Advertisment

ராணுவத்தினர் கொதிப்பு! ஆள் இல்லா இடத்தில் கேண்டீன்?

canteen

ரு நேரத்தில் ஜெ.வே தலையிடும் அளவுக்கு முக்கியமான கேண்டீன் இது என்கிறார்கள் பாளையங்கோட்டையில் இயங்கிய மிலிட்டரி கேண்டீன் இடமாற்ற விவகாரம் குறித்துப் பேசுபவர்கள்.

Advertisment

இங்கு ஹார்டுவேர், தங்கநகைகள் தவிர அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களும் கிடைக்கும்.

armycanteen

கிட்டத்தட்ட மெகா சூப்பர் மார்க்கெட் போல 12 கோடி ரூபாய் அளவிலான அப்டூடேட் ஸ்டாக்குடன், இந்தக் கேண்டீன் பாளையங்கோட்டை நகரத்தின் மையப்பகுதியில் 28 ஆண்டுகளாக எளிதில் வந்து போகக்கூடிய இடத்தில் இயங்கியதை நகரத்துக்கு வெளியே மாற்றிவிட்டனர்.

Advertisment

ராணுவ அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இத்தகைய கேண்டீன்களில் ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் வெளி மார்க்கெட்டில் 200 ரூபாய் ரேட் என்றால், வரிகள் தவிர்த்து 160 ரூபாய்க்கு கிடைக்கும். ஆ

ரு நேரத்தில் ஜெ.வே தலையிடும் அளவுக்கு முக்கியமான கேண்டீன் இது என்கிறார்கள் பாளையங்கோட்டையில் இயங்கிய மிலிட்டரி கேண்டீன் இடமாற்ற விவகாரம் குறித்துப் பேசுபவர்கள்.

Advertisment

இங்கு ஹார்டுவேர், தங்கநகைகள் தவிர அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களும் கிடைக்கும்.

armycanteen

கிட்டத்தட்ட மெகா சூப்பர் மார்க்கெட் போல 12 கோடி ரூபாய் அளவிலான அப்டூடேட் ஸ்டாக்குடன், இந்தக் கேண்டீன் பாளையங்கோட்டை நகரத்தின் மையப்பகுதியில் 28 ஆண்டுகளாக எளிதில் வந்து போகக்கூடிய இடத்தில் இயங்கியதை நகரத்துக்கு வெளியே மாற்றிவிட்டனர்.

Advertisment

ராணுவ அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இத்தகைய கேண்டீன்களில் ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் வெளி மார்க்கெட்டில் 200 ரூபாய் ரேட் என்றால், வரிகள் தவிர்த்து 160 ரூபாய்க்கு கிடைக்கும். ஆர்மியில் ராணுவத்தினர் பயன்படுத்துகிற உயர்ரக மது வகைகளும் சலுகை விலையில் கிடைக்கும்.

20 ஆயிரத்துக்கு மேற்பட்ட கஸ்டமர்களைக் கொண்ட பாளையங்கோட்டை மிலிட்டரி கேண்டீனில், மாதம் ஒன்றுக்கு பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்ததாக கூறுகிறார்கள்.

augstainதமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களில் இயங்கும் மிலிட்டரி கேண்டீன்களின் தென்னிந்தியப் பொறுப்பாளராக இருப்பவர் லெஃப்டினண்ட் ஜெனரல் ஆனந்த். அவருடைய அதிகாரத்துக்குக் கீழ் பணிபுரியும் அதிகாரிகளில் ஒருவரான ராமசுப்பு என்பவரின் பொறுப்பில்தான் தூத்துக்குடி, நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர் என ஆறுமாவட்ட கேண்டீன்கள் இயங்குகின்றன.

தமிழக அரசுக்கு சொந்தமான இடத்தில் 28 ஆயிரம் ரூபாய் வாடகையில் இயங்கிய இந்த இடத்தை சமீபத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அளந்து, சதுர அடி கணக்கில் வாடகையை நிர்ணயித்தனர். அந்த அடிப்படையில் புதிய வாடகையாக 1 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயாக நிர்ணயித்தார்கள்.

இதைக் காரணம்காட்டி நகரிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் ஆள் அரவமற்ற இடத்துக்கு மாற்றினார் ராமசுப்பு.

ஒர்த்தே இல்லாத புதிய இடத்துக்கு ஜி.எஸ்.டி. சேர்த்து 60 ஆயிரம் ரூபாய் வாடகை என்று ராமசுப்பு நிர்ணயம் செய்திருக்கிறார். இதுவரை எளிதாக சரக்குகளை வாங்கிவந்த கஸ்டமர்கள், இப்போது தனியாக ஆட்டோ பிடித்து கேண்ட்டீன் செல்லவேண்டிய அவலத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

manager-ramasubbuகஸ்டமர்களுக்குப் பாதுகாப்பற்ற பகுதி என்பதால் ராணுவ கேண்டீனில் மதுபானம் வைப்பதற்கான என்.ஓ.சி. சான்றிதழை தர முடியாது என்று மாவட்ட கலெக்டரும், ஏரியாவின் காவல் நிலையமும் மறுத்துள்ளன.

இத்தனை முட்டுக்கட்டைகளையும் கண்டுகொள்ளாமல் கேண்டீனை ராமசுப்பு ஏன் அந்த இடத்துக்கு மாற்றினார் என்றால், அந்தக் கட்டடத்தின் உரிமையாளர் மேலாளரின் சமூகத்தைச் சார்ந்தவர் என்கிறார்கள். மேலும் இடமாற்றம் செய்வதற்காக அரசு கொடுத்த ரூபாயிலும் முறைகேடுகள் நடந்திருக்கின்றன.

இந்த முறைகேடுகளை பாதுகாப்புத்துறை வரை புகாராகவும் கொண்டுபோயிருக்கிறார்கள். முடிவாக, ராணுவத்தினரின் உரிமை மற்றும் நலன்களைக் காப்பதற்காக மதுரை உயர்நீதிமன்றத்தின் படிகளிலும் ஏறியிருக்கிறார்கள்.

"மறு உத்தரவு வரும்வரை கேண்ட்டீனை இடமாற்றம் செய்யக்கூடாது. பழைய இடத்திலேயே விற்பனையைத் தொடரவேண்டும் என்று உயர்நீதிமன்றம் தடைபோட்டும் அதையும் ராமசுப்பு செயல்படுத்தவில்லை' என்கிறார் ம.தி.மு.க.வின் மாவட்ட மீனவரணிச் செயலாளர் அகஸ்டின் பெர்னாண்டோ. இவர்தான் ராணுவத்தினர் சார்பில் உயர்நீதிமன்றம் சென்றவர்.

கேண்டீன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள கட்டடம் வங்கிக் கடனில் இருக்கிறது. திடீரென்று கடனுக்காக கட்டடத்தை சீல் வைத்தால் அரசின் கோடிக்கணக்கான முதலீடும் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

மேலாளர் ராமசுப்புவைத் தொடர்புகொண்டு பேசும்போது, அவர் மீதான அத்தனை புகார்களையும் மறுத்தார். "புதிய இடத்திற்கு வந்து பொருட்களை வாங்குவதற்கு யாரும் சிரமப்படமாட்டார்கள்' என்றார்.

முன்னாள் ராணுவத்தினர் சார்பில் எம்.பி. விஜிலா சத்யானந்த், இந்த விவகாரத்தை ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரை கொண்டுசென்று பேசியிருக்கிறார். கலெக்டரின் ஆய்வு ரிப்போர்ட்டை மேலிடம் கேட்டிருப்பதால் இந்த விவகாரம் மேலும் சூடாகியுள்ளது.

-பரமசிவன்

படங்கள் : ப.இராம்குமார்

Army canteen
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe