வேகமான செயல்பாடுகள் இல்லை, பிரச்சனைகளை தில்லுடன் கையாள்வதில்லையென்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருக்கிறார் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா.
கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்பு தேனி மாவட்டத்திற்கு இரண்டாவது பெண் கலெக்டராக ஷஜீவனா பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பல்வேறு துறைகளில் பதவி உயர்வு பெற்று கடைசியில் ஊரக வளர்ச்சித்துறையில் இயக்குநராக இருந்தபோது பதவி உயர்வு மூலம் தேனி மாவட்ட கலெக்டராக வந்தார். மக்களுடன் பழக்கவழக்க மும், அரசுப் பணிகளில் அனுபவமும் உடைய அவர், மாவட்ட மக்களுக்கு நல்லது செய்வார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள், அரசியல்வாதிகள் மத்தியில் இருந்துவந்தது.
மாறாக, கலெக்டர் அலுவலக வளாகமே சுத்தம்செய்யாமல் எங்கு பார்த்தாலும் குப்பையும், கூளமுமாகக் கிடக்கிறது. இரவு நேரங் களில் குடிகாரர்களின் கூடாரமாக இருந்துவருகிறது. இதுபற்றி கலெக்டரே சுகாதார அதிகாரிகள், போலீசாருக்கு தெரிவித்தும் கூட இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. சிலசமயம் பா-யல் தொழில்கூட நடந்துவருகிறது. புது பஸ் ஸ்டாண் டில் பள்ளம்விழுந்து பல மாதங்கள் ஆகியும் நகராட்சி நிர்வாகம் சரிசெய்யவில்லை. இந்த விசயம் கலெக்ட ருக்குத் தெரியவே, உடனே கமிசனரை தொடர்பு கொண்டு சரிசெய்யச் சொல்-யும் சரிசெய்யா மல் கிடப்பில் போட்டிருந்தனர். இந்த நிலை யில் அரசு நிகழ்ச்சிக்காக தேனி வந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி "ரோடுகள் சரியில்லை அதைச் சரி செய்யுங்கள்'' என்று கலெக்டரிடம் கூறியிருக்கிறார். கலெக்டர், கமிசனரை சத்தம் போட்ட பின் அந்த ரோட்டைச் சரிசெய்தனர். தேனியிலிருந்து மதுரை செல்லும் மெயின் ரோட்டில் கலெக்டர் ஆபீஸ் உள்ளது. அந்த இடத்தில் வேகத்தடை போட்டிருக்கிறார் கள். அதற்கு வெள்ளையடிக்காததால் பல விபத்துக் கள் நடந்து உயிர்களும் போயிருக்கிறது. இருந்தும் வெள்ளையடிக்காமல் அலட்சியமாக விட்டிருக் கிறார்கள். இதுபற்றி கலெக்டர் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் பேசி வேகத் தடைக்கு வெள்ளையடியுங்கள் அல்லது வேகத் தடையை அகற்றிவிடுங்கள் என்று பலமுறை சொல்லியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
கொட்டகுடி ஆற்றை ஆக்கிரமித்து கடைகள் போட்டிருந்தனர். அந்த கடைகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால் அதிகாரிகளோ, கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்க விட்டுவிட்டு மீண்டும் கடைகளை போடச்சொல்லி அதற்கு 50,000 அட்வான்சும் வாங்கிக்கொண்டு, மாதாமாதம் 5000 வாடகையும் வசூலித்து வருகிறார்கள். தேனி நகரில் பல இடங்களில் தார்ச்சாலை அமைத்திருக் கிறார்கள். இந்த தார்ச்சாலை தரமில்லை என்று கலெக்டர் சொல்-யும் அதை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல், தரமில்லாமலேயே புதிய தார்ச்சாலைகளையும் போட்டுவருகிறார்கள்.
மேம்பாலப் பணிக்காக போக்குவரத்தை மாற்றியமைத்து இரண்டு மாதம் ஆகிறது. இன்னும் மேம்பாலப் பணி ஆமைவேகத்தில் நடந்துவரு கிறதே தவிர அந்தப் பணியை முடிக்க ஆர்வம் காட்டவில்லை. தொகுதி எம்.பி.யான தங்க.தமிழ்ச் செல்வன் மேம்பாலப் பணிகளை பார்வையிட்டு சீக்கிரமாக பணிகளை முடித்துக் கொடுக்கச்சொல்லி காண்ட்ராக்ட்காரர்களுக்கு உத்தரவிட்டும் பெயரள வில்தான் பணிகள் நடந்துவருகிறது. கலெக்டர் கேம்ப் ஆபீஸ் பகுதியில் திருட்டு நடப்பது தெரிந்து, கலெக்டரே எஸ்.பி.க்கு தகவல் சொல்- பாதுகாப்பு போடச்சொல்-யிருந்தார். இருந்தும் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடவில்லை.
இப்படி மக்களின் அடிப்படை வசதிகளைக் கூட கலெக்டர் சொல்லி அதிகாரிகள் பூர்த்திசெய்ய ஆர்வம் காட்டுவதில்லை. அந்த அளவுக்கு கலெக்டரை அதிகாரிகள் சரிவர மதிப்பதுமில்லை. இதனால் மாவட்ட நிர்வாகமும் சரிவர நடப்ப தில்லை. பதவி உயர்வு மூலம் கலெக்டராக வந்ததால், அதை மனதில் வைத்து அதிகாரிகள் கலெக்டர் ஷஜீவனாவை மதிப்பதில்லை என்று பேச்செழுகிறது. கலெக்டரும் அப்பதவிக்கான நிமிர்வுடன் இல்லாமல் பெயருக்கு கலெக்டராக இருந்துவருகிறார்.
இதுசம்பந்தமாக தேனியைச் சேர்ந்த வனவேங்கைகள் கட்சி மாநிலச் செயலாளர் உலகநாத னிடம் கேட்ட போது, “"திங்கள் கிழமைதோறும் பொதுமக்களிடம் வாங்கும் மனுக்கள் மீது கலெக்டர் எந்த ஒரு நடவடிக்கையும் சரிவர எடுப்பதில்லை. நான் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து மனு கொடுத்தும்கூட இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்து குறவர் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட தேனி அம்மாபட்டியில் பட்டா இடமிருந்தது. அந்த இடத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, எங்களுக்கு வீடு கட்டித்தருவதாக கூறி 110 வீடுகள் கட்டினார்கள். வீடுகளைக் கொடுக்க முன்வந்த போது நரிக்குறவர் சமூக மக்கள் எங்களுக்கும் வீடு கொடுக்கவேண்டும் என்று பிரச்சனை செய்தனர். பிரச்சனையைப் பேசித் தீர்த்து, அதை உரியவர் களுக்குக் கொடுக்க கலெக்டர் ஆர்வம்காட்டாமல் மேகமலை பகுதியில் குடியிருந்துவந்த மாற்று சமூக மக்களுக்கு அந்த வீடுகளை ஒதுக்கிவிட்டார். இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், காத்திருப்பு போராட்டம் நடத்தியும் மெத்தனப் போக்காக இருந்துவருகிறார்'' என்று கூறினார்.
ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனோ, “"கலெக்டரை (ஷஜீவனா) பார்க்க அலுவலகத்திற்கு சென்றால், வாங்க உட்காருங் கய்யா என்று கூறி குறைகளையும், கோரிக்கைகளை யும் கேட்கிறார். ஆனால் பழைய கலெக்டர் பல்லவி உடனடியாக நடவடிக்கை எடுப்பார். அதைக்கண்டு அதிகாரிகளும் பயந்துபோய் இருப்பார்கள். அந்த "தில்' இந்த கலெக்டரிடம் இல்லை'' என்று கூறினார்.
குற்றச்சாட்டுகளைப் பற்றி விளக்கம் கேட்க மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவை செல் மூலம் பலமுறை தொடர்புகொண்டும் லைனில் பிடிக்க முடியவில்லை!
-சக்தி