பாதர் செய்யும் காரியமா?

father

ந்தாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த ஃபாதரை புழல் சிறைக்கு அனுப்பியிருக்கிறது சென்னை போலீஸ்.

சென்னை -பெருங்குடியில் இயங்கும் மான்ஃபோர்டு மேனிலைப்பள்ளியில், ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவியிடம் தனது காமவெறியைத் தீர்த்

ந்தாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த ஃபாதரை புழல் சிறைக்கு அனுப்பியிருக்கிறது சென்னை போலீஸ்.

சென்னை -பெருங்குடியில் இயங்கும் மான்ஃபோர்டு மேனிலைப்பள்ளியில், ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவியிடம் தனது காமவெறியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார் பள்ளியின் தலைமையாசிரியர் ஃபாதர் ஜெயபாலன்.

father

குழந்தை பள்ளிக்குச் செல்ல மறுத்திருக்கிறது. காரணம் கேட்ட தாயிடம் தயங்கித் தயங்கி நடந்த கொடுமையைக் கூறியிருக்கிறது அந்தக் குழந்தை. காவல்துறையோ முதலில் வழக்குப் பதிய மறுத்துவிட்டது.

பள்ளியின் முன்பாக போராட்டம் நடத்தியபிறகே அந்த மாணவியை பரிசோதனைக்கு அழைத்துச் சென்றது காவல்துறை. அதன்பிறகே ஜெயபாலனிடம் ரகசிய விசாரணை செய்திருக்கிறார்கள்.

""அதெல்லாமில்லை. அந்தக் குழந்தையின் காதைப் பிடித்துத்தான் கிள்ளினேன்'' என்று சமாளிக்க முயன்றிருக்கிறார் அந்த பாதிரியார்.

அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களோ, ""இந்த வெறியனின் தொல்லை தாங்காமல் பல ஆசிரியைகள் வேலையை விட்டு நின்று விட்டார்கள். இதைப் போல பல குழந்தைகளை பாழாக்கிவிட்டது இந்த மிருகம். குழந்தையின் பெயர் கெட்டுவிடும். குடும்பத்திற்கு இழுக்கு என பல பெற்றோர் புகார் கொடுக்காமல் விட்டிருக்கிறார்கள். இப்போது வகையாக மாட்டிக் கொண்டது மிருகம்'' என்கிறார்கள்.

-அருண்பாண்டியன்

இதையும் படியுங்கள்
Subscribe