பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு, பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு 8 லட்சம் ரூபாய் என்று ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப் பட்டது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. நீதிமன்றமும் இதுபற்றிக் கேள்வி கேட்டது. குறிப்பாக, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தவர்களுக்கான இட ஒதுக் கீட்டு ஆண்டு வருமான வரம்பு 2.5 லட்சம் ரூபாயாக மட்டுமே இருந்த தால், அவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனை கவனத்தில் கொண்ட தமிழ்நாடு அரசு, இந்த வருமான வரம்பை 8 லட்சமாக உயர்த்தியதோடு, மேலும் பல முக்கிய அறிவிப்புகளை அரசாணையாக வெளியிட்டது. இதுகுறித்து விடுதலை சிறுத் தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் இதனை வரவேற்றதுடன், எஸ்.சி, எஸ்.டி மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதி திராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கான வரம்புகளை உயர்த்தியது, உதவித்தொகை அளவை அதிகரித்தது உள்ளிட்ட அனைத்து அறிவிப்புகளுக்கும், தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்தார்.

dd

தமிழ்நாடு அரசின் அரசாணை குறித்தும், அதனால் விளை யும் நன்மைகள் குறித்தும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத் தாளர் இமையம் கூறுகையில், "தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், கல்வித் தரத்தையும் உயர்த்துவதில் தீராத அக்கறை கொண்ட அரசாக இருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய ஆட்சியின் இந்த முக்கியமான அரசாணையில், இதுவரை தமிழகத்தில் ஆதி திராவிடர் மாணவர்கள் கல்வி ஊக்கத்தொகை பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானமாக 3 லட்சம் ரூபாய் என்ற வரம்பு இருந்துவந்த நிலையில், அது 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது. இந்த ஆணையின் மூலமாக, ஏற்கனவே பயன்பெற்றுவந்த ஆதிதிராவிடர் மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்வதற்கு பெரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

dd

Advertisment

அதேபோல, முனைவர் பட்டத்துக்கான ஆய்வு செய்யக் கூடிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை, 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. அதுமட்டுமல் லாமல், இந்த ஊக்கத்தொகையைப் பெறக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையை 1,200-லிருந்து 1,600 ஆக உயர்த்தியுள்ளது. எனவே, கூடுதலாக 400 பேர் வரை பயன்பெறுவதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது. இதன்மூலம், அதிக எண்ணிக் கையிலான ஆதிதிராவிட மாணவர்கள் ஆய்வு செய்வதற் கும், முனைவர் பட்டம் பெறுவதற்கும், சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வருவதற்கும் தமிழ்நாடு அரசு பேருதவி செய்துள்ளது. இத்தகைய அறிவிப்புகளுக்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இந்த அரசுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

ஏற்கனவே மத்திய அரசு, ராஜீவ்காந்தி ஃபெல்லோ ஷிப் என்ற பெயரில் நிதியுதவி வழங்கிவந்தது. ஆனால் மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்ததும், அந்த நிதியுதவி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இஸ்லாமிய, கிறிஸ்தவ மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மௌலானா ஆசாத் ஃபெல்லோஷிப் நிதியுதவியும் மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்... தமிழ்நாடு அரசு, ஆதி திராவிட மாணவர்களுக்கு 1 லட்ச ரூபாய் ஊக்கத் தொகையை அறிவித்திருப்பது பாராட்டுக்குரிய விஷயமாகும்.

dd

Advertisment

உயர் பதவியில் இருக்கக்கூடிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள், ஐ.ஐ.டி. மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்விக் கான வகுப்புகளில் சேரும்போது, அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக, அவர்களின் அடிப்படைச் சம்பளம் மட்டுமே ஆண்டு வருமானத்துக் கான வரம்பை நிர்ணயிப்பதற்குக் கணக்கில்கொள்ளப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்தகைய அறிவிப்புகளின் மூலம், நீதிக்கட்சியின் தொடர்ச்சியான ஆட்சிதான் தற்போது நடந்துவருகிறது என்று சொல்வதை தமிழக முதலமைச்சர் மெய்ப்பித்துள்ளார்.

நம்முடைய சமூக அமைப்பு இன்றுவரை, சாதி வன்மத்தைத் தூண்டக்கூடிய சமூகமாகத்தான் இருந்து வருகிறது. இதனால் சமூகத்தின் அடித்தட்டிலிருக்கக்கூடிய மக்கள் பாதிப்பைச் சந்திப்பது தொடர்கதையாக உள்ளது. இந்த வன்கொடுமையால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பேருதவி யாக, குறைந்தபட்சம் 85,000 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 8,25,000 ரூபாய்வரை வழக்கின் தன்மைக்கேற்ப வழங்கப்பட்டுவந்தது. தற்போது இந்த உதவித்தொகையை குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாயிலிருந்து அதிகபட்சம் 12 லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. எளியோருக்கான சமூக நீதி என்பது, அவர்களைப் பாதுகாப்பதோடு, பாதிக்கப்படும் சூழலில் அவர்களுக்குக் கைகொடுப்பதாகவும், நம்பிக்கையளிப்பதாகவும் இருக்கவேண்டும். அத்தகைய சமூகநீதியை நிலைநாட்டும் வகையில் ஆதரவுக்கரம் நீட்டும் தமிழக அரசுக்கும், தமிழ்நாடு முதல் வருக்கும் இந்தத் தமிழ்ச் சமூகத் தின்மீது அக்கறை கொண்ட எழுத்தாளர் என்ற முறையில் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள் கிறேன்'' என்றார்.

கல்வி உதவித் தொகை பெறும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோருக்கான வருமான வரம்பையும் மு.க.ஸ்டாலின் அரசு உயர்த்தியுள்ளது.