Advertisment

சிவகாசி மாநகராட்சி ஊழல் முறைகேடுகள்! -ஆளும்கட்சி பெண் கவுன்சிலர் போர்க்கொடி!

ss

சிவகாசி மாநக ராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கலில், குடிநீர் இணைப்பு கள் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட குழாய் பொருத்துநர் (பொறுப்பு) கண்ணனும், பணி மேற்பார்வை யாளர் பாலகிருஷ்ணனும் சஸ் பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலை யில், சிவகாசி மாநகராட்சி 5-வது வார்டு உறுப்பினர் இந்திராதேவியும், அவருடைய கணவரும் தி.மு.க. மாணவரணி அமைப்பாளரு மான மாரீஸ்வரனும் நம்மைச் சந்தித்தனர்.

Advertisment

ss

"குடிநீர் இணைப்போ, வீட்டுத் தீர்வையோ, பிளான் அப்ரூவலோ, அரசு நலத்திட்டமோ, எதற்குமே லஞ்சம் வாங்கமாட்டேன். தமிழ்நாட்டுல சிறந்த வார்டா ஆக்கிக்காட்டுவேன்னு பத்திரத்துல எழுதிக் கையெழுத்துப் போட்டு, வார்டு மக்கள்கிட்ட உறுதி தந்துட்டுத்தான் தேர்தல்ல நின்னு ஜெயிச்சேன். நேர்மையா இருக்கிற எங்கள, லஞ்சத்துல ஊறிப்போன அதிகாரிங்க என்ன பாடு படுத்துறாங்க தெரியுமா?''’என ஆதங்கப்பட்ட இந்திராதேவியும் மாரீஸ்வரனும், தங்களது குமுறலை

சிவகாசி மாநக ராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கலில், குடிநீர் இணைப்பு கள் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட குழாய் பொருத்துநர் (பொறுப்பு) கண்ணனும், பணி மேற்பார்வை யாளர் பாலகிருஷ்ணனும் சஸ் பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலை யில், சிவகாசி மாநகராட்சி 5-வது வார்டு உறுப்பினர் இந்திராதேவியும், அவருடைய கணவரும் தி.மு.க. மாணவரணி அமைப்பாளரு மான மாரீஸ்வரனும் நம்மைச் சந்தித்தனர்.

Advertisment

ss

"குடிநீர் இணைப்போ, வீட்டுத் தீர்வையோ, பிளான் அப்ரூவலோ, அரசு நலத்திட்டமோ, எதற்குமே லஞ்சம் வாங்கமாட்டேன். தமிழ்நாட்டுல சிறந்த வார்டா ஆக்கிக்காட்டுவேன்னு பத்திரத்துல எழுதிக் கையெழுத்துப் போட்டு, வார்டு மக்கள்கிட்ட உறுதி தந்துட்டுத்தான் தேர்தல்ல நின்னு ஜெயிச்சேன். நேர்மையா இருக்கிற எங்கள, லஞ்சத்துல ஊறிப்போன அதிகாரிங்க என்ன பாடு படுத்துறாங்க தெரியுமா?''’என ஆதங்கப்பட்ட இந்திராதேவியும் மாரீஸ்வரனும், தங்களது குமுறலைக் கொட்டித் தீர்த்தனர்.

"நாங்க ஆளும்கட்சிதான். ஆனாலும், சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு லஞ்சக் கொடுமைகள் நடக்குது. பொதுமக்களிடம் புதிய குடிநீர் இணைப்புக்கு வாங்கிய ரூ.25000-ல் ரூ.12000 லஞ்சமாகப் போயிருக்கிறது. ஒவ்வொரு இணைப்புக்கும் ஆணையாளருக்கு ரூ.3000, செயற்பொறி யாளருக்கு ரூ.2000, பணி மேற்பார்வையாளருக்கு ரூ.2000, இளநிலை உதவியாளருக்கு ரூ.1000, வசூலித்துக் கொடுக்கும் குழாய் பொருத்துநருக்கு ரூ.4000-னு லஞ்சத்தைப் பகிர்ந்திருக்காங்க.

ssஎன்னங்க அநியாயமா இருக்குன்னு செயற் பொறியாளர்கிட்ட கேட்டோம். அதுக்கு அவர் ‘"இப்பத்தானே புதுசா கவுன்சிலரா வந்தி ருக்கீங்க. அதான், மாநகராட்சி அலுவலக நடைமுறை என்னன்னு உங்களுக்கு சரியா தெரியல. சீக்கிரமே புரிஞ்சுக்குவீங்க'ன்னு சொன் னாரு. நாங்க நேர்மையா இருக்கிறதுனால எங்க வார்டுக்கு எந்த நல்லதுமே நடக்கவிடாம பண்ணுறாங்க. அதுல எரிச்சலாகி, எங்களுக்கு ஓட்டு போட்ட வார்டு மக்கள், எங்க முகத்துக்கு நேராவே குறை சொல்றாங்க. நிம்மதி போச்சு. ரெண்டுல ஒரு முடிவெடுக்கணும்கிற நிலைமைக்கு வந்துட்டோம். ஒண்ணு கவுன்சிலர் பதவிய ராஜி னாமா பண்ணனும். இல்லைன்னா, ஆதாரத்தோடு லஞ்ச அதிகாரிகளை சட்டத்துக்கு முன்னால நிறுத்தி தட்டிக் கேட்கணும். ராஜினாமா பண்ணுறது மக்களுக்குப் பண்ணுற துரோகம்னு தோணுச்சு. அதனால, கடந்த ஜூன் 23-ஆம் தேதி, நகராட்சி நிர்வாக இயக்குநருக்கும், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவருக்கும், இங்கே நடக்கிற தவறுகளைச் சுட்டிக்காட்டி புகார் அனுப்பி னோம். ஜூலை 12-ஆம் தேதி, தூத்துக்குடி கலெக் டர் ஆபீஸ்ல நடக்கிற விசாரணைக்கு வரணும்னு உள்ளாட்சி நடுவம் பதிவுத் தபால் அனுப்புச்சு. நாங்க விசாரணைல ஆஜராகக்கூடாதுன்னு மாறிமாறி மிரட்டினாங்க. எங்கள பகைச்சுக்கிட்டா, இந்த 5 வருஷத்துல வர்ற எந்த நிதிலயும் உன் வார்டுக்கு 1 ரூபாய்கூட ஒதுக்க மாட்டோம்னாங்க.

திருத்தங்கல்ல 5249 குடிநீர் இணைப்புகள் இருக்கு. முறைகேடா இணைப்பு வழங்கப்பட்டது நெறய இருக்கு. குழாய் பொருத்துநர் கண்ணன் மட்டுமே, கோடிக்கணக்குல ஊழல் செய்திருக்க முடியாது. ஆணையாளர்ல இருந்து அத்தனை அதிகாரிகளுக்கும் ஊழல்ல பங்கிருக்கு. அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற் படுத்தியிருக்காங்க. பாதிக்கப்பட்ட மக்களோட புகார்களயும், ஆவணங் களயும் ஆதாரமா கொடுத் திருக்கோம். இவங்க மேல கடுமையா நடவடிக்கை எடுத்து, ஊழல் பணத்தை வசூலித்து வருவாய் இழப்பை சரி பண்ணணும்னு, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்திடம் கோரிக்கை வச்சிருக்கோம்''’என்று முடித்தனர்.

Advertisment

ss

குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் தரப்பில் நம்மிடம் பேசிய ஒருவர், "கவுன்சிலர் இந்திராதேவி ஊழல்னு சொல்லுறது, கடந்த அ.தி.மு.க. ஆட்சியி லிருந்தே நடந்துட்டு வருது. அ.தி.மு.க.வுல இருந்து தி.மு.க.வுக்கு தாவி, இப்ப மாநகராட்சி கவுன்சில ராவும் இருக்கிற மாரீஸ்வரனோட சித்தப்பாவுக்கும் இதுல பங்கிருக்கு. சொந்தம்கிறதுனால, அவரு மேல குற்றம் சொல்ல கவுன்சிலர் இந்திராதேவிக்கு மனசு வரல. அதிகாரிகள ஆட்டி வைக்கிறது அரசியல்வாதிகள்தான். லஞ்சம், ஊழல்னு வரும் போது சுலபமா அதிகாரிகள கைகாட்டுறாங்க'' என்று நொந்துகொண்டார்.

லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம்பெற, சிவகாசி மாநகராட்சி ஆணை யாளர் கிருஷ்ணமூர்த்தியை, அவரது கைபேசி எண் 73லலலலலலல1-ல் தொடர்புகொண்ட போது, நமது லைனுக்கு வரவில்லை. குறுந்தகவல் அனுப்பியும் பதிலில்லை. செய்தி அச்சிலேறும் வரையிலும் இதே நிலைதான். தனது விளக்கத் தைப் பகிர அவர் முன்வந்தால், பிரசுரிக்கத் தயாராகவுள்ளோம்.

சிவகாசி மாநகராட்சியில் ஆளும் கட்சி கவுன்சிலரே, லஞ்சத்துக்கு எதி ராகப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட் டுள்ளார். முறைகேடுகளைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கவேண்டிய கடமை, தமிழக அரசுக்கு இருக்கிறது.

nkn130822
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe