

உஷா போஸ்ட்மார்ட்டம் சர்ச்சை!

ushaபோக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் விரட்டிச் சென்று எட்டி உதைத்ததில் திருச்சி ராஜாவின் கர்ப்பிணி மனைவி உஷா சம்பவ இடத்திலேயே மரணமடைந்தது பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து காமராஜ் சிறையில் அடைக்கப்பட்டதுடன், இடைநீக்கமும் செய்யப்பட்டார்.

Advertisment

இந்நிலையில், உஷாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த சரவணன் என்கிற மருத்துவர் தந்த அறிக்கையில், "உஷா கர்ப்பிணி இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது' என்று திருச்சி மாவட்ட எஸ்.பி. கல்யாணம் தெரிவித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாம் எஸ்.பி.யிடம் பேசிய போது, ""அரசு மருத்துவர்கள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் பண்ணியிருக்கிறார்கள். அவர் கர்ப்பம் இல்லை, வயிற்றில் சிறிய அளவு கட்டியிருக்கிறது'' என்றார்.

திருச்சியில் ஏற்கனவே கடத்தி கொலை செய்யப்பட்ட இராமஜெயம் கொலை வழக்கிலும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது உஷாவின் போஸ்ட்மார்ட்ட ரிப்போர்ட்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

-ஜெ.டி.ஆர்.

காங்.விருந்து!

fest

காங்கிரசின் அகில இந்தியத் தலைமைப் பொறுப்புக்கு ராகுல் வரவிருப்பதையொட்டியும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி.யை எதிர்க்கும் விதமாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள தனது இல்லத்தில் 13ஆம் தேதி இரவு விருந்து கொடுத்தார் சோனியாகாந்தி. தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு பதிலாக கனிமொழி எம்.பி. இந்த விருந்தில் கலந்து கொண்டார்.

Nirmala setharaman Usha
இதையும் படியுங்கள்
Subscribe