கடத்தப்படும் கனிம வளம்! கல்லா கட்டும் ஆளுந்தரப்பு! -எக்ஸ்க்ளூசிவ் ஆடியோ ஆதாரம்.

audio

கோவை டூ கேரளாவுக்கு பாறைக்கல், மணல் ஆகியவற்றை கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கோவை மதுக்கரையின் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் ஏற்பாட்டில் கேரளாவுக்குக் கடத்தி வந்தனர். தி.மு.க.வினர் அதைக் கண்டு கொள்ளவில்லை. கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன... என்கிற குரல்கள் அ.தி.மு.க. ஆட்சியில் யார் எழுப்பினாலும் பின்னர் அடங்கி விடுவது வெயிட்டான மர்மமாகவே இருந்தது.

ஆட்சி மாறிய பிறகு நிலைமை மாறும் என நினைத்தால், நேற்றைய ஆளுந்தரப்பினர் துணையோடு, இன்றைய ஆளுந்தரப்பினர் அதில் ஈடுபடத் தொடங்கி விட்டார்கள் என ஆதங்கப்படுகிறார்கள். இயற்கை ஆர்வலர்கள் என்ன நடக் கிறது என்பதை அறிய களத்தில் இறங்கினோம்.

audio

சொந்தக் கட்சிக் காரர்களே நம்மிடம், "கோவையில திருமலை யாம்பாளையம், பாலத்துறை, க.க சாவடியில நூத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் கடந்த பத்து வரு ஷமா அனுமதி இல்லாமல் இயங்கிட்டு இருக்கு. கட்டிடங்கள் கட்டுவதற்கான எம் சாண்ட் மணல் தயாரிக்க இங்கேயிருந்து பாறைக்கல்லை வெட்டி, கேரளாவுக்கு லாரியில கடத்திக் கொண்டு போறாங்க.

அனுமதிக்கப்பட்ட அளவைத்தாண்டி லாரிகளில் ஏற்றி, வாளையார் செக் போஸ்ட் வழியாக கேரளாவுக்குள் கொண்டு போகப்படுகின்றன. அப்படி லாரி ஒன்றை செக் போஸ்டில் தடங்கல் இன்றி அனுப்பினால், லாரி ஒன்றுக்கு 6,000 ரூபாய் கமிஷன் கிடைக்கும். ஒரு நாள் இரவு மட்டும் 150-க்கும் மேற்பட்ட லாரிகள் இப்படிய

கோவை டூ கேரளாவுக்கு பாறைக்கல், மணல் ஆகியவற்றை கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கோவை மதுக்கரையின் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் ஏற்பாட்டில் கேரளாவுக்குக் கடத்தி வந்தனர். தி.மு.க.வினர் அதைக் கண்டு கொள்ளவில்லை. கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன... என்கிற குரல்கள் அ.தி.மு.க. ஆட்சியில் யார் எழுப்பினாலும் பின்னர் அடங்கி விடுவது வெயிட்டான மர்மமாகவே இருந்தது.

ஆட்சி மாறிய பிறகு நிலைமை மாறும் என நினைத்தால், நேற்றைய ஆளுந்தரப்பினர் துணையோடு, இன்றைய ஆளுந்தரப்பினர் அதில் ஈடுபடத் தொடங்கி விட்டார்கள் என ஆதங்கப்படுகிறார்கள். இயற்கை ஆர்வலர்கள் என்ன நடக் கிறது என்பதை அறிய களத்தில் இறங்கினோம்.

audio

சொந்தக் கட்சிக் காரர்களே நம்மிடம், "கோவையில திருமலை யாம்பாளையம், பாலத்துறை, க.க சாவடியில நூத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் கடந்த பத்து வரு ஷமா அனுமதி இல்லாமல் இயங்கிட்டு இருக்கு. கட்டிடங்கள் கட்டுவதற்கான எம் சாண்ட் மணல் தயாரிக்க இங்கேயிருந்து பாறைக்கல்லை வெட்டி, கேரளாவுக்கு லாரியில கடத்திக் கொண்டு போறாங்க.

அனுமதிக்கப்பட்ட அளவைத்தாண்டி லாரிகளில் ஏற்றி, வாளையார் செக் போஸ்ட் வழியாக கேரளாவுக்குள் கொண்டு போகப்படுகின்றன. அப்படி லாரி ஒன்றை செக் போஸ்டில் தடங்கல் இன்றி அனுப்பினால், லாரி ஒன்றுக்கு 6,000 ரூபாய் கமிஷன் கிடைக்கும். ஒரு நாள் இரவு மட்டும் 150-க்கும் மேற்பட்ட லாரிகள் இப்படியாய் செல்லும். இதை மதுக்கரையில் உள்ள அ.தி.மு.க.வினர், போலீஸையும், எங்கள் கட்சி பிரமுகர்களையும் சரிக்கட்டி கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்தார்கள்.

இப்போது அ.தி.மு.க. ஆட்சி இல்லாமல் போகவே, தி.மு.க.வினர் இந்த கனிமவளக் கொள்ளையை கையிலெடுத்து விட்டனர். அ.தி.மு.க.வினர் வழிகாட்டு தலோடு, இதைச் செய்கிறார்கள் மதுக்கரை தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ராணி சித்ராவும், அவரது கணவ ரான மணியும்'' என்றனர்.

audio

இந்த தகவ லோடு நாம் ஆதாரங் களைத் திரட்டத் தொடங்கியபோது தான், அந்த ஆடி யோ கிடைத் தது.

ராணி சித்ராவின் கணவர் மணியிடம், கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ராணி பேசும் அந்த ஆடியோவில்...

ராணி : ஹலோ.. வணக்கங்க... நல்லா இருக்கீங்களா? தனியா இருக்கீங்களா? பேசலாங்களா?

மணி : தனியாத்தான் இருக்கேன் சொல்லுங்க.

ராணி : ஏதோ லாரி பாஸிங்குக்கு ஏற்பாடு பண்ணி இருக்கீங்களாம். நம்மளது ரெண்டு லாரி இருக்கு. அனுப்பி விடறீங்களா?

மணி : பாத்தீங்களா? நான் பண்றேன்னு யாருங்க சொல்றா?

ராணி : நேத்து நீங்கதானே சொன்னீங்க. இன்னைக்கு ரெடி பண்ணிடலாம்னு...

மணி : நேத்து போலீஸ்கிட்ட கேக்கலாம்னு பார்த்தோம்...

audd

ராணி : முக்கியமான ஒருத்தர் இருக்காரு...கேரளாக்காரரு. பேசலாம்னு பாத்தா விட மாட்டேங்கறாங்க. எஸ்.ஐ கொஞ்சம் ஸ்ட்ரிக்டா இருப்பாரு போல. நீங்க கொஞ்சம் இன்ப்ளூயன்ஸ் பண்ணி அனுப்பி விடறீங்களா?

மணி : சரி... ஒரு நாள்.. வேணா டைம் கொடுங்க. பேசிட்டு சொல்றேன். எந்த லாரி? லாரி பேருங்க?

ராணி : அய்யோ..மறந்து போச்சுங்களே.. கேட்டு வேணும்னா சொல்றேங்க.

மணி : எங்கிருந்து வருதுங்க?

ராணி : இங்க இருந்துதான். ஒண்ணு எட்டிமடையில இருந்து. பாலத்துறையில் செந்தில் கிரஸ்ஸர்லயிருந்து ஒரு லாரி.

மணி : சரிங்க. கட்சிக்காரங்க கேட்கறாங்க. பத்து வருஷமா ஏ.டி. எம்.கே.காரங்க பண்ணாங்க. நமக்கும் ஏதோ வருமானம் வர்ற மாதிரி பண்ணுங்கன்னு கட்சிக்காரங்க கேட்க றாங்க. எங்கே பேர் கெட்டுப் போயிரு மோங்கற பயம் வேற..

ராணி : யாருங்க பண்ணாம இருக்காங்க. எல்லாருமே பண்ணிட் டுத்தான் இருக்காங்க.

மணி : சரிங்க.

ராணி : சரிங்க... டாஸ்மாக் பார் ஏதும் பண்ணித் தர்றீங்களா?

மணி : ஏதுங்க?

ராணி : டாஸ்மாக் பார் ஏதாவது ஏற்பாடு பண்ணிக் குடுங்க. பாத்துக்கலாம்.

dd

மணி : சரிங்க பாக்கலாம். பண்ணித் தர்றேன்..

-எனச் சொல்வதோடு அந்த ஆடியோ முடிகிறது.

அதாவது, கேரளாவுக்கு பாறைகள் கடத்தும் லாரி செல்ல உதவுங்கள். பார் எடுத்துக் கொடுங்கள்.. என ராணி கேட்க , சரி என்கிறார் ஒ.செ ராணி சித்ராவின் கணவரான மணி.

இந்த ஆடியோ ஆதாரத்தோடு, வாளையார் செக் போஸ்ட்டிற்கு முன்னராய் இருக்கும், க.க சாவடி செக் போஸ்ட்டை நாம் சுற்றிச் சுற்றி வந்தோம்.

அப்போது நம்மிடம் பேச்சுக் கொடுத்த காவல் அதிகாரி ஒருவர்... "சார்... நீங்க கணிச்சது சரிதான். ஆட்சி மாறிய பிறகும் கனிமவளக் கடத்தல் தொடர்கிறது. இதோ இந்த மஃத சீட்டுதான் தமிழ் நாட்டு எல்லையைக் கடக்கவும், கேரளா வுக்குள் நுழையும் கடவுச்சீட்டு...'' என்றார். மஃத - என்றால்... உதயகுமார், கதிர், ரபீக் என்கிற பெயர்களைக் குறிக்கும். இந்த சீட்டைக் காண்பித்தால் லாரிகளை பிடிக்க மாட்டார்கள்.

உதயகுமார் கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர், கதிர் கிழக்கு மாவட்ட பொறி யாளர் அணியில் இருக்கிறார். ரபீக், கேரளா மலப்புரத்தைச் சேர்ந்தவன். கனிம வளக் கடத்தல் மூலம் கோடிகளில் புரளுபவன்.

அ.தி.மு.க. கும்பலோடு தொடர்பு கொண்டு இருந்தவன், இப்போது தி.மு.க.வினர் இணைப்பில் பிஸினஸ் செய்து வருகிறான்... ஒரு நாளைக்கு 9, 10 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது இங்குள்ள ஆட்களுக்கு. இது போதாதா'' என்றவர்... "லாரிகள் வரும் நேரமாகி விட்டது. நீங்கள் ஒதுங்கி நில்லுங்கள்...'' என்றார்.

add

நாம் பேருக்கு சோதனைச் சாவடியில் நிறுத்தப்படும் பாறை ஏற்றி வரும் லாரிகளை படம் பிடித்துக் கிளம்பினோம்.

இதுகுறித்து மதுக்கரை மேற்கு ஒ.செ. ராணி சித்ராவின் கணவர் மணியிடம் பேசினோம்... "சார்...கனிமக் கடத்தலை அ.தி.மு.க.காரங்க பண்ணியது போல... நம்மளும் பண்ணனும்னு கட்சிக்காரங்க சொன்னாங்க. ஆனா அது அஃபென்ஸ். பண்ணக் கூடாதுன்னு நாங்க முடிவெடுத்துட்டோம்... அவ்வளவுதான்... மத்த படி எதுவும் எங்களுக்கு தெரியாது. எங்களது எதிரிகள் புரளி கிளப்பி விடுகிறார்கள்...'' என்கிறார் பதட்டமாய்.

உதயகுமாரும், கதிரும்... "சார்... நாங்கதான் கனிமவளக் கடத்தல் லாரிகளை பிடிச்சுக் கொடுத்தோம். அப்படி இருக்கும்போது நாங்க எப்படி இந்த ஈனச் செயலை செய்வோம்? நாங்க, தோட்டம், துரவுன்னு நிறைய வச்சு இருக்கறோம். இந்த மாதிரி சில்லித்தனமான செயல்களில் நாங்கள் இறங்க மாட்டோம்...'' என்கிறார்கள் உறுதியாய்.

கனிம வளக் கடத்தலில் சிக்காமல் இருக்க மேற்கு ஒ.செ ராணி சித்ரா, புதிய எஸ்.பி.யாய் பதவியேற்றிருக்கும் செல்வ நாகரத்தினத்தை சந்தித்து தன்னை அறிமுகம் செய்து கொண்டதும் கோவை தி.மு.க.வில் பரபரப்பு பேச்சை கிளப்பியிருக்கிறது என்கிறார்கள்... உடன்பிறப்புகள்.

________________________

இல்லீகல் பார் வசூல்!

நமது தேடலில் கிடைத்த இன்னொரு ஆடியோவில் உதயகுமாரும், கதிரும், வழுக்கலில் இல்லீகல் பார் நடத்தும் குமாரிடம்.பேசுகிறார்கள்.

"என்ன குமார்? பணம் என்னாச்சு? எனக்கேட்க, அண்ணா...25 தான் இப்ப ரெடி பண்ண முடிஞ்சது. மீதிய லாக் டவுன் முடியுதில்லங்கண்ணா. அப்பக் குடுத்துட்டு கடையத் திறந்துக்கறோம். ஒன்றரை தர்றேன்னு சொன்னீங்க. முதல்ல எம்.எல்.ஏவுக்கு எவ்வளவு கொடுத்தீங்க?'' என்கின்றனர். அதே அமவுண்ட்தான் என்று குமார் சொல்ல, போன் அடிச்சா எடுக்க மாட்டேங்குறியே எனக் குமாரை கேட்கின்றனர். பணம் ரெடியாகாததுதான் காரணம் என்கிறார் குமார்.

nkn170721
இதையும் படியுங்கள்
Subscribe