கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்து விலை உயர்ந்த பைக்குகள் திருடுபோன நிலையில் பள்ளத்தூர் காவல் நிலையத்தில் பதிவான புகாரை வைத்துக்கொண்டு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவில் தனிப்படை ஒன்றை அமைத்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் காணாமல் போன சில பைக்குகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டிருப்பதை தெரிந்துகொண்ட தனிப்படை போலீசார் சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் விநாயகம்பட்டி கிராமத்தில் சீனி மகன் சரவணன் என்பவரை பிடித்து, அவரிடமிருந்த ஒரு பைக்கையும் கைப்பற்றி விசாரித்தனர். அவர் சில பெயர்களைச் சொன்னார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/crime_24.jpg)
அதன்படி திருநாளூர் தெற்கு அக்ரகாரம் துரைராஜன் மகன் முல்லைவேந்தனை பிடித்து, அவன் விற்ற பைக்கை கீரமங்கலம் சிவன் கோயிலருகே கொண்டுவரச்செய்து பறிமுதல் செய்தனர். இவர்கள் சொன்ன தகவலின்பேரில் கீரமங்கலம் திருவள்ளுவர் மன்றம் சீனிவாசன் மகன் கபிலனை பிடித்து அவன் விற்ற பைக்குகளையும் மீட்டு ஒரு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு 3 பேரையும் சிவகங்கை கொண்டுசென்றனர். விசாரணையில், "“பள்ளியில் படிக்கும்போதே சில முன்னாள் மாணவர்களால் கஞ்சா போதை பழக்கம் வந்தது. சொல்ற இடத்துக்கு நாங்க தரும் பண்டல்களை நீங்க கொண்டுபோய் கொடுத்தால் உங்களுக்கு கஞ்சாவும் கிடைக்கும். ஒரு ட்ரிப்புக்கு ரூ.10,000 பணமும் கிடைக்கும்னு சொல்லி, சிலர் எங்களை அணுகினாங்க. வெளி யூருக்கு கஞ்சா கொண்டு போகணும். அதுக்கு காஸ்ட்லியான பைக் வேணும். நீங்க விலைகொடுத்து வாங்க முடியாது. அதனால எங்கேயாவது நல்ல பைக்குகளா திருடிட்டு வந்துடுங்கன்னு சொன்னாங்க. இதற்காக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பைக் திருடி வந்தோம்.
முழு கொரோனா ஊரடங்கு நேரத் தில் கொடைக்கானல் வரை ஒரு பைக்ல 2 பேர் என பல பைக்குகள்ல கஞ்சா பண்டல்களை கொண்டுபோய், அவங்க சொல்ற ஆட்களிடம் கொடுத்ததும் பணம் கொடுத்தாங்க. ஒரே ரூட்ல 2 முறைக்கு மேல ஒரே பைக்ல போனால் செக்போஸ்ட்ல சந்தேகம் வரும்னு அந்த பைக்குகளை கீரமங்கலத்தில் ஒரு பழைய இரும்புக் கடையில வித்துடுவோம். (நாகை மாவட்டத்தில் திருடி புதுக்கோட்டை மாவட்டத்தில் விற்பனை).
போன வருசம் கீரமங்கலம் அருகே ஒரு பையன் பைக் விபத்தில் இறந்ததுகூட திருக்கோவிலூர்ல திருடின பைக்தான். நாங்க இப்படி புதுப் புது காஸ்ட்லி பைக்ல சுத்துற தைப் பார்த்து பசங்க நிறைய பேர் பைக் வேணும்னு கேட்டாங்க. அதனால சிவகங்கை, திருப்பூர், கோவை, புதுக்கோட்டை என்று பல மாவட்டங்களிலும் த15, ஃபங போன்ற காஸ்ட்லியான பைக்குகளைத் திருடிவந்து குறைந்த விலைக்கு வித்தோம். எங்க டீம்ல நிறையபேர் இருக்காங்க. எல்லாருமே கஞ்சா அடிமைதான். பைக் விற்கும் பணத்தில் சில நாளைக்கு கடைகள்ல நல்லா சாப்புடுவோம் அவ்வளவுதான்'' என்றிருக் கின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/crime1_8.jpg)
இவர்களை இயக்கும் பெரிய கஞ்சா வியாபாரிகள் யார் என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பதுதான் வேதனை. பலமுறை சிறைக்குப்போய் வந்துவிட்டதால் அடுத்தடுத்து தொடர்ந்து சங்கிலிப் பறிப்பிலும் இறங்கியுள்ளனர் இவர்கள்.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம் கடற்கரை பகுதியிலிருந்து தொடர்ந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தல் நடந்துகொண்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்ட வந்திதா பாண்டேயின் தனிப்படை எஸ்.ஐ. பாலமுருகனுக்கு தஞ்சை மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டை எல்லை கிராமமான புளிச்சங்காடு கைகாட்டி வழியாக ஒரு பைக்கில் கஞ்சா பண்டல்கள் கொண்டுவருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து உஷாரான தனிப்படை போலீசார், புளிச்சங்காடு கைகாட்டி விரைந்து அந்த வழியாக பைக்கில் மூட்டையுடன் வந்த இருவரை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பதில் சொல்லியிருக்கின்றனர். அவர்களிடமிருந்த மூட்டையைப் பிரித்துப் பார்த்தபோது அதில் கஞ்சா பண்டல் பண்டலாக இருந்தது தெரியவந்தது. உடனே அவர்கள் இருவரையும் கைதுசெய்து கஞ்சா பண்டல்கள், பைக் ஆகியவற்றை கைப்பற்றி ஆலங்குடி மதுவிலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணமல்லி இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசா ரணையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் கோட்டைப்பட்டினம் வடக்குத் தெரு ராஜ்முகமது, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த நாகேந்திரகுமார் என்பது தெரியவந்தது. மேலும் இந்த கஞ்சா பண்டல்கள் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட இருந்ததாகக் கூறியுள்ளனர். இதில் நாகேந்திரகுமார் ஏற்கனவே இலங்கைக்கு பொருட்கள் கடத்திய வழக்கில் உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
-செம்பருத்தி
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-11/crime-t.jpg)