எடப்பாடி முதல்வராகி ஒரு வருடம் முடிந்திருப்பதை சாதனை விழாவாக கொண்டாட முடிவு செய்திருக்கிறது அரசு. மாவட்டம்தோறும் இவ்விழாவை சிறப்பாக நடத்த வேண்டி தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரிகளின் (பி.ஆர்.ஓ.க்கள்) ஆய்வுக் கூட்டத்தை சென்னையில் நடத்தி முடித்திருக்கிறார் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pros1.jpg)
சென்னை -கலைவாணர் அரங்கத்தில் அமைச்சர் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் துறையின் செயலாளர் வெங்கடேசன் ஐ.ஏ.எஸ்., துறையின் இயக்குநர் சங்கர் ஐ.ஏ.எஸ். உள்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
ஆய்வுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, ""ஜெயலலிதாம்மா மறைவுக்குப் பிறகு பல்வேறு அரசியல் பிரச்சனைகளையும் சட்டப் பிரச்சனைகளையும் சந்தித்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அத்தனை பிரச்சனைகளையும் சமாளித்து ஓராண்டை நிறைவு செய்ததே மிகப்பெரிய சாதனை. சேலம், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பெரிய மாவட்டங்களில் ஆட்சிக்கு எதிரான செய்திகள்தான் அதிகம் பதிவாகிறது. இதையெல்லாம் பி.ஆர்.ஓ.க்களாகிய நீங்கள்தான் தடுக்க வேண்டும். ஆட்சிக்கு சாதகமான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கேற்ப நீங்கள் பணியாற்ற வேண்டும். அலுவலகத்தில் இருக்கிற வரையில்தான் நாம் பி.ஆர்.ஓ. என நினைக்கக்கூடாது. வீட்டில் இருந்தாலும், விடுமுறையில் இருந்தாலும் நீங்கள் பி.ஆர்.ஓ.க்கள்தான்... அதை மறந்துவிடக்கூடாது.
எந்த ரூபத்திலும் ஆட்சிக்கு எதிரான விசயங்கள் பதிவாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். செக்ஸ் விசயத்தில் சம்பந்தப்பட்ட அந்த பி.ஆர்.ஓ.வின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை பத்திரிகையில் பார்த்து கோபமான முதல்வர், கடுமையாக ஆக்ஷன் எடுக்க என்னிடம் சொன்னார். நான்தான் அவர் திருந்த ஒரு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டி ட்ரான்ஸ்ஃபர் மட்டும் செய்யச் சொன்னேன். இது போன்ற ஒழுங்கீனமான காரியங்களில் பி.ஆர்.ஓ.க்கள் ஈடுபடக்கூடாது. இனியும் இப்படிப்பட்ட புகார்கள் வந்தால் கடுமையாக ஆக்ஷன் எடுப்பேன். முதல்வர் பொறுப்பில் எடப்பாடி பழனிச்சாமி ஒரு வருடம் நிறைவு செய்திருப்பதைக் கொண்டாடும் வகையில் நடத்தப்படும் விழாவை விமரிசையாக நடத்த வேண்டும்'' என்றார் கடம்பூர் ராஜு.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pros.jpg)
இதனையடுத்துப் பேசிய இயக்குநர் சங்கர், ""பி.ஆர்.ஓ.வின் செக்ஸ் நடவடிக்கையைக் கேள்விப்பட்டு அதிர்ந்துவிட்டோம். ஒவ்வொருத்தருக்கும் தனி நபர் ஒழுக்கம் மிக முக்கியம். அரசுப் பணியில் இருக்கும் உங்களுக்கு அந்த ஒழுக்கம் அதிகமாக இருக்க வேண்டும். நிறைய மாவட்டங்களில் அமைச்சருக்கும் கலெக்டருக்கும் நல்ல உறவு இல்லை. அமைச்சர்களை ஆட்சியர்கள் மதிப்பதே இல்லை. இதையெல்லாம் பி.ஆர்.ஓ.க்கள்தான் சரிசெய்ய வேண்டும்'' என ஆரம்பித்து ஏகப்பட்ட அட்வைஸ்களைச் சொன்னார். இறுதியாக, சிறப்பாகப் பணிபுரிந்த பி.ஆர்.ஓ.க்கள் கௌரவிக்கப்பட்டார்கள். அதேபோல ஏ.பி.ஆர்.ஓ.க்களுடன் தனியாக ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார் அமைச்சர் கடம்பூர் ராஜு.
-இரா.இளையசெல்வன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-03-17/pros_t.jpg)