Advertisment

மனைவியைக் கொன்ற பாம்பு! ஏவிய கணவனுக்கு டபுள் ஆயுள் தண்டனை!

ss

மிக அரிதிலும் அரிதான குற்ற வழக்கு களில், குற்றம் நிரூபணமாகி தீர்ப்பு வெளி யாகும்போது அது ஏகத்திற்கு பரபரப்பாகி விடும். அதுபோன்று தான் அக்- 13 அன்று கேரளாவின் கொல்லம் மாவட்ட கூடுதல் மற்றும் சிறப்பு செசன்ஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தற்போது கேரளாவில் வைரலான துடன் ஹாட் டாபிக்காகியிருக்கிறது.

Advertisment

கேரளாவின் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியின் ரப்பர் எஸ்டேட் ஓனர் விஜயசேனன், தன் ஒரே மகள் உத்ராவை பத்தனம்திட்டாவின் அடூர் பகுதியைச் சேர்ந்த சூரஜ் என்பவருக்கு 2019-ல் திருமணம் செய்துகொடுத்தார்.

Advertisment

ff

திருமணமான சில மாதங்களில் வாழ்க்கை கசக்க, சொத்தை அனுபவிக்கவும், வேறொரு திருமணம் செய்யவும், 2020 மே 07-ன்போது கடும் விஷத்தன்மை கொண்ட பாம்புடன் உத்ராவின் வீட்டிற்கே போய், இரவு பாம்பை ஏவி மனைவியைக் கொலைசெய்தவர் மாட்டிக் கொண்டார். பாம்பை ஏவி, கட்டிய மனைவியைக் கணவனே கொலைசெய்த சம்பவம் கேரளாவை உலுக்க

மிக அரிதிலும் அரிதான குற்ற வழக்கு களில், குற்றம் நிரூபணமாகி தீர்ப்பு வெளி யாகும்போது அது ஏகத்திற்கு பரபரப்பாகி விடும். அதுபோன்று தான் அக்- 13 அன்று கேரளாவின் கொல்லம் மாவட்ட கூடுதல் மற்றும் சிறப்பு செசன்ஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தற்போது கேரளாவில் வைரலான துடன் ஹாட் டாபிக்காகியிருக்கிறது.

Advertisment

கேரளாவின் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியின் ரப்பர் எஸ்டேட் ஓனர் விஜயசேனன், தன் ஒரே மகள் உத்ராவை பத்தனம்திட்டாவின் அடூர் பகுதியைச் சேர்ந்த சூரஜ் என்பவருக்கு 2019-ல் திருமணம் செய்துகொடுத்தார்.

Advertisment

ff

திருமணமான சில மாதங்களில் வாழ்க்கை கசக்க, சொத்தை அனுபவிக்கவும், வேறொரு திருமணம் செய்யவும், 2020 மே 07-ன்போது கடும் விஷத்தன்மை கொண்ட பாம்புடன் உத்ராவின் வீட்டிற்கே போய், இரவு பாம்பை ஏவி மனைவியைக் கொலைசெய்தவர் மாட்டிக் கொண்டார். பாம்பை ஏவி, கட்டிய மனைவியைக் கணவனே கொலைசெய்த சம்பவம் கேரளாவை உலுக்கியெடுத்தது. இந்த நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்தபோதும், பாம்பை ஏவித்தான் கொலைசெய்யப் பட்டது என்பதை காவல்துறை நிரூபித்தபோதும் நக்கீரன் செய்தி வெளியிட்டிருந்தது.

உத்ராவின் பெற்றோரின் சந்தேகத்தின்பேரில் விசாரணையில் இறங்கியது கேரள போலீஸ். விசாரணையில் சூரஜ், கேரள ரூரல் க்ரைம் பிரான்ஞ்சிடம் ஒப்புக்கொண்டி ருக்கிறான். கொல்லம் ரூரல் எஸ்.பி.யான ஹரிசங்கர் மற்றும் க்ரைம் பிராஞ்ச் டி.ஒய்.எஸ்.பி.யான அசோகன், டீமினர் குற்றவாளிக்கு எதிரான 32 மெட்டீரியல் எவிடன்ஸ்களைக் கைப்பற்றி, அன்றைய தினம் உத்ராவுடன் சூரஜ் மட்டுமே இருந்ததை சாட்சியுடன் ஆதாரமாக உறுதிசெய்தனர். மூன்று நாட்கள் பாம்பைப் பட்டினி போட்டு வெறியேறிய பிறகே ஏவிக் கொலை செய்ததை ஆதாரங்களுடன் விசாரணையில் சப்மிட் செய்திருக்கின்றனர்.

ff

சூரஜ்ஜின் தாயாரான ரேணுகாவோ, "எங்க வீட்டு மாடியில் பலா மரக்கிளைகள் படர்ந்திருக்கும். அதுவழியா வந்த சாரைப் பாம்பு ஒண்ணு உத்ரா ரூமுக்குள்ள போயிருக்கு. அதப்பாத்து உத்ரா சத்தம் போட்டப்ப, சூரஜ் போயி அந்தப் பாம்ப கம்புல புடிச்சி வெளியே போட்டுட்டான். அதுக்குப் பின்னால், காலைல நா எங்க ஆடுகள வெளிய அனுப்புறப்ப விஷப் பாம்பு வந்ததப் பாத்து நா ஒதுங்கிட்டேன்.

சூரஜை கூப்பிட்டு பாம்பு பிடிக்கிற வாவா சுரேஷை வரச்சொல்லி பாம்ப பிடிச்சிட்டுப் போகச்சொன்னேன். அவர் வராததால, சவரக்காடு சுரேஷை வரவச்சிருக்கான் சூரஜ். அவர் வந்து ரெண்டு பாம்பையும் பிடிச்சிட்டுப் போயிருக்கார். இந்தப் பக்கம் பாம்புக அதிகம். இதுதான் நடந்தது''” என்கிறார்.

உத்ரா, அவரது தாய் வீட்டில் பாம்புக்கடியால் கொலையான பின்பு விசாரிக்க வந்த போலீசார் சூரஜின் தாய் ரேணுகா விடமும் விசாரித்திருக் கிறார்கள். அதுசமயம் அவர், பாம்பு பிடிப்பவ ரான சுரேஷ் பற்றிச் சொல்ல அதன்பிறகே இந்தக் கேஸில் போலீ சார் அலர்ட்டாகி சுதாரித்திருக்கிறார்கள்.

கொல்லம் கூடுதல் செசன்ஸ் சிறப்பு நீதி மன்றத்தில் அக்டோபர் 13-ஆம் தேதி விசாரணை முடிய, அக். 14 அன்று சிறப்பு நீதி மன்றத்தின் நீதிபதி மனோஜ், குற்றவாளி சூரஜிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

ff

சிறப்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞரான மோகன் ராஜ், சூரஜ் வழக்கின் அரசு தரப்பு வழக்கறிஞர். சமீபத்தில் வரதட்சணை விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட விஸ்வ மயாவின் வழக்கிற்காகவும் நியமிக்கப்பட்டவர் ஆவார்.

f"சூரஜ் வழக்கில் மேக்ஸிமம் பனிஷ் மெண்ட்டான தூக்குத் தண்டனையை எதிர் பார்த்தோம். அனைத்துப் பிரிவின் குற்றங்களும் சரியான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டி ருக்கு. தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டால், ஆறு மாதத்தில் குற்றவாளி சட்ட வழிகளின்படி கேரள உயர்நீதிமன்றத்திற்கு அப்பீலுக்குப் போய்விடுவார். நீதிமன்றமும் வழக்கை எடுத்துக்கொள்ளும். ஆனால் ஆயுள் தண்டனை கொடுத்ததால் 5 வருட சிறை வாசத்திற்குப் பின்புதான் அவனது அப்பீல் கேசை எடுக்க முடியும், சூரஜை தூக்கில் போடுவதற்கு அவனுக்கு வயது குறைவு. இதற்குமுன் அவன் மீது புகாரோ, எந்த ஒரு வழக்கோ கிடையாது. அதைக் கருத்தில்கொண்டுதான் தூக்குத் தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டிருக்கலாம்''’ என்கிறார்.

இதுபோன்று பாம்பை ஏவி கொலை செய்த நிகழ்வு அரிதிலும் அரிதானது. இந்தியா விலேயே மூன்றே மூன்று சம்பவங்கள்தான் நடந்துள்ளன. இரண்டு வட மாநிலங்களிலும், மூன்றாவது இந்த வழக்கிலும். வடமாநில வழக்குகளில் முடிவு தெரியாமல் அப்படியே போய்விட்டன. ஆனால் "மிகக் குறுகிய காலத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு தரப்பட்ட சம்பவம் இது ஒன்று மட்டுமே' என்கிறார்கள்.

"இந்த வழக்கில் கோர்ட்டும், போலீசாரும் நல்லா செயல்பட்டிருக்காங்க. ஆனா நாங்க எதிர்பார்த்த நீதி கிடைக்கல. தூக்குத் தண்டனை தரப்படும்னு நெனைச்சோம். ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டிருக்கு. அதுதான் மனசுக்கு கவலை யாயிருக்கு. நாங்க அப்பீலுக்குப் போவோம்'' என்கிறார் உத்ராவின் தந்தையான விஜயசேனன்

- மணிகண்டன்

nkn231021
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe