கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, மாணவிகளிடம் செய்த பாலியல் குற்றத்தை நக்கீரன் வெளிச்சத்திற்கு கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்தியது. இந்த வழக்கை ஆரம்பத்தில் இருந்து விசாரித்த சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. விஜயகுமார் திருவாரூர் எஸ்.பி. ஆக இட மாற்றம் செய்யப்பட்டார், வழக்கை விசாரித்து வந்த விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. குணவர்மன் சென்னை மாநக ராட்சி விஜிலன்ஸுக்கு மாற்றப்பட்டார், இந்த நிலை, இந்த வழக்கின் பாதையே சிவசங்கர் பாபாவுக்கு சாதகமாக கொண்டுசெல்லப்படுகிறது என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
சிவசங்கர் பாபா மீது போடப்பட்ட ஐந்து வழக்கில், மூன்று போக்சோ வழக்கு, இரண்டு மானபங்க வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று போக்சோ வழக்கில், இறுதி அறிக்கை தாக்கல் செய்யாத காரணத்தால், க்ரைம் நம்பர் இரண்டு மற்றும் மூன்று போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. க்ரைம் நம்பர் ஒன்றாம் வழக்கில், கடைசியாக 59-ஆம் நாள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதால் அந்த வழக்கில் ஜாமீன் கிடைக்கவில்லை.
க்ரைம் நம்பர் ஒன்றாம் வழக்கின் மற்றோர் குற்றவாளியான ராமநாதனின் மனைவி பாரதி, துபாயில் வில்லா 688, ஹஹா ஹாத், டவுன் ஸ்கொயர், துபாய் என்ற முகவரியில் உள்ளதாக ஜாமீன் கோரியிருந்தார். பாரதி, இந்தியா வந்தால் கைது செய்யும் விதமாக லுக்கவுட் நோட்டீஸ் வழக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை, பாரதி இந்த வழக்கில் ஆஜராகாவிட்டால் வழக்கு கிடப்பில் தள்ளப்படும் நிலை ஏற்படும். இதை காரணம் காட்டி இந்த வழக்கிலும் சிவசங்கர் பாபாவுக்கு சாதகமாக ஜாமீன் கிடைத்துவிடும். இதைத் தவிர்க்க இந்த வழக்கை இரண்டாக பிரித்து பின்... வழக்கை நடத்தலாம். ஆனால், இதை கடந்த மூன்று மாதமாக தற்போதுள்ள அதிகாரிகள் தாமதம் செய்து வருகின்றனர். இது சிவசங்கர் பாபாவின் மேலிட செல்வாக்கில் நடக்கிறது.
மேலும் க்ரைம் நம்பர் இரண்டு மற்றும் மூன்றாம் போக்சோ வழக்கில் எப்.ஐ.ஆர். போடப்பட்டு சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு மூன்று மாதம் கடந்த நிலையில்... இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப் படவில்லை, அதே போல க்ரைம் நம்பர் மூன்றாம் வழக்கில் மாணவியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. மாணவியுடனான பாபாவின் செல்போன் சாட் உண்மை யானது என தடயவியல் உறுதிப்படுத்தியும், இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. பெண் ஆய்வாளர் வளர்மதி, இந்த மாணவியின் பெற்றோருக்கு கொடுக்கும் நெருக்கடி இந்த வழக்கே வேண்டாம் என ஓட்டம் பிடிக்கும் அளவுக்கு செய்துள்ளது.
பெங்களூருவில் வசிக்கும் மாணவர் ஒருவரின் தாயாரை, பாபா தன் விருப்பத்திற்கு அழைத்த வழக்கும் தேக்கத்தில் உள்ளது. சிவசங்கர் பாபாவின் காம லீலைகளுக்கு உடந்தையாக செயல்பட்ட, ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்யும் நபர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அவரது பாலியல் லீலைகளுக்கு காவலாக இருந்தவர்கள் மீதும் வழக்கு பாயவில்லை.
இந்த நிலையில், கடந்த நவம்பர் 9-ஆம் தேதி, நான்காவது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இந்த வழக் கில் பாதிக்கப்பட்ட மாணவி கீதாவிடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதியிடம் 164 ஸ்டேட்மெண்ட் கொடுத்து 65 நாட்கள் கழித்தே போலீஸார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். அதுவும் கடந்த நக்கீரனில் செய்தி வெளியானதும், அந்த அழுத் தத்தின் காரணமாகவே இதுவும் நடந்துள்ளது. இவர் ஏற்கனவே லஞ்சம் பெற்றது தொடர்பான வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகின்றது. அப்படிப்பட்டவர் இந்த வழக்கை நடத்தினால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி கிடைக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.
இது தொடர்பாக விசாரணை அதிகாரியான சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. வேல்முருகனிடம் பேசி னோம். "வழக்கு விசாரணை நடந்துகொண்டுதான் உள்ளது. மேலும் ஒரு போக்சோ வழக்கு தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்று முடித்துக் கொண்டார்.
சி.பி.சி.ஐ.டி.யின் டி.ஜி.பி.யான சகில் அக்தரை தொடர்புகொண்டோம். தொடர்பை துண்டித்தார்.
மாணவிகளுக்கு நேர்ந்த கொடூர பாலியல் அத்துமீறலை பல தடைகள் தாண்டி, நக்கீரனின் முயற்சியால் வெளிக் கொண்டுவரப்பட்டு குற்றவாளி சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார். ஆனால் பெண்களுக்கு நடந்த இந்த கொடுமை களுக்கு, நல்ல தீர்ப்பை கொண்டு வரவேண்டிய பெண் அதிகாரிகளின் இதுபோன்ற செயல் களால்... இந்தப் பெண் பிள்ளைகளின் வழக்கில் நீதி கிடைக்குமா என்ற ஐயம் எழுந்துள்ளது.