"உச்சநீதிமன்ற தீர்ப்புபடி கட்டாயம் அமைக்க வேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்கிறார்கள் மத்திய ஆட்சியாளர்கள். அதற்காக ஏகப்பட்ட பொய்க் கதைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள்'' என்கிறார்கள் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள்.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஒரு திட்டம் என இருக்கிறதே தவிர தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே பிரச்சினையாகியுள்ள காவிரி விவகாரத்தை தீர்ப்பதற்கு "காவிரி மேலாண்
"உச்சநீதிமன்ற தீர்ப்புபடி கட்டாயம் அமைக்க வேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்கிறார்கள் மத்திய ஆட்சியாளர்கள். அதற்காக ஏகப்பட்ட பொய்க் கதைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள்'' என்கிறார்கள் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள்.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஒரு திட்டம் என இருக்கிறதே தவிர தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே பிரச்சினையாகியுள்ள காவிரி விவகாரத்தை தீர்ப்பதற்கு "காவிரி மேலாண்மை வாரியம்'தான் தீர்வு என சொல்லவில்லை என்பதுதான் மத்திய அரசு தரப்பின் முதல் பொய். உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், "காவிரி பிரச்சினையை தீர்ப்பதற்கான தீர்வு என்பது காவிரி நடுவர் மன்றம் குறிப்பிட்ட "காவிரி மேலாண்மை வாரியம்' என்பதே எனத் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. தீர்ப்பின் 335-வது பக்கத்தில் "காவேரி பிரச்சினையை தீர்க்கும் கருவி (ஙங்ஸ்ரீட்ஹய்ண்ள்ம்) என்பது காவிரி மேலாண்மை வாரியம்' என தெளிவாக குறிப்பிட்டுள்ளது. (காண்க:- நீதிமன்றத் தீர்ப்பு வரிகள்)
அதேபோல் மத்திய நீர்ப்பாசனத்துறை, காவிரி பாயும் மாநிலங்களின் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவை உருவாக்கி காவிரி மேலாண்மை குழுவின்படி உருவாக்கியுள்ளது என்பது இன்னொரு பொய்.
அப்படி எந்தக் குழுவும் உருவாக்கப்படவில்லை. இப்படி ஒரு குழுவை காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதில் அமைக்கலாம் என ஒரு ஆலோசனையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது என்பது மட்டும்தான் உண்மை.
வருகிற புதன்கிழமை நடைபெறப் போகும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நீர்ப்பாசனத் துறையின் இந்த ஆலோசனையை ஏற்கலாமா? வேண்டாமா? என ஆலோசித்து முடிவு செய்யும் என்கிறார்கள் டெல்லி தரப்பினர்.
"காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால் கர்நாடக அணைகள் எல்லாம் வாரியத்தின் சொத்துக்களாக மாறிவிடும். அது கர்நாடகத்திற்கு பாதகமாக அமையும். எனவே அணைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லாத ஒரு குழுவை அமைக்கலாம்' என கர்நாடகாவில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேவகவுடா கட்சி ஒரு ஆலோசனை முன்வைத்தது. அதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. அதனால்தான் கோழிக்கோடு நகருக்கு 5 டி.எம்.சி. தண்ணீர் வேண்டும் என காவிரி தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென கேரள மாநிலம் தன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு போட்டிருந்தது. கர்நாடக குழு அப்படி எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தை சேர்ந்தவர்கள்.
கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில்லை என்பதில் மிக தெளிவாக இருக்கிறது மத்திய அரசு. அமைதியாகக் கிடக்கிறது எடப்பாடி அரசு.
-தாமோதரன் பிரகாஷ்