Advertisment

பிணவறையில் உறக்கம்! நடுநிசியில் எலும்பு ஆராய்ச்சி!! அரசு மருத்துவரா? அகோரியா? -அச்சத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்

dr

ள்ளி முடிக்கப்பட்ட சிகை, வாயைத் திறந்தாலே ஆபாசச் சொற்கள், பிணவறையிலேயே தூக்கம் என்று வினோதமானவராக உலா வரும் ஒரு அரசு மருத்துவ ரைக் கண்டு அனைவரும் மிரண்டு போயிருக்கிறார்கள்.

Advertisment

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில், தடயவியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறவர் 44 வயதான மதன்ராஜ். இவர், தன்னிடம் படித்து வரும் எம்.பி.பி.எஸ். மாணவ, மாணவிகளை ஆபாசமாகத் திட்டுவதையும், இரட்டை அர்த்தத்தில் பேசுவதையும் வழக்கமாக வைத்திருப்பதாக தமிழக முதல்வர் வரை, புகார்கள் போக, இதைத் தொடர்ந்து இவர்மீது விசாரணை நடத்த விசாகா கமிட்டியை’ அமைத்திருக்கிறார் தர்மபுரி ஆட்சியர்.

dr

மருத்துவர் அனிதா தாமரைச்செல்வி தலைமையி லான விசாகா கமிட்டி, 2019 மற்றும் 2020-ஆம் கல்வி ஆண்டில் சேர்ந்த 200 எம்.பி.பி.எஸ். மாணவ, மாணவிகளிடம் கடந்த ஜூன் மாதம் தனித்தனியே விசாரணை நடத்தியது. விசாரணையில், புகாரில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை எனத் தெரியவந்திருக்கிறதாம்.

ள்ளி முடிக்கப்பட்ட சிகை, வாயைத் திறந்தாலே ஆபாசச் சொற்கள், பிணவறையிலேயே தூக்கம் என்று வினோதமானவராக உலா வரும் ஒரு அரசு மருத்துவ ரைக் கண்டு அனைவரும் மிரண்டு போயிருக்கிறார்கள்.

Advertisment

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில், தடயவியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறவர் 44 வயதான மதன்ராஜ். இவர், தன்னிடம் படித்து வரும் எம்.பி.பி.எஸ். மாணவ, மாணவிகளை ஆபாசமாகத் திட்டுவதையும், இரட்டை அர்த்தத்தில் பேசுவதையும் வழக்கமாக வைத்திருப்பதாக தமிழக முதல்வர் வரை, புகார்கள் போக, இதைத் தொடர்ந்து இவர்மீது விசாரணை நடத்த விசாகா கமிட்டியை’ அமைத்திருக்கிறார் தர்மபுரி ஆட்சியர்.

dr

மருத்துவர் அனிதா தாமரைச்செல்வி தலைமையி லான விசாகா கமிட்டி, 2019 மற்றும் 2020-ஆம் கல்வி ஆண்டில் சேர்ந்த 200 எம்.பி.பி.எஸ். மாணவ, மாணவிகளிடம் கடந்த ஜூன் மாதம் தனித்தனியே விசாரணை நடத்தியது. விசாரணையில், புகாரில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை எனத் தெரியவந்திருக்கிறதாம். ஆனாலும் நடவடிக்கை எதுவும் இல்லை என்றார்கள்.

முதலில், இது தொடர்பாக அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சிலரிடம் விசாரித்த போது, அவர் கள் கொஞ்சம் தயக்கத்துடனேயே பேசத் தொடங்கினர்...

"மாணவர்களிடம் அவர் எல்லை மீறிப்பேசி இருக் கிறார். குறிப்பாக, தனக்குப் பிடிக்காத மாணவர்களை ஓரினச் சேர்க்கையாளர்கள் என்றும், உன் சந்தோ ஷத்தை கற்பழித்துவிடுவேன் என்றும், ஆண் குறியை நறுக்கி விடுவேன் என்றும் திட்டி யிருக்கிறார். 'ஃபக்' என்ற சொல்லையும் அடிக்கடி பயன்படுத்தி உள்ளார். இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். நாகரிகமற்றவர் அவர்'' என்றார்கள் அவர்கள்.

இந்த மதன்ராஜ், கர்நாடகா வில் உள்ள ஒரு தனியார் கல் லூரியில் ஃபோரன்சிக் மெடிசின் படிப்பை முடித்தவராம். தன்னை ஒரு தீவிர சிவ பக்தனாக அடை யாளப்படுத்திக்கொள்கிறாராம். சவக்கிடங்கில் தூக்கம், இரவு நேரத்தில் எலும்புகளை வைத்து ஆராய்ச்சி, கூடவே மதுப் பழக்கம் என்று உலா வரும் அவர், மருத்துவரா? அல்லது அகோரியா? என்று மாணவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

Advertisment

dr

எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சிலர் கூறுகையில், ''மதன்ராஜ் சாருக்கு ஆதர வாக உள்ள சரவணன் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந் தார். கடந்த ஆண்டு அவர் ராகிங் விவகா ரத்தில் தற்கொலைக்கு முயன்று ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை ஊடகக்காரர்கள் ஐ.சி.யூ. பிரிவில் வைத்து வீடியோ எடுத்தனர். இதை மாணவர்களான தினேஷ், அபி ஷேக் உள்ளிட்ட சிலர் கண்டித்தனர். அதிலிருந்து அவர்களை மதன்ராஜ் சார் குறிவைக்கத் தொடங்கிவிட்டார். மாணவர் தினேஷை, வகுப்பில் ஏதாவது ஒரு பாடத்தைப் பற்றிப் பேசச் சொல் வார். அவருக்கு ஆங்கிலம் சரியாக வராது. அதை கேலி செய்து, அவரை அந்த வகுப்பு முழுவதும் நிற்க வைத்து விடுவார்''’என்று குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, மதன்ராஜ் மீது வேறு ஒரு புகாரையும் சொல்கிறார் கள் சக மருத்துவர்கள். "இதே மருத்துவ மனையில் பணியாற்றி வரும் மருத்துவர் ஒருவரின் மனைவி தனியாக மருத்துவ மனை நடத்தி வருகிறார். கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு அங்கு சிகிச்சைக்கு வந்த ஆனந்தன் என்பவர் திடீரென்று இறந்துவிடவே, தவறான சிகிச்சையால் தான் இறந்ததாக உறவினர்கள் விவகா ரத்தை கிளப்பினர். அப்போது, அந்த மருத்துவமனைத் தரப் பிடம் பேரம் பேசி, 15 லட்ச ரூபாயை அதே பிணவறையில் வைத்து வாங்கிவிட்டார். இதில் மாவட்டத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த ஒரு ஐ.பி.எஸ். அதிகாரிக்கும், காவல் ஆய்வாளர் ஒருவருக்கும் பங்கு கொடுத்திருக்கிறார் மதன்ராஜ்''’என்று திகைக்க வைக்கிறார்கள்.

இது குறித்தெல்லாம் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி டீன் அமுதவள்ளியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ''மதன்ராஜ் விவகாரம் பர்சனல் ஆனது. விசாகா கமிட்டி பற்றி அதன் உறுப்பினரிடம்தான் கேட்க வேண்டும். அந்த கமிட்டியும், கலெக்டரும்தான் அதற்கு பொறுப்பு'' என்று முடித்துக்கொண்டார். மாவட்ட ஆட்சியர் சாந்தியைத் தொடர்புகொண்ட போதெல்லாம், அவர் மீட்டிங்கில் இருப்பதாகவே சொல்லப்பட்டது.

dr

நாம், மருத்துவர் மதன்ராஜிடமே குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டபோது, "வகுப்பறையில் சில மாணவர்களைக் கெட்ட வார்த்தையால் திட்டியது உண்மைதான். நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. தினேஷ் என்ற மாணவருக்கு 'கம்யூனிகேஷன் ஸ்கில்' இல்லை என்பதை வைத்து அவரை டார்கெட் செய்ததும் உண்மைதான். அது என்னுடைய தவறுதான். ஒரு பாரன்சிக் மெடிசின் டாக்டராக, நீதித்துறை, காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற வேண்டியது இயல்பானது. அதை வைத்து நான் யாரையும் மிரட்ட வில்லை. அதேபோல், எந்த டாக்டரிடமும் நான் பணம் வாங்கவுமில்லை. இந்த பணியில் சேர்ந்தபோது எனக்குத் தங்குவதற்கு குடியிருப்பு ஒதுக்கப்படாததால், 4 மாத காலம் பிணவறைக் கூடத்தில் தங்கிப் பணியாற்றி வந்தேன். எலும்பு களை வைத்து சடலத்தின் வயதைக் கணக்கிட முடியும். பிணவறைக் கூடத்தில் தங்கியிருந்த காலத்தில், எலும்புகளை வைத்து இரவு நேரத்தில் ஆராய்ச்சி செய்துவந்தேன். என் மீது சக மருத்துவர்கள் திட்டமிட்டு ஏதேதோ பொய்ப் புகார்களைக் கூறுகின்றனர்'' என்றார் அழுத்தமாய்.

மதன்ராஜ் ஒப்புக்கொண்டபோதும். விசாகா கமிட்டியும், அது தொடர்பான நடவடிக்கைகளும் குறட்டை விடுகின்றன.

nkn160722
இதையும் படியுங்கள்
Subscribe