ஸ்மார்ட் சிட்டி ஊழல்! மந்திரி மோசடிக்கு பொறியாளர் சஸ்பெண்ட்!

minister-velumani

ழல் செய்ய தடையாய் இருக்கும் அதிகாரியை இடமாற்றம், சஸ்பெண்ட் என பந்தாடும் அரசின் நடவடிக்கைக்கு பின்னணியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி இருக்கிறார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

electricity-corruptionமதுரையில் 12 ஆண்டுகள் பவர்புல் பொறியாளராக இருந்த மதுரம் திடீரென்று தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அந்த உத்தரவை நீதிமன்றம் மூலம் ரத்து செய்தவுடன், நான்கு புதிய குற்றச்சாட்டுகளை கூறி இடைநீக்கம் செய்துள்ளது அரசு.

இதன் பின்னணி குறித்து ப

இதன் பின்னணி குறித்து பொறியாளர் மதுரம் பேச மறுத்த நிலையில், அவருக்கு நெருக்கமானவர்கள் அதிர்ச்சிகரமான ஊழல் விவகாரங்களை அடுக்கினர்.

""2003-04 ஆண்டுகளில் மதுரை மாநகராட்சியில் ஜே.சி.பி.ரக வாகனம் வாங்கியதில் முறைகேடு, மாநகராட்சியில் பதவி உயர்வு பேனல் விவகாரத்தில் தவறான ஆட்களை நுழைத்தது, எல்லீஸ் நகரில் அப்ரூவல் இல்லாமல் 104 வீடுகள் கட்டியது மற்றும் ரூ.6 கோடியில் கட்டப்பட்ட மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலைய விவகாரம் ஆகியவற்றைக் காரணம் காட்டித்தான் பொறியாளரை அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

minister-velumani

கையெழுத்து அதிகாரம் மதுரத்திற்கு இருந்தாலும், இவருக்கு மேல் அன்றைய மேயரும், மதுரை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராஜன்செல்லப்பா மற்றும் கமிஷனருக்குத்தான் முக்கிய அதிகாரம் இருந்தது. மதுரை ஸ்மார்ட் சிட்டிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1000கோடி மதிப்பிலான பணிகளையும், முல்லைப்பெரியாறு மதுரை குடிநீர்த் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.1000 கோடி மதிப்பிலான பணிகளையும் தங்களுடைய 8 நிறுவனங்களுக்கு வழங்குமாறு அமைச்சர் வேலுமணி தரப்பு தொந்தரவு செய்துள்ளது. ஆனால் இவரோ, ஒப்பந்தம் எடுப்பதற்கு முறைப்படி நிபந்தனைகளை விதித்திருக்கிறார். இதுதான் இவர் சஸ்பெண்டிற்கு காரணம் என்கிறார்கள்.

"ரூ.2000 கோடி பணிகளைக் சுருட்டப் பார்க்கிறது அமைச்சரின் கூட்டம்' என்கிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை வழக்கறிஞர் பாஸ்கர் மதுரம். கடந்த ஆண்டில் மட்டும் உள்ளாட்சித்துறையில் 131 டெண்டர்களில் ஒரே ஒரு டெண்டரை மட்டும் விட்டுவிட்டு மீதமுள்ள 130 டெண்டர்களை லபக்கியது அமைச்சர் வேலுமணிக்கு வேண்டிய கே.சி.பி. என்ஜினியர்ஸ் லிமிடெட் உள்ளிட்ட 8 நிறுவனங்கள். இதை தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினும் சுட்டிக்காட்டியிருந்தார். தங்கள் இஷ்டம்போல் ஒப்பந்ததாரர்களின் தகுதிகளை குறைத்தும் மாற்றி, மாற்றியும் விளம்பரமாக வெளியிட்டுள்ளது மாநகராட்சி தரப்பு. அமைச்சருக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு மொத்தமாக ரூ.2000கோடி பணிகளையும் கொடுத்துவிட வேண்டும் என்பதற்கான சதியே பொறியாளர் மதுரம் சஸ்பெண்ட்'' என்கிறார் வழக்கறிஞர் பாஸ்கர் மதுரம்.

-நாகேந்திரன்

nkn091018
இதையும் படியுங்கள்
Subscribe