ருவழியாக ஆதிதிராவிடர்களையும் அருந்ததிய மக்களையும் பிரித்த அந்த தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட இரண்டு பிரிவினருக்கு இடையே தீண்டாமைச் சுவர் எப்படி எழுந்தது?

Advertisment

மதுரை மாவட்டம் பேரையூர் அருகில் உள்ளது சந்தையூர். இங்கு ஆதிதிராவிடர்களுக்கான இந்திரா காலனியில் உள்ள காளியம்மன் கோவிலில் அருந்ததியர் வழிபட, ஆதிதிராவிடர் அனுமதிக்கவில்லை என்று தொடங்கியது பிரச்சனை.

wall

வழிபட அனுமதிக்க மறுத்ததுடன், கோவிலைச் சுற்றி சுவரையும் எழுப்பி அருந்ததியரின் புழக்கத்தையும் தடுத்ததாக கூறப்பட்டது. நீதிமன்றம் சென்ற இந்தப் பிரச்சினையில் நான்கு மாதங்களுக்குள் சுவரை அகற்றி சுமுகமான முடிவு எட்டப்பட வேண்டும்' என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

Advertisment

கடந்த ஜனவரி 19 ஆம் தேதி கெடு முடிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து அருந்ததிய மக்கள் ஜனவரி 29 ஆம் தேதியிலிருந்து தென் மலையாண்டி மலையில் குடும்பத்தோடு குடியேறி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். காளியம்மன் கோவில் கட்டப்பட்டுள்ள இடம் பொது நிலம். அந்த நிலத்தை பொது பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கையாக இருந்தது. இது குறித்து நக்கீரன் ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தப் போராட்டம் அரசியல்ரீதியாக பலத்த சர்ச்சையை உருவாக்கி இருந்தது. இந்நிலையில்தான் மார்ச் 30 ஆம் தேதி அருந்ததிய தொழிலாளி பழனிமுருகன் (45) இறந்தார். அவருடைய சடலத்தை வாங்க மறுத்து அருந்ததிய மக்கள் போராடினர்.

இதையடுத்து, காளியம்மன் கோவிலைச் சுற்றிலும் உள்ள தீண்டாமைச் சுவரின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் 6 அடி அகலத்துக்கு உடைக்க மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டார். சுவருக்குள் உள்ள காலி இடத்தில் அங்கன்வாடி கட்டடம் கட்டவும், கோவிலை இருதரப்பினரும் பயன்படுத்தவும் ஆட்சியர் அனுமதி கொடுத்தார்.

Advertisment

ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்டது. அருந்ததிய மக்கள் மலையிலிருந்து கீழே இறங்கினர். ஆனால், இரு பிரிவினருக்கும் இடையே எழுந்துள்ள கண்ணுக்குப் புலப்படாத பிரிவினைச் சுவர் தகர்க்கப்பட்டதா? என்ற கேள்விக்கு சாதகமான விடையை அடுத்தடுத்த நிகழ்வுகள் மூலம் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு சந்தையூர் மக்களுக்கும், தலித் அமைப்பினருக்கும் உள்ளது.