Advertisment

எகிறிய நூல் விலை! முடங்கிய ஈரோடு விசைத்தறியாளர்கள்!

dd

"ஜவுளித் தொழிலை ஒரு நிலையற்ற தன்மைக்குக் கொண்டு சென்றுவிட்டது மத்திய பா.ஜ.க. அரசு' எனத் தொடர்ந்து வேதனையுடன் குரல் எழுப்பி வருகிறார்கள் ஜவுளி உற்பத்தியாளர்களும், அத்தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களும்.

Advertisment

கடந்த எட்டு வருட பா.ஜ.க. ஆட்சியில் நூல் விலையேற்றம் 300 மடங்கு கூடியுள்ளது. உதாரணத்திற்கு, பா.ஜ.க. ஆட்சிக்கு முன்பு 40 நெம்பர் நூல் 10 கிலோ 30 ரூபாய் என்றால், இப்போது 1000 ரூபாய். இதனால் உற்பத்தி யாளர்கள் தொடங்கி தொழி

"ஜவுளித் தொழிலை ஒரு நிலையற்ற தன்மைக்குக் கொண்டு சென்றுவிட்டது மத்திய பா.ஜ.க. அரசு' எனத் தொடர்ந்து வேதனையுடன் குரல் எழுப்பி வருகிறார்கள் ஜவுளி உற்பத்தியாளர்களும், அத்தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களும்.

Advertisment

கடந்த எட்டு வருட பா.ஜ.க. ஆட்சியில் நூல் விலையேற்றம் 300 மடங்கு கூடியுள்ளது. உதாரணத்திற்கு, பா.ஜ.க. ஆட்சிக்கு முன்பு 40 நெம்பர் நூல் 10 கிலோ 30 ரூபாய் என்றால், இப்போது 1000 ரூபாய். இதனால் உற்பத்தி யாளர்கள் தொடங்கி தொழி லாளர்கள் வரை அனைவரின் வாழ்வாதாரமும் சிதைந்துள் ளது. தொடர் போராட்டத்தால் இப்போது நூல் விலை ஒரளவு குறைந்துள்ளது. இதுவும் இப் போது உற்பத்தியாளர்களுக்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் ஏற்கனவே இருந்த விலையில் நூலை வாங்கித் துணி உற்பத்தி செய்துள்ளார்கள். ஆனால் இப்போது உற்பத்தி செய்யப் பட்ட ரகங்களின் விலை பழைய விலைக்கு இல்லாமல் குறைக்கப் பட்டிருக்கிறது. இதனால் உற்பத்தி செலவே நஷ்டம் என மீண்டும் போராட்டத்தில் இறங்கி விட்டனர்.

Advertisment

dd

ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம், அசோகபுரம், மாணிக்கம்பாளையம், லக்காபுரம், சித்தோடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் முழுவதும் மொத்தம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இந்த விசைத்தறி களில் காட்டன் துணி, ரயான் துணி உற்பத்தி நடைபெறுகிறது. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ரயான் துணி உற்பத்தி நடந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தியாகி வந்தது. இந்த நிலையில், ரயான் துணிகளின் விலை குறைந்துள்ளது. மார்க்கெட்டில் ரயான் துணி உற்பத்தி செய்த விலையைவிடக் குறைவாக விற்பனை ஆகிறது. இதனால் ரயான் துணி தயாரித்த விசைத்தறியாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்து வருகின்றனர். தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருவதால் இதைச் சமாளிக்கும் வகையில் சென்ற 3-ஆம் தேதி முதல் அவர்கள் உற்பத்தியை நிறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர்.

ஈரோடு மாவட்டத்தில் 50 ஆயிரம் விசைத்தறிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. விசைத்தறி களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து ஒரு வாரமாக நீடித்துவருகிறது. இந்த போராட்டம் காரணமாக ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இதனால் தினமும் ரூபாய் 6 கோடி மதிப்பிலான வர்த்தகம் முடங்கி உள்ளது. இதுவரை சுமார் 50 கோடி ரூபாய்வரை ஜவுளி விற்பனை மற்றும் உற்பத்தி வியாபாரம் முழுமை யாக முடங்கியுள்ளது. இப்படி யெல்லாம் ஜவுளித்துறை சார்ந்த மக்களை வேதனைக்குள்ளாக் கும் ஒன்றிய அரசை எதிர்த்து வலுவாகக் குரல் கொடுக்க யாருமில்லாமல் வேதனையில் ஆழ்ந்துள்ளனர் ஈரோடு மாவட்ட விசைத்தறியாளர்கள்.

nkn130722
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe