அதானி குழுமத்தின் ஆஸ்திரேலிய நிலக்கரிச் சுரங்கத் தொழிலுக்கு பல வங்கிகள் கடன் கொடுக்க மறுத்துவிட்டன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இத்திட்டத்திற்காக ஒரு பில்லியன் டாலர் வழங்க முன்வந்ததாகவும், ஆனால் இப்பொழுது அக்கடனை வழங்க மறுத்துவிட்டதாகவும் இங்கு (ஆஸ்திரேலியாவில்) செய்திகள் வெளியாகி உள்ளன.
உலகத்தின் முதல் 20 பெரிய வங்கிகளில் சி.டி. பேங்க் குழுமம், ஜே.பி. மோர்கன் சேஸ், கோல்டன் சாஷ், ட்யூஷ் பேங்க், இராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லேண்ட், ஹெச்.எஸ்.பி.சி., பார்க்லேய்ஸ், பி.என்.பி. பரிபச், க்ரெடிட் அக்ரிகோல், சொசைட்டெ ஜெனெரல், நேஷனல் ஆஸ்ட்ரேலியா பேங்க் ஆகிய பத்துக்கும் மேற்பட்ட வங்கிகள் அதானி குழுமத்தின் இந்த நிலக்கரிச்சுரங்கம், ரயில் மற்றும் துறைமுகத் திட்டத்திற்கு கடன் வழங்க மறுத்துவிட்டன.
ஆனாலும், அதானி குழுமம், "இந்நிறுவனங்கள் கடன் வழங்காவிட்டாலும் எங்களால் இத்திட்டத்தை வெற்றிகரமாக நடத்தமுடியும்' என்றே இன்னமும் கூறிவருகிறார்கள்.
கேள்விக்குறியான நம்பகத்தன்மை:
அதானியின் நம்பகத்தன்மையும், அந்நிறுவனத்தின் மூடுமந்திர, வெளிப்படையற்ற செயல்பாடுகளும் அந்நிறுவனத்திற்கு இங்கு மிகப்பெரிய சிக்கலை உருவாக்கியுள்ளன. ஆஸ்திரேலியாவில் அதானி குழுமத்தின் சார்பாக 26 நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. எதற்காக இத்தனை நிறுவனங்கள்? "வரிஏய்ப்பு செய்வதற்காகத்தான் அதானி குழுமம் இத்தனை நிறுவனங்களைப் பதிந்துவைத்துள்ளது'’என்று வருமான மற்றும் வணிகவரி விற்பன்னர்கள் கூறுகிறார்கள்.
இது குறித்து ஆஸ்திரேலிய அரசுத் தொலைக்காட்சி நிற

இது குறித்து ஆஸ்திரேலிய அரசுத் தொலைக்காட்சி நிறுவனமான ABC வெளியிட்ட தகவல்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளன. அச்செய்தியில் காட்டப்பட்ட வரைபடத்தை தமிழில் கீழே தருகிறோம்.
திருவிளையாடல்:
கார்மிக்கேல் நிலக்கரிச் சுரங்கம்; நிலக்கரியைக் கொண்டுசெல்லும் ரயில் பாதை மற்றும் அதன் பராமரிப்பு; நிலக்கரியை ஏற்றுமதி செய்யும் துறைமுகம் ஆகிய மூன்று பிரிவுகளும் அதானிக்குச் சொந்தமானது. ஆனால், நிலக்கரிச் சுரங்கத்தின் உரிமை ஆஸ்திரேலியாவில் உள்ள அதானி நிறுவனத்திடம் இல்லை. அந்த உரிமை சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமானது. சிங்கப்பூரில் உள்ள நிறுவனம், மொரீஷியசில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானது. மொரீஷியஸ் நிறுவனம் இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானது.
அதேபோல ரயில் நிறுவனம், சிங்கப்பூரில் உள்ள, கேய்மன் தீவு நிறுவனத்திற்குச் சொந்தமானது. அதுவும், அதானியின் ஆஸ்திரேலிய நிறுவனத்திற்குச் சொந்தமானது அல்ல.
ஒரு நாட்டில் தொழில் தொடங்கப்போகிறவர் அந்த நாட்டில் தொடங்கியுள்ள நிறுவனத்தின் பெயரிலேயே எல்லா உரிமைகளையும் வைத்திருக்க வேண்டியதுதானே என்ற கேள்வி உங்களுக்குத் தோன்றலாம். ஏனென்றால் நாம் சாமானியர்கள். ஆனால், தொழிலதிபர்களோ பெரும் அறிவாளிகள். அவர்கள் எந்த நாட்டிற்கும் வரி செலுத்தாமல் அந்த நாட்டின் வளத்தைச் சுரண்டுபவர்கள். அதனால்தான் இந்த திருவிளையாடல் சித்து வேலைகள் எல்லாம்.
வரி ஏய்ப்பு:
உலகில் உள்ள எல்லா பெரிய நிறுவனங்களுமே வரி ஏய்ப்பு செய்வதில் கில்லாடிகள். ஏபிசி தொலைக்காட்சியின் ஆய்வாளர் ஸ்டீவன் லாங், அபட் பாய்ன்ட்டில் உள்ள துறைமுகத்தை அதானி எப்படி வாங்கினார் என்பதை விளக்குகிறார்.
முதலில் இந்த துறைமுகத்தை 9,000 கோடி ரூபாய்க்கு (1.8 பில்லியன் டாலர்) 6 ஆண்டுகளுக்கு முன்பு பம்பாய் பங்குச் சந்தையில் உள்ள ஒரு நிறுவனத்தின் பெயரில் அதானி வாங்கினார். பின்னர், அதனுடைய உரிமையை சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு மாற்றினார்.
அந்த சிங்கப்பூர் நிறுவனமோ, கரீபியன் கடல் பகுதியில் உள்ள கேய்மன் அய்லேன்ட்சில் உள்ளது. இத்தீவு இங்கிலாந்து அரசுக்குச் சொந்தமானது. கேய்மன் தீவில் உள்ள நிறுவனங்கள் வருமானவரி கட்டத் தேவையில்லை.
அதற்குப் பதிலாக ஆண்டுக்கு ஒருமுறை லைசென்ஸ்’கட்டணத்தைக் கட்டினால் போதும். இத்தீவைப் போன்று உலகில் பல நாடுகள் உள்ளன. அவற்றிற்கு ‘வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்க பூமி’ (Tax haven) என்று பெயர்.
உலக நாடுகளில் உள்ள பணமுதலைகள் எல்லாம் இதைப்போல வருமானவரி கட்டத் தேவையில்லாத நாடுகளில் நிறுவனங்களை வைத்துக்கொண்டு, அதன்மூலம் தாங்கள் பொருள் ஈட்டுகின்ற நாடுகளில் வரிஏய்ப்பைச் செய்கின்றன. ஆஸ்திரேலியாவில் வரி ஏய்ப்பைச் செய்வதற்காகத்தான் அதானி குழுமம் இத்தனை சித்து வேலைகளைச் செய்கிறது. கேய்மன் தீவிலிருந்து எப்படி வேண்டுமானாலும் இந்தியாவிற்குப் பணத்தைக் கொண்டு செல்லலாம். பாரதப் பிரதமரே பாக்கெட்டில் இருக்கும்பொழுது இதெல்லாம் ஒரு பெரிய காரியமா என்ன?
வரி ஏய்ப்பு சொர்க்க பூமிகள்:
ஏன் வரிஏய்ப்பு முதலைகள் கேய்மன் தீவு, மொரீஷியஸ் போன்ற நாடுகளில் தங்களுடைய முதன்மை நிறுவனத்தைத் தொடங்குகின்றன? சிட்னி பல்கலைக் கழகத்தின் வணிகச் சட்டப் பேராசிரியர் டேவிட் செய்கின் அவர்கள், "இந்த நாடுகளில் உள்ள நிறுவனங்கள் தாங்கள் முதலீடு செய்யும் நாடுகளுக்கு, தங்களுக்கு எப்படி முதலீட்டுப் பணம் வந்தது என்பதைச் சொல்லத் தேவையில்லை. அதேபோல், தங்களுக்குப் பணம் வந்த பாதையை மறைக்கவும் செய்யலாம். தங்களுடைய உண்மையான வருமானத்தை இருட்டடிப்பும் செய்யலாம்'’என்கிறார்.
ஆகவே, அதானி குழுமம் ஆஸ்திரேலியாவில் உள்ள நிலக்கரியை வெட்டி விற்று இலாபம் சம்பாதித்துவிட்டு, வருமானவரி கட்டாமல் தப்பிப்பதற்காகத்தான் இத்தனை வேலைகளைச் செய்கிறது.
இந்தநிலையில், ஆஸ்திரேலிய மக்களுடைய வரிப்பணத்தில் இருந்து கடன் வேறு வாங்கப் பார்க்கிறது. இதனால்தான் இப்பொழுது இங்கு அதானிக்கு எதிர்ப்பு வலுத்துவருகிறது. ஆக மொத்தத்தில், ஆஸ்திரேலியாவிற்கு அதானியால் கிடைக்கப்போவது ‘"மினரல் ராயல்டி'’என்று சொல்லக்கூடிய கனிம வரி மட்டும்தானே ஒழிய வேறில்லை.
ஒப்பந்தக்காரர்களின் வெளியேற்றம்:
இந்தச் சூழ்நிலையில் அதானி குழுமத்திற்கு அழுத்தம் அதிகமாகி வருகிறது. அதானிக்குக் கிடைக்கவிருந்த ஒரு பில்லியன் டாலர் கடனுதவிக்கு குயின்ஸ்லாந்து முதல்வர் அனஸ்டீஷியா தடை போட்டதில் இருந்தே அதானி குழுமத்திற்கு எதிரான பல செயல்கள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகின்றன. மிகப்பெரிய சுரங்க நிறுவனங்கள் முதலில் பணியைத் தொடங்கும்பொழுது, இந்தியாவில் உள்ள ‘"எல் அன்ட் டி'’ போன்ற மிகப்பெரிய ஒப்பந்த நிறுவனங்களையே பயன் படுத்துவார்கள். ஏனென்றால், அவர்களிடம் பயிற்சிபெற்ற பணியாளர்கள் மட்டுமல்ல, பணி செய்வதற்குண்டான முழுக்கட்டமைப்பும் இருக்கும். அப்படிப்பட்ட கட்டமைப்பை ஆஸ்திரேலியாவில் கொண்ட ஒரு சுரங்க ஒப்பந்த நிறுவனம் "இ டி அய் டவ்னர்' (EDI Downer) என்ற நிறுவனம். இவர் களைத்தான் அதானி குழுமம் தங்கள் சுரங்கப் பணிகளுக்கு ஒப்பந்தம் செய்திருந்தது. டவ்னர் நிறுவனம் இரண்டு மாதங்களுக்கு முன் தங்களுடைய ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டது.
டவ்னரைப் போலவே, ஆரிசோன் (Aurizon) என்ற நிறுவனம், அதானியின் கார்மிக்கேல் சுரங்கம் உட்பட்ட பகுதிகளுக்கான ரயில்பாதை மேம்பாட்டிற்காக 5 பில்லியன் டாலர் (25,000 கோடி ரூபாய்) கேட்டு விண்ணப்பித்திருந்த கடன் விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது. இச்செயல், அதானி நிலக்கரிச் சுரங்கம் உண்மையிலேயே தொடங்கப்படுமா என்ற சந்தேகத்தின் வெளிப்பாடே என்று தெரியவருகிறது.
அதானிக்கு அதிகமாகும் அழுத்தம்:
இப்படிப் பொருளாதாரச் சிக்கல், ஒப்பந்தக்காரர்களின் வெளியேற்றம், சுற்றுப்புறச்சூழல் வல்லுநர்களின் எதிர்ப்பு, சுற்றுப்புறச்சூழல் போராளிகளின் எதிர்ப்பு என்று பலமுனைகளில் அதானிக்கு எதிர்ப்பு வலுத்துவருகிறது. அண்மையில், குயின்ஸ்லாந்து முதல்வர் பலாஷே, ‘"அதானி இந்த மாநிலத்தில் உருவாக்குவதாகக் கூறிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை; அதற்குண்டான காலக்கெடு வெகுவேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது'’என்று கூறியுள்ளார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில், அதானி நிறுவனம், “"நாங்கள் மாதம் ஒன்றிற்கு 7 மில்லியன் டாலர்களை இங்கு சம்பளமாக வழங்கிக்கொண்டிருக்கின்றோம். விரைவில் நாங்கள் சுரங்கத்தைத் தொடங்க உள்ளோம்'’என்று பதிலளித்திருக்கிறது.
அதானியின் நிலக்கரிச் சுரங்கம் ஆரம்பம் ஆகுமா என்ற ஐயம் மட்டுமே ஆஸ்திரேலிய அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் உள்ளிட்ட அனைவரின் சிந்தையிலும் தற்பொழுது உள்ளது.