மிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கப்பட்டு நகரை மேம்படுத்தும் வேலைகள் முடுக்கிவிடப்பட்டன. இந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரையடுத்து, அதனை விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான டேவிதார் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

2015-ஆம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட் டத்தை ஒன்றிய அரசு கொண்டுவந்தது. நாடுமுழுவதும் 5 ஆண்டுகளில் 100 ஸ்மார்ட் சிட்டி களை உருவாக் குவதே திட் டம். அதனடிப் படையில் முதற்கட்டமாக தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, தஞ்சை, சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக் குடி, திருநெல்வேலி, திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய 11 இடங்களில் இந்த திட்டத்தைச் செயல்படுத்த முடிவுசெய்யப்பட்டது. அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

smartcity

Advertisment

இந்த திட்டத்திற் கான செலவை ஒன்றிய அரசு 50 சதவிகிதமும், தமிழக அரசும் 50 சதவிகிதமும் என பிரித்துக்கொண்டு, தமிழகம் முழுவதும் நகரங்களை மேம் படுத்த 10,698 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டது. அதில் 291 திட்டங்களுக்கு 2,599 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். சென்னைக்கு மட்டுமே ரூ.1000 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு 981.54 கோடி ஒதுக்கப்பட்டதில், 37 திட்டங்களுக்கு ரூ.697.94 கோடி செலவு செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. பிரதான இடங்களில் ஸ்மார்ட் பைக் எனப்படும் சைக்கிள் பகிர்வுத் திட்டம், பாண்டிபஜாரி லுள்ள சாலை அமைப்பு, ஆன்ஸ்ட்ரீட் பார்க் கிங் மேனேஜ்மெண்ட் சிஸ்டம், தி. நகரில் எல்இ.டி மற்றும். எல்.டி.டி விளக்கு மாற்றுதல், 28 ஸ்மார்ட் வகுப்பறைகள், நேப்பியர் பாலமருகே குழந்தைகள் போக்குவரத்துப் பூங்கா, கண்ணம்மாப்பேட்டை சுடுகாடு நவீன மயாக்கல், ஏ.பி.டி. பகுதியில் தகன மறு சீரமைப்பு, மிஸ்ஸிங் லிங்க் இணைத்தல் என அனைத்து திட்டங்களுக்கும், டெண்டர் விடப் பட்டதாகச் சொல்லப்பட்டு அன்பரசன், கே.சி.பி. சந்திரசேகரன் என முன்னாள் அமைச்சர் வேலு மணியின் சொந்தபந்தங்களுக்கும் பினாமி களுக்குமே டெண்டர் விடப்பட்டுள்ளது.

இவர்கள் செய்த ஊழலை, சென்னையில் பெய்த மழை அம்பலப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் சிட்டிக்காக அதிகமாக செலவு செய்யப்பட்ட தும், மேம்படுத்தப்பட்டதும் தி. நகர்தான். 200 கோடி செலவு செய்யப்பட்டிருந்தும் மழை நீர் செல்ல வழியில்லாமல் பல பகுதிகளில் நாட் கணக்கில் தண்ணீர் தேங்கிநின்று பொதுமக்க ளை அவஸ்தைக்குள்ளாக்கியது. குளங்கள், ஏரிகள், கடலுக்குச் செல்லும் மழைநீர் வடிகால் இவற்றில் எங்கெல்லாம் இணைப்பு இல்லையோ, அங்கெல்லாம் இணைப்பை ஏற்படுத்துவதன் மூலமாக மழைநீர் தேங்காமல் தடுக்கப்படும். ஆனால் டெண்டர் எடுத்தவர்கள் சரியான முறையில் இணைப்பை ஏற்படுத்தாம லும், தரமற்ற முறையில் கட்டியதாலும் தண்ணீர் வந்தவுடன் மிஸ்ஸிங் லிங்குகள் உள்ளேயே மண் சரிந்து விழுந்தும், தண்ணீர் போகவேண்டிய அந்த கால்வாய் அடைத்துக் கொள்வதால் மாம்பலம், தி.நகர், அசோக் நகர் என பல இடங்களில் தண்ணீர் தேங்கிநின்று மக்களை அவஸ்தைக்குள்ளாக்கியது..

ss

Advertisment

எம்.டி.எச். ரோட்டில் தொடங்கி அசோக் அவின்யூ வரை பல்வேறு இடங்களில் இதேநிலைதான். இவர்கள் கட்டிய அனைத்து கட்டுமானத்திலும் எம்.சாண்ட் போடப்பட்டு தான் கட்டப்பட்டுள்ளது. எம்.சாண்ட் மார்க்கெட் மதிப்பு பார்த்தால் ஒரு யூனிட்டுக்கு 4,070 ரூபாய். ஆனால் ஆற்று மணல் விலைக்கு எம்.சாண்ட் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஒரு யூனிட் ரூ.10 ஆயிரம் என காட்டப்பட்டு டெண்டர் விடப்பட்டதில், 200 கோடியில் 70 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 39 ஏக்கர் பரப்பளவுள்ள வில்லிவாக்கம் ஏரி சீரமைப்பு ரூ45 கோடி செலவில் திட்டமிடப்பட்டது. ஏரியைத் தூர்வாரி சீரமைக்காமல், திருமங்கலம் மெட்ரோ ரயில் வேலையில் அகற்றப்பட்ட மண்ணை அள்ளிவந்து வில்லிவாக்கம் ஏரி நடுவில் கொட்டி 10 ஏக்கர் பரப்பளவில் நடுவில் பார்க் அமைத்தும் 15 ஏக்கர் மரங்கள் நட்டு பசுமைப்படுத்தியும் செயல்படுத்தியுள்ளனர். மீதமுள்ள நிலப்பரப்பில் வெறும் 5 ஏக்கர் மட்டுமே நீர்நிலை என்றால் இந்த திட்டம் யாருக்காக செயல்படுத்தப்படுகிறது?

ஏரியை ஆக்கிரமிப்பில் இருந்து காப் பாற்ற, ஏரிகளைச் சுற்றி நடைபாதை அமைத்து, மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டால் ஏரியை யாரும் ஆக்கிரமிக்க முடியாது என்று திட்டம் வகுத்தால், ஏரிக்குள்ளேயே பூங்கா, நடைபாதை அமைத்து ஏரியின் பரப்பளவைச் சுருக்கி, அந்த திட்டத்திலும் ஊழல் பண்ணியுள்ளனர். இதில் அரசியல்வாதிகளுக்கு அரசு அதிகாரிகளே உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.

அமைச்சர் வேலுமணி, அப்போதைய மாநகராட்சி கமிஷனர்களான கார்த்திகேயன், பிரகாஷ், ஏ.ஈ. நந்த குமார் என முக்கிய அதிகாரிகள் இந்த விசாரணை வளை யத்தில் சிக்கியுள்ள னர். தற்போது விசா ரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில் நிச்சயம் அதிகாரி களின் மீது நட வடிக்கை இருக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான டேவிதார் மாநக ராட்சி கமிஷனராக வும் இருந்தவர் என்பதால் இந்தத் திட்டத்தில் தொடர்புடைய கறுப்பு ஆடுகளை அறிக்கையில் அடை யாளம் காட்டுவார் என்கிறார்கள்.

smartcity

இதுகுறித்து பேசிய அறப்போர் இயக்கம் ஜெயராமன், "இவர்கள் செய்த ஊழல் வெட்டவெளிச்சமாகத் தெரிந்துள்ளது. தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையில் சிக்கும் ஆவணங் களே இதற்குச் சான்று. அழகு படுத்துவது மட்டும் இல்லாமல் அடிப்படைக் கட்டமைப்போடு செயல்படுத்துவதே ஸ்மார்ட் சிட்டியாக இருக்கமுடியும். வெறுமனே விசாரணை மட்டும் இல்லாமல் எப்.ஐ.ஆர். மூலமாக நடவடிக்கை பாய வேண்டும். அப்போது தான் மற்றவர்கள் இதுபோன்று செயல் படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக அமையும். அரசியல் வாதிகள், அமைச்சர் மீதான நடவடிக்கை மட்டும் இல்லாமல் அதிகாரிகளின் மீதான நடவடிக்கையும் இருக்கவேண்டும்'' வரும் காலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் இதுபோன்று இல்லாமல் சரியான திட்டமிடலுக்குப் பிறகே செயல்படுத்த வேண்டும்''’என்றார்.

ஆணையம் என்பது எப்போதும் மக்களின் உடனடி கொந்தளிப்பைச் சமாளிக்க தோற்று விக்கப்பட்டு, கிடப் பில் போடப்படும் என்பதே மக்களின் மனப்பதிவாக உள் ளது. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடை பெற்ற முறைகேடுகளை விசாரிக்கும் ஆணையம் காத்திரமான பரிந்துரை களை செய்து அவற்றையேற்று அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் இத்தகைய மனப்பதிவு கள் மாறும். அதற்கான அறி விப்பை டேவிதார் ஆணை யம் தொடங்கிவைக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

_______________________

வேலை நடக்கலை! காசு காலி!

ன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் இந்தியா முழுவதும் 98 நகரங்கள் தேர்வுசெய்யப்பட்டன. ஸமார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மேம்பாடு செய்வதற்கு 12 நகரங்களின் பெயரை அப்போதைய தமிழக அரசு முன்மொழிந்தது. எனினும், திண்டுக்கல் நிராகரிக்கப்பட்ட தால், 11 நகரங்கள் தேர்வுசெய்யப்பட்டன. 2015-லேயே திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையிலும் மதுரை மாநகராட்சி 2021-ல்தான் இத்திட்டம் பற்றி விவாதிப்பதற்கே முன்வந்தது. திட்டச் செயல்பாடு தொடங்கி ஐந்தாண்டுகளுக்குள் பணிகள் முடிவுக்கு வரவேண்டும்.

2020-ல் பாராளுமன்றத்தில் தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்கு, சென்னையில் 42 திட்டங்களில் 19-ம், கோயம்புத்தூரில் 73-ல் 35-ம், திருப்பூரில் 24-ல் ஒன்றுகூட முழுமையாக நிறைவுபெறவில்லை. ஈரோட்டில் 19-ல் இரண்டு மட்டும் நிறைவுபெற்றுள்ளது. வேலூரில் 30-ல் 3, சேலத்தில் 48-ல் 14, மதுரையில் 16-ல் 1, திருச்சியில் 18-ல் 1 தஞ்சாவூரில் 29-ல் 3, திருநெல் வேலியில் 27-ல் 4, தூத்துக்குடியில் 40-ல் 14 திட்டங்கள் நிறைவுபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆக ஐந்தாண்டு காலத்தில் 11 ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் ஒன்றைக்கூட முழுமையாக முடிக்கவில்லை அ.தி.மு.க. அரசு. ஏன், 50 சதவிகித பணிகள் கூட நிறைவேற்றமுடியாத கையாலாகாத அரசாக செயல்பட்டிருக்கிறது என விமர்சனம் எழுந்துள்ளது. அதேசமயம், ஸ்மார்ட் சிட்டி வேலைகள் இந்தத் திட்டத்துக்கான நிதியில் 97 சதவிகிதத்தை பயன் படுத்திக்கொண்ட மாநிலம் என்ற பெருமையை(?) பெற்றிருக்கிறது.