சமூக ஊடகங்களில் தன்னம்பிக்கை வளர்க்கலாம், செய்தி பதிவிடலாம், கவிதை பகரலாம், ஏன் மெரினா புரட்சிபோல சமூக மாற்றங்களையே நிகழ்த்தலாம்… ஆனால், இன் றைய இளைஞர்களில் கணிசமானவர்கள் அதை வதந்தி பரப்புவதற்கும் வெட்டிப் பொழுது போக்குக்கும் பயன்படுத்துவது வேதனை யானது. ஊர்வம்பு பேசுவதற்கான நவீன முற்றங்களாகிவிட்டன சமூக வலைத்தளங்கள்.
நிகழ்ந்த சூடு ஆறாத ஒரு செய்திக்கு வருவோம்.
ஆந்திர மாநிலம் குண்டூர், நீலப்பரிப்பாடு கிராமத்தை சேர்ந்தவர்கள் 80 வயதான ராஜா ராவ் –74 வயதான மங்கயம்மா தம்பதி. இவர்களுக்கு குழந்தை இல்லாததால்... ஆந்திராவிலுள்ள அகல்யா நர்சிங் ஹோம் என்கிற தனியார் மருத்துவமனையில் செயற்கை முறையில் கருத்தரிப்பிற்கு ஆலோசனை கேட்டுள்ளனர். 72 வயதாகும் மங்கயம்மாவின் உடல் நலனை கருத் தில்கொண்டு மருத்துவர் சங்கய்யா உமாசங்கர் தலைமையில் ஒரு மருத்துவக் குழு அமைத்து அனைத்துவிதமான உடல் பரிசோதனை செய்தவர்கள், முடியும் என நம்பிக்கை தந்துள்ளனர். மங்கயம்மாவுக்கு வயதுமூப்பின் காரணமாக நின்றுபோன மாதவிடாயை முதலில் திரும்பக் கொண்டுவந்துள்ளனர் மருத்துவர்கள். பின்னர் செயற்கை முறையில் கருத்தரிக்க வைத்து, கருவை அவரின் கருப்பைக்குள் வைத்தனர்.
செப்டம்பர் 5 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. இதன்மூலம் அதிக வயதில் குழந்தையை பெற்றுக்கொண்ட இந்திய மூதாட்டி என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.
இதுபற்றி பல இந்திய, சர்வதேச மீடியாக் கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஆன்லைன்களி லும் செய்தி வெளியாகியுள்ளன. இந்த செய்தி யூடியூப் சேனல்கள், முகநூல், டுவிட்டர் போன்றவற் றில் வெளிவந்தபோது, அதற்கு பலர் ஆங்கிலத்தில் கருத்திட்டுள்ளனர். ‘""உனக்கெல்லாம் எதுக்கு இந்த ஆசை? பாடையில போற வயசுல உனக்கு எதுக்கு பிள்ளை ஆசை, இந்த வயசுல பிள்ளை பெத்துருக்க... திடீரென இறந்துபோனா அந்த குழந்தைகள் அநாதைகள்தானே''’ என மிக மோசமான முறை யில் கருத்திட்டுள்ளனர். அப்படி கருத்திட்டவர் களில் பெரும்பாலானவர்கள் படித்தவர்கள்.
இதுமட்டுமல்ல... கேரளாவில் ஒரு பெண் தன்னைவிட அழகு குறைந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டபோதும், குண்டான ஒருவர் ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்ட போதும், சமூக வலைத்தளங்களில் மோசமாக, மிக வும் அருவருப்பான முறையில் கருத்தைப் பதிவேற் றிய சம்பவங்களே நடைபெற்றன. நன்கு படித்த வர்களே அதன் உண்மைத்தன்மை அறியாமல் மிக மோசமாக கருத்திடுவது சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப உறவுகளில் என்னமாதிரி யான தாக்கத்தை ஏற்படுத்தும், அதனை படிக்க நேர்ந்தால் அவர் கள் மனம் என்ன பாடுபடும் என் பதை கொஞ்சம்கூட யோசிக்காமல் பதிவு செய்கிறார்கள்.
இப்படி நமக்கு சம்பந்த மேயில்லாத ஒருவரின் தனிப்பட்ட வாழ்வை, உடலை, அழகை கிண் டல் செய்வதை, மோசமாக, ஆபாச மாக கருத்திடுவதை சட்டம் அனு மதிக்கிறதா என திருவண்ணா மலையை சேர்ந்த வழக்கறிஞர் பாசறை பாபுவிடம் கேட்டபோது, “""அரசியலமைப்புச் சட்டம் ஒருவரை விமர்சிக்க கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் அனுமதிதருகிறது. அதே சட்டம், தனி மனித விமர்சனம், அவதூறு போன்றவற்றை தடை செய்கிறது. ஒருவரது உடலை, அவரின் தனிப்பட்ட வாழ்வை அவதூறு செய்தும், கிண்டல் செய்தும், புகைப்படத்தை அவதூறாகப் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள், அந்த நபர்கள் மீது அல்லது பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மீது தகவல் தொழில்நுட்ப மற்றும் இணையதள சட்டப்படி புகார் தரலாம். குற்றம் நிரூபிக்கப்பட் டால் குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் அதிகபட்சம் 7 ஆண்டுவரை சிறைத் தண்டனை கிடைக்கும், கூடுதலாக அபராதமும் விதிக்கப்படும்'' என்றார்.
இதுபற்றி உளவியல் மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம், ""சமூக வலைத்தளங்களில் மற்றவர் களின் மனதைக் காயப்படுத்தும் மனநிலை கொண் டவர்கள் மனநோயாளிகள் அல்ல. மனநோயாளி கள் யாரையும் காயப்படுத்தமாட்டார்கள். ஆனால் சுயநினைவு உள்ளவர்கள்தான் மற்றவர்களின் மனதைக் காயப்படுத்தி ஆனந்தம் கொள்கிறார்கள்'' என நெத்தியடியாகச் சொன்னார்.
-து. ராஜா, இரா.பகத்சிங்