சாதியால், மொழியால், மதத்தால், பாலினத்தால், இன்னபிற முரண்பாடுகளால், ஒடுக்கப்பட்டு சிறுபான்மையினராகச் சிதறடிக்கப்பட்ட உழைக்கும் மக்களின் விடுதலைக்கான அரசியலே தலித்தியம்!
தலித்தியம் வெல்ல வேண்டுமாயின் என்ன செய்யவேண்டும்? அமைப்பாகத் திரளவேண்டும்.
விடுதலைச் சிறுத்தைகளின் "நமது தமிழ்மண்' இதழில், இதழின் ஆசிரியரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன், 2007 ஜூன் முதல் 2016 ஜனவரி வரை எழுதிய 58 கட்டுரைகளின் தொகுப்பே "அமைப்பாய்த் திரள்வோம்'' நூல். இந்நூலை நான்கே நாளில் சிறப்பாக தயாரித்துக் கொடுத்த நக்கீரன் தயாரிப்பு மேலாளர் கௌரிநாதனை கௌரவித்து சால்வை அணிவித்து பாராட்டினார் நூலின் ஆசிரியர் திருமா.
நக்கீரன் வெளியீடான இந்நூலின் வெளியீட்டு விழா, 26-02-18 அன்று சென்னை, காமராஜர் அரங்கில் நடைபெற்றது.
தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் வெளியிட்டார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா நல்லகண்ணுவும் பெற்றுக்கொண்டார்கள்.
"இதுபோல இன்னும் பல படைப்புகளைத் தரவேண்டும்' என திருமாவுக்கு தங்கப்பேனா பரி

"இதுபோல இன்னும் பல படைப்புகளைத் தரவேண்டும்' என திருமாவுக்கு தங்கப்பேனா பரிசளித்தார், சிறப்பான வரவேற்புரை நிகழ்த்திய து.பொ.செ. வன்னிஅரசு.
வாழ்த்துரை தொடங்கியது.
ஆசிரியர் கி.வீரமணி: முள்ளை முள்ளால் எடுப்பதுபோல திருமா, நூலை நூலால் எடுத்துள்ளார். ஆமாம்... மனுநீதி நூல், பகவத்கீதை நூல், ராமாயண நூல், மகாபாரத நூல், புராண நூல் என நூல்களில் இருந்து "அமைப்பாய்த் திரள்வோம்' நூலை எடுத்திருக்கிறார்.
சூத்திரனுக்கு மேலானவன் என்கிறது மனுநீதி. கீழ்சாதிக்காரன் சாமி கும்பிடக்கூடாது என்கிறது ராமாயணம். நான்கு வர்ணங்களையும் நான்தான் படைத்தேன் என்கிறது பகவத்கீதை. இப்படி பிரிவினைக்கு ஆளாக்கப்பட்டு, சிதறுண்டு கிடக்கிறோம். புண்ணையும் காயத்தையும் சுமந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில், இவற்றைத் தடுக்க வேண்டுமாயின் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான கருத்தியலையும், நடைமுறையையும் "அமைப்பாய்த் திரள்வோம்' என்ற தலைப்பில் திருமா எழுதியுள்ளார். நான் முழுமையாகப் படித்தேன். அமைப்பாய்த் திரள்வோம், அங்கீகாரம் பெறுவோம், அதிகாரம் வெல்வோம்!
தோழர் கே.பாலகிருஷ்ணன் (சி.பி.எம். மாநிலச் செயலாளர்): தான் போராளி மட்டுமல்ல, படைப்பாளியும் என்பதை இந்நூலின் மூலம் நிரூபித்துள்ளார் தோழர் திருமா. இது விடுதலைச் சிறுத்தைகளுக்கான நூல் அல்ல, அனைத்துக் கட்சிகளுக்குமான நூல்.
சு.திருநாவுக்கரசர் (தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்) : சிலரால்தான் பேச முடியும். சிலரால்தான் எழுத முடியும். ஆனால், பேசுவதைப் போலவே எழுதக் கூடிய தலைவர் திருமா மட்டும்தான். இந்நூல் ஆங்கிலத்திலும் வந்தால், இந்தியா முழுக்கத் தேவையான நூலாகி விடும்.
வைகோ: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஐ.ஐ.டி. நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட மரியாதையைப் பார்க்கும்போது நெஞ்சம் கொதிக்கிறது. தமிழகத்தில் எங்கே சென்றாலும், குழந்தைகளின் பெயர்களைக் கேட்டாலே பயங்கரமாய் இருக்கும். அத்தனையும் வடமொழி மோகம். அதை மாற்றிய பெருமை தம்பி திருமாவைச் சேரும்.
எல்லா தொழில் முனைவர்களும் வாருங்கள், ராஜ்பவன் கதவுகளைத் திறந்து வைத்துள்ளேன் என்று அழைக்கிறார் இங்குள்ள ஆளுநர். நான் கேட்கிறேன், "ஆர் யூ எ கவர்னர் ஆர் புரோக்கர்?, ஆர் யூ ஏ கவர்னர் ஆர் மிடில்மேன்?'
நக்கீரன் ஆசிரியர்: அண்ணன் திருமா அவர்களின் இப்புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்கு முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. எங்கள் அலுவலகத்தை அடித்து நொறுக்க வந்ததைக் கண்டித்து, குரல் கொடுத்தவர்களில் அண்ணனும் ஒருவர்.
மூத்த தோழர் நல்லகண்ணு: "இந்த நூல் காலத்திற்கும் நேரத்திற்கும் பொருத்தமான நூல். "தொழிலாளர்களுக்கு ஒற்றுமை தேவை. ஒன்றுபட்ட அமைப்பாய் இருக்கும்போதுதான் ஒற்றுமையாகத் திகழ முடியும்' என்பது புரட்சியாளர் லெனின் சொன்னது. மார்க்சியத்தையும், அம்பேத்கரியத்தையும் கையில் எடுத்திருக்கிறார் திருமா. இந்த நூல் நாளைய சமுதாயத்திற்குத் தேவையான நூல்.
சமஸ் (பத்திரிகையாளர்): தற்போதுள்ள அரசியல் அமைப்பிற்கும், சூழ்நிலைகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தேவையான நூல் இது.
(மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சி.பி.ஐ. மாநில செயலாளர் இரா.முத்தரசன், கவிஞர் தணிகைச்செல்வன், வி.சி.க. பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோரும் உரையாற்றினார்கள். வி.சி.க. பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் அருமையான தொகுப்புரையை வழங்கினார்)
தொல்.திருமாவளவன்: வரலாற்றுத் தேவை என உணர்ந்ததாலும், காலம் எனக்கீந்த பட்டறிவாலும் இந்நூலை இயற்றினேன். இந்தநூலை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லுகின்ற விழாவாக இவ்விழா அமையவேண்டும். அதற்கு இந்த தலைவர்களின் வருகை ஏதுவாக இருக்கும்.
தமிழில் பெயர் சூட்டுங்கள் என்று நான் சொன்னபோதுகூட என் தந்தைக்கு தமிழ்ப்பெயரை சூட்டிய பிறகுதான் சொன்னேன். தலைமுறை தலைமுறையாக ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் ஆளாகிறபோது அதை எதிர்ப்பதற்கு அமைப்பும் கோட்பாடும் அவசியமாகிறது.
தொல்.திருமாவளவனின் "அமைப்பாய்த் திரள்வோம்' நூல் வெளியீட்டு விழாவை, இடதுசாரி தலைவர்களையும், கட்சிகளையும் ஓரணியில் திரளவைத்த வெற்றிவிழா என்றுதான் கூறவேண்டும்.
-அருண்பாண்டியன்
புதிய விருது!
மார்க்சிய ஆய்வாளரும் மூத்த பத்திரிகையாளருமான இரா.ஜவஹர் பேசும்போது, ""விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆண்டுதோறும் அயோத்திதாசர், அம்பேத்கர், பெரியார், காமராஜர், செம்மொழிஞாயிறு ஆகிய பெயர்களில் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் பெயராலும் விருது வழங்கப்பட வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார். அவையினர் பெருத்த கரவொலி எழுப்பினர்.
உடனே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் ""இந்தக் கரவொலியே கோரிக்கை ஏற்கப்பட்டதாக அறிவிக்கிறது'' என்று மகிழ்ச்சியோடு அறிவித்தார்.