Advertisment

உதயநிதியின் ஸ்கெட்ச்! களத்தில் செ.பாலாஜி -பதட்டத்தில் மா.செக்கள்!

ss

"நமது அரசு நிறை வேற்றி வரும் திட் டங்களின் நிலை குறித்த மாவட்ட வாரியான கள ஆய்வை நவம்பர் 5, 6 தேதிகளில் கோவையிலிருந்து தொடங்கு கிறேன். கள ஆய்வுகள் நிறை வுற்றதும் கழகப் பணிகளை ஆய்வு செய்யவுள்ளேன்'' என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ளார்.

Advertisment

"முன்னதாக துணை முதல் வர் உதயநிதியோ, "மேற்கு மண்ட லம் இந்த தடவை நமக்கு மட்டுமே'' என ஸ்கெட்ச் போட் டார். இதனையே தாரக மந்திர மாக எடுத்துக்கொண்டு, "லோக் சபா தேர்தலில், முறையாக தேர் தல் பணி செய்யாதவர்கள் மாற் றப்பட்டு, சட்டசபை தொகுதி வாரியாக புதிய தேர்தல் பொறுப் பாளர்கள் நியமிக்கப்படுவர். அனைத்து நிர்வாகிகளும் ஒருங் கிணைந்து பணியாற்றி, மாவட் டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் தி.மு.க.வை வெற்றிபெறச் செய்ய வேண்டும்'' என கோவை மாவட்டத் திற்கான பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி களத்தில் பம்பரமாகச் சுழன்று வருகின்றார். இது மா.செ.க்களை பதட்டமடைய வைத்துள்ளது.

Advertisment

uu

இந்த நிலையில், கோவை சென்னீஸ் ஹோட்டலில் கோவை மாநகர் மாவட்ட வடக்கு, தெற்கு சிங்காநல்லூர் தொகுதிகள் பார்வையாளர்கள் அறிமுகக் கூட்டம், சரவணம் பட்டி எஸ். எம்.எஸ். மண்டபத்தில் கோவை வடக்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் மற்றும் கோவை, கருமத்தம்பட்டி எஸ்.என்.கே. திருமண மண்டபத்தில், கோவை தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டத்தினையும் சிறப்பாக நடத்திய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, "சின்ன வேலையாக இருந்தாலும் உடனடியாக சென்னை வருகிறீர்கள். சென்னையில் எங்கு பார்த்தாலும் கோவைக்காரர்கள் முகம். சென்னையில் இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள். வருகின்ற 5, 6 தேதிகளில் முதல்வர் இங்கு வருகின்றார். அவரிடம் உங்களது குறைகளைக் கூறுங்கள

"நமது அரசு நிறை வேற்றி வரும் திட் டங்களின் நிலை குறித்த மாவட்ட வாரியான கள ஆய்வை நவம்பர் 5, 6 தேதிகளில் கோவையிலிருந்து தொடங்கு கிறேன். கள ஆய்வுகள் நிறை வுற்றதும் கழகப் பணிகளை ஆய்வு செய்யவுள்ளேன்'' என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ளார்.

Advertisment

"முன்னதாக துணை முதல் வர் உதயநிதியோ, "மேற்கு மண்ட லம் இந்த தடவை நமக்கு மட்டுமே'' என ஸ்கெட்ச் போட் டார். இதனையே தாரக மந்திர மாக எடுத்துக்கொண்டு, "லோக் சபா தேர்தலில், முறையாக தேர் தல் பணி செய்யாதவர்கள் மாற் றப்பட்டு, சட்டசபை தொகுதி வாரியாக புதிய தேர்தல் பொறுப் பாளர்கள் நியமிக்கப்படுவர். அனைத்து நிர்வாகிகளும் ஒருங் கிணைந்து பணியாற்றி, மாவட் டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் தி.மு.க.வை வெற்றிபெறச் செய்ய வேண்டும்'' என கோவை மாவட்டத் திற்கான பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி களத்தில் பம்பரமாகச் சுழன்று வருகின்றார். இது மா.செ.க்களை பதட்டமடைய வைத்துள்ளது.

Advertisment

uu

இந்த நிலையில், கோவை சென்னீஸ் ஹோட்டலில் கோவை மாநகர் மாவட்ட வடக்கு, தெற்கு சிங்காநல்லூர் தொகுதிகள் பார்வையாளர்கள் அறிமுகக் கூட்டம், சரவணம் பட்டி எஸ். எம்.எஸ். மண்டபத்தில் கோவை வடக்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் மற்றும் கோவை, கருமத்தம்பட்டி எஸ்.என்.கே. திருமண மண்டபத்தில், கோவை தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டத்தினையும் சிறப்பாக நடத்திய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, "சின்ன வேலையாக இருந்தாலும் உடனடியாக சென்னை வருகிறீர்கள். சென்னையில் எங்கு பார்த்தாலும் கோவைக்காரர்கள் முகம். சென்னையில் இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள். வருகின்ற 5, 6 தேதிகளில் முதல்வர் இங்கு வருகின்றார். அவரிடம் உங்களது குறைகளைக் கூறுங்கள். நானே தவறு செய்தாலும் என்னைப் பற்றி முதல்வரிடம் கூறி நடவடிக்கைக்காக காத் திருங்கள். நடவடிக்கை நிச்சயம். நம்மு டைய இலக்கு, 2026 சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளையும் கைப் பற்றுவதே. லோக்சபா தேர்தலில் பெற்ற ஓட்டு களைவிட, அதிக ஓட்டுகளை, 2026 சட்டசபை தேர்தலில், ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் பெற வேண்டும். கட்சிதான் முக்கியம் என்ப தால் நடவடிக்கையில் தயவு தாட்சண் யம் இருக்காது'' என்றார் அழுத்தமாக.

சித்தாம்புதூர் பகுதியைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவரோ, "செந்தில்பாலாஜி ஜாமீனில் விடு தலையாகி அமைச்சர் பதவியேற்றபிறகே கோவை மாவட்ட உடன்பிறப்புகள் தொடர்ந்து சென்னையை நோக்கி படையெடுத்து, தங்களது உள்ளக் குமுறல்களை தொடர்ந்து கூறிவந்தனர். அமைச்சரவை மாற்றத்திற்குப் பிறகு நடந்த முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக மீண்டும் செந்தில்பாலாஜி நியமனம் செய்யப்பட்டது சிட்டிங் மாவட்டச் செயலாளர்கள் தலையில் இடியை இறக்கியது.

கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி கோவை மாவட்ட மழை வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட வந்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி. அன்றே மாவட்ட அரசு அலுவலர்கள் ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார். மழை வெள்ளப் பாதிப்புகளை பார்வையிடச் செல்லும் முன் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கோவை மாநகர் மாவட்ட உட்கட்டமைப்பு வசதிகள் நிலை தெரிவிக்கப்பட்டது. அது அவருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத் தியது.

தான் சிறைக்குச் செல்லும் முன் முதல் வரிடம் கோவை வளர்ச்சித் திட்டங்களுக்காக பல நூறு கோடியை பெற்றுத்தந்திருந்தார். அதுசம்பந்தமாக எந்தப் பணியும் நடந்ததாகத் தெரியவில்லை. அந்த கோபத்தை அரசு அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முதல் மாநகராட்சி ஆணையாளர் வரை தெறிக்கவிட்டார். கூட்டத்தில், “இதற்குக் காரணம் மூன்று மா.செ.க்கள், முன்னாள் மேயர், துணைமேயர், போதிய அனுபவமில்லாத மாமன்ற உறுப்பினர்கள், மண்டல மற்றும் நிலைக்குழு தலைவர்கள்தான் என அதிகாரிகள் தங்கள் பங்கிற்கு போட்டுக் கொடுத்தனர். இதனால் கடும்கோபமடைந்த அமைச்சர், ஆய்வுக்கூட்டத்திற்கு அடுத்து நடந்த பத்திரிகை யாளர்கள் சந்திப்பில், அருகில் எந்த மாவட்டச் செயலாளர்களையும் அமரவிடவில்லை'' என்கின்றார் அவர்.

இதேவேளையில் உளவுத்துறையோ, "ஆய்வுக் கூட்டம் நடந்துமுடிந்தவுடன் அதி காரிகள் கொடுத்த மொத்த ரிப்போர்ட்டையும் முதல்வரிடம் கொடுத்துள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி. இதில் கோவை மாநக ராட்சியில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிவரும் சுகாதார ஆய்வாளர், சுகாதார அலுவலர்கள், பொறியாளர்கள் இதர அலுவலர்கள் வரை மொத்த பட்டியலும் அடக்கம். இதில் பெருவாரியான மாநகராட்சி அதிகாரிகள், முன்னாள் அ.தி.மு.க. அமைச்ச ருக்கு விசுவாசமாக நடந்துவந்ததும், இதற்கு ஆளும் கட்சி மாவட்டச் செயலாளர்கள் முக்கிய காரணியாக செயல்பட்டுவந்ததும் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வாக்கு வங்கி பெருவாரியாக சரிவை சந்தித்தது. இதேநிலை நீடித்தால் நிச்சயம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கோவையில் மீண்டும் 10 தொகுதிகளையும் இழக்கவேண்டியிருக்கும்” என்ற உண்மையைப் போட்டுடைத்துள்ளது.

மேற்கு மண்டலத்தில் கோவை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதி களும் தி.மு.க. வசமாக மீண்டும், 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 1 மா.செ. வீதம் களமிறக்கி னால் வெற்றி நிச்சயம் என்பதால் கோவை மாவட்டத்திற்கென மீண்டும் 5 மா.செ.க்களை நியமிக்கவுள்ளது தி.மு.க. தலைமை என்கின்றனர் விவரமறிந்தவர்கள். குறிப்பாக, 5 மாவட்டச் செயலாளர்களும் புதுமுகமாகவே இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

கோவை மாநகர் மாவட்டம், கோவை மாநகர் கிழக்கு மாவட்டமாக அதாவது கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி உள்ளடங் கும். கொரோனா நோய்த்தொற்று காலத்தில் அன்றைய ஆளும்கட்சியான அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வீடுதோறும் வழங்கினார்கள். ஆனால் இந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த நா.கார்த்திக் (இப்போதைய மாநகர மா.செ.) 5 கிலோ அரிசி மூட்டைகளை வாகனத்தில் வைத்துக்கொண்டு டோக்கன் விநியோகம்செய்து டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கினார். அப்போது ஆரம்பித்த அதிருப்தி 2021 தேர்தலில் எதிரொலித்தது..

இந்த மாநகர் மாவட்டத்திற்கு கிட்டத் தட்ட 8 ஆண்டுகளுக்கு மேல் மாவட்டச் செய லாளராக தொடர்ந்து நா.கார்த்திக் பணியாற்றி வருகிறார். இந்த மாவட்டத்திற்கு புதிய மாவட்டச் செயலாளருக்கான போட்டியில் பொங்கலூர் பழனிச்சாமியின் மருமகன் டாக் டர் கோகுல் கிருபாசங்கர், சிங்கை ரவிச்சந்திரன் மற்றும் சிலருக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படு கிறது. மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது கோவை வடக்கு மாவட்டம். கோஷ்டிப்பூசல் நிறைந்த இந்த மாவட்டத்திற்கான மா.செ.க்கள் போட்டியில் டி.ஆர்.சண்முகசுந்தரம், மேட்டுப் பாளையம் முன்னாள் எம்.எல்.ஏ. பா.அருண் குமார் ஆகியோர் உள்ளனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி, கவுண்டம் பாளையம் சட்டமன்றத் தொகுதி ஆகியவை கோவை மாநகர் மேற்கு மாவட்டமாக இருந்து வந்தது. இதற்கு மாவட்டப் பொறுப்பாளராக மறைந்த பையாகிருஷ்ணன் இருந்து வந்தார். தற்போது இந்த தொகுதிகள், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி கோவை மாநகர் மாவட்டத்துடன், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி கோவை வடக்கு மாவட்டத் துடன் இணைத்துள்ளது. இந்த மாவட்டத்திற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி மகன் அசோக் பாபு, கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் பெயர்களை கழக உடன்பிறப்புகள் முன்மொழிகின்றனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கோவை கிணத்துக்கடவு, சூலூர் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது கோவை கிழக்கு மாவட்டம். இதற்கு மாவட்ட பொறுப்பாளராக மருதமலை சேனாதிபதி பணியாற்றிவந்தார். கோவை மாவட்டத்தை மூன்றாகப் பிரிக்கும் போது கோவை தெற்கு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. இதற்கான மா.செ. போட்டியில் தற்போதைய மா.செ. தளபதி முருகேசனுடன், முன்னாள் எம்.எல்.ஏ. நெகமம் கந்தசாமியின் குடும்ப வாரிசான சபரி கார்த்திகேயன் போட்டியிலிருக்கின்றார்.

கடந்த தேர்தலின்போது பொள்ளாச்சி, வால்பாறை தனி சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருந்தது கோவை தெற்கு மாவட் டம். தமிழகத்தை உலுக்கிய பாலியல் சம்பவம் நடந்தது பொள்ளாச்சிதான். இங்கே வெகு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட் பாளர் தோல்வியடைந்தது தலைமையையே அதிர்ச்சியடைய வைத்தது. தற்பொழுது மீண்டும் 5 மாவட்டமாகப் பிரிக்கப்பட்டால் மா.செ.வுக்கான போட்டியில் பொள்ளாச்சி ந.செ. நவநீதகிருஷ்ணன், ஐ.டி. விங் மாநில துணைச்செயலாளர் மருத்துவர் மகேந்திரன் ஆகியோர் களத்திலிருப்பது குறிப்பிடத்தக்கது.

கட்சிக்காரர்களை அரவணைக்கும் செந்தில்பாலாஜி, மீண்டும் மா.செ.க்கள் மாற்றம் போன்றவற்றால், கோவை மாவட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி எண்ணம் நிறை வேறும் என்கின்றனர் கழக உடன்பிறப்புகள்.

படங்கள்: விவேக்

nkn061124
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe