Advertisment

4 அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்! அமலாக்கத்துறையின் அடுத்த பாய்ச்சல்!

Senrhibalaji

மலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு, சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டி ருக்கிறது. குறைந்தபட்சம் இன்னும் ஒரு வாரத்திற்கு மருத்துவக் கண்காணிப்பில் ஐ.சி.யூ.வில் இருப்பார் என சொல்லப்பட்டி ருக்கிறது. அதே சமயம் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட, 10 நாட்களுக்கும் மேலே ஆகலாம் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

senthilbalaji

இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கும் நிலையிலும் அவரை தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கத் துடிக்கிறது அமலாக்கத்துறை. ஆனால், நீதிமன்றத்தின் சில உத்தரவுகளால் மனிதாபி மானம் காப்பாற்றப்பட்டு வருகிற

மலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு, சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டி ருக்கிறது. குறைந்தபட்சம் இன்னும் ஒரு வாரத்திற்கு மருத்துவக் கண்காணிப்பில் ஐ.சி.யூ.வில் இருப்பார் என சொல்லப்பட்டி ருக்கிறது. அதே சமயம் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட, 10 நாட்களுக்கும் மேலே ஆகலாம் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

senthilbalaji

இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கும் நிலையிலும் அவரை தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கத் துடிக்கிறது அமலாக்கத்துறை. ஆனால், நீதிமன்றத்தின் சில உத்தரவுகளால் மனிதாபி மானம் காப்பாற்றப்பட்டு வருகிறது.

செந்தில்பாலாஜியை கைது செய்துள்ள அமலாக்கத்துறை, அவரது சகோதரர் அசோக்குமாரை கைது செய்யவும் துடிக்கிறது. இதற்காக அவருக்கு ஏற்கனவே இரண்டு சம்மன்கள் அனுப்பப்பட்டன. இரண்டிலும் அவர் ஆஜராகவில்லை. இரண்டாவதாக அனுப்பப்பட்ட சம்மனுக்கு 20-ந்தேதி அசோக் ஆஜராகியிருக்க வேண்டும். ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதனால் ஏக கடுப்பில் இருக்கிறது அமலாக்கத்துறை.

இதுகுறித்து விசாரித்தபோது, அமலாக்கத்துறையின் சம்மனுக்கு ஆஜராகி அவர்களின் விசாரணையை எதிர்கொள் வதுதான் பிரச்சனைகள் வளராமல் இருக்க ஒரே வழி. ஆனால், அதைச் செய்யாமல் பிரச்சனை களை மேலும் மேலும் சிக்கலாக்கிக் கொள் கிறார்கள். மூன்றாவது முறையாக மீண்டும் ஒரு சம்மன் அனுப்ப உயரதிகாரிகள் மட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த சம்மனுக்கும் அவர் ஆஜராகாமல் இருந்தால், அசோக்குமாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கவும், அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் ரிலீஸ் செய்யவும் அமலாக்கத்துறை ஆலோசித்துள்ளது. அந்த சூழல் உருவானால், அசோக்குமாரை விசாரணையின்றியே கைது செய்வார்கள். இதற்கிடையே, அசோக்குமார் தலைமறைவாகி யிருப்பதாக அறிந்து அவர் எங்கு இருக்கிறார்? என்று தேடத் தொடங்கி, அவர் லண்டன் சென்றுள்ள விபரங்களை அறிந்துள்ளனர்.

லண்டனில் அசோக் பதுங்கியிருப்பதை அறிந்து அமலாக்கத்துறை அமைதியாக இருக்கவில்லை. மத்திய நிதியமைச்சகத்துக்கு அதனைத் தெரியப்படுத்த, தற்போது லண்டனில் அவர் என்ன செய்கிறார்? என மத்திய புலனாய்வு அமைப்பு ரகசியமாக விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது” என்று சொல்கிறது உளவுத்துறை வட்டாரங்கள். ஆனால் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான தி.மு.க.வினரோ, இந்தியாவை விட்டு அசோக் எங்கும் செல்லவில்லை என்கிறார்கள்.

இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமாக டெல்லியில் ஒரு அலுவலகம் இருக்கிறது. இதன் பொறுப்பு அதிகாரியாக தேவராஜ் என்பவர் இருக்கிறார். அவரும் அசோக்கும் மிக நெருங்கிய நண்பர்கள். எனவே தேவராஜை வேவுப் பார்த்து வருகிறது அமலாக்கத்துறை.

இது ஒருபுறமிருக்க, செந்தில் பாலாஜியை தொடர்ந்து, தி.மு.க. அமைச்சர் கள் 4 பேருக்கு குறி வைத்துள்ளதாம் அமலாக் கத்துறை. அவர்கள் துறையில் நடந்துள்ள சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. விரைவில் அவர்களுக்கு எதிரான அஸ்திரத்தை வீசவும் தயாராகி வருகிறது.

இந்த நிலையில், செந்தில்பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்கினை விசாரித்து 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசின் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். ஏற்கனவே இந்த வழக்கில் பல கட்டங்கள் விசாரிக்கப்பட்டு உரிய ஆவணங்களை போலீஸ் அதிகாரிகள் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனாலும் உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு கடந்த 40 நாட்களாக இதில் அக்கறை காட்டாத போலீஸ், தற்போது விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், செந்தில் பாலாஜிக்கு எதிராக பல விசயங்களை அமலாக்கத்துறைக்கும் வருமானவரித் துறைக்கும் போட்டுக் கொடுத்ததே தி.மு.க.வில் உள்ள சில கறுப்பாடுகள்தான் என்று சொல்லி அதிர வைக்கிறார்கள் தி.மு.க.வினரே !

nkn240623
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe