Advertisment

சனாதன பாசிசத்தை எதிர்த்துக் களமாடும் திருமா! -அவதூறுகளை நொறுக்கும் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ!

aa

க்கீரன் இதழ் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த கண்ணகி-முருகேசன் படுகொலையில் அதிரடித் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். இந்நிலையில்.. இவ்வழக்கில் அக்கறை காட்டியது யார் என அரசியல் களத்தில் சர்ச்சைகள் எழுந்த நிலையில்... வி.சி.க. பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ. நக்கீரனுக்கு பேட்டியளித்தார்...

Advertisment

கண்ணகி முருகேசன் படுகொலையின் தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொடூர மான ஆணவப் படுகொலை தொடர்பான அரிய தீர்ப்பு வெளிவந்திருப்பது ஆறுதலைத்தருகிறது.

Advertisment

hh

வன்முறைக்கு ஆளாக்கப்படும் பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்கள் காவல்துறையால் எவ்வாறு கையாளப்படுகிறார்கள் என்பதற்கு இந்த வழக்கு ஒரு சாட்சி. கொலையுண்ட முருகேசனின் குடும்பத்தார் மீது ஈவிரக்கம் இல்லாமல் வழக்குப் பதிவு செய்திருக்கிறது காவல்துறை. அதில் சில காவல் அதிகாரிகள் இந்த தீர்ப்பின் மூலம் தண்டிக்கப்பட்டு இருந்தாலும் காவல்துறையின் குணமும் அணுகுமுறையும் எவ்விதத்திலும் இன்றளவிலும் மாறவில்லை. சனநாயக நாட்டில் ஒரு சனநாயக கட்சியின் கொடியை ஏற்றக்கூடாது என்று தடுத்த கும்பல் மீதும் வழக்கு, எல்லாக் கொடிகளும்

க்கீரன் இதழ் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த கண்ணகி-முருகேசன் படுகொலையில் அதிரடித் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். இந்நிலையில்.. இவ்வழக்கில் அக்கறை காட்டியது யார் என அரசியல் களத்தில் சர்ச்சைகள் எழுந்த நிலையில்... வி.சி.க. பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ. நக்கீரனுக்கு பேட்டியளித்தார்...

Advertisment

கண்ணகி முருகேசன் படுகொலையின் தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொடூர மான ஆணவப் படுகொலை தொடர்பான அரிய தீர்ப்பு வெளிவந்திருப்பது ஆறுதலைத்தருகிறது.

Advertisment

hh

வன்முறைக்கு ஆளாக்கப்படும் பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்கள் காவல்துறையால் எவ்வாறு கையாளப்படுகிறார்கள் என்பதற்கு இந்த வழக்கு ஒரு சாட்சி. கொலையுண்ட முருகேசனின் குடும்பத்தார் மீது ஈவிரக்கம் இல்லாமல் வழக்குப் பதிவு செய்திருக்கிறது காவல்துறை. அதில் சில காவல் அதிகாரிகள் இந்த தீர்ப்பின் மூலம் தண்டிக்கப்பட்டு இருந்தாலும் காவல்துறையின் குணமும் அணுகுமுறையும் எவ்விதத்திலும் இன்றளவிலும் மாறவில்லை. சனநாயக நாட்டில் ஒரு சனநாயக கட்சியின் கொடியை ஏற்றக்கூடாது என்று தடுத்த கும்பல் மீதும் வழக்கு, எல்லாக் கொடிகளும் பறக்கும் பொதுஇடத்தில் கொடியை ஏற்றவேண்டும் என்று குரல் கொடுத்த எளிய மக்கள் மீதும் வழக்கு என்பதாக அதிகார மய்யங்கள் கூச்சமின்றி செயல்படுகின்றன.

தலித் மக்களுக்காகப் பாடுபடுவதாகச் சொல்லும் சில இயக்கங்கள், அந்த மக்களுக்கு துரோகம் செய்வதாக வழக்கறிஞர் ஒருவர் கூறுவதை எப்படி பார்க்கிறீர்கள்?

புரட்சியாளர் அம்பேத்கருக்கு பிறகு தமிழகத் தில் மகத்தான மக்கள் இயக்கத்தை கட்டமைத்து ஒடுக்கப்பட்ட இந்த மண்ணின் பூர்வ குடிகளை வலிமையான தவிர்க்கமுடியாத அரசியல் சக்தியாக மாற்றியவர் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன். அவர்மீது அவதூறை பரப்பும் அருவருப்பான சக்திகளின் நோக்கத்தை புரிந்துகொள்வது மிக எளிது. சனாதன சக்திகள் மீது எந்த விமர்சனத்தை யும் முன்வைக்க துப்பில்லாத கும்பல், சனாதன சக்திகளை எதிர்த்து களமாடும் தோழர் திருமா மீது அவதூறு பேசுவதுதான் அப்பட்டமான துரோகம்.

முருகேசன் தந்தை சாமிக்கண்ணுவிடம், வழக்கை நடத்த வேண்டாம் என்று சொல்லியவர் வி.சி.க. தலைவர் திருமா என வலைத்தளங்களில் குற்றம்சாட்டி வருகிறார்களே?

கண்ணகியும் முருகேசனும் படுகொலை செய்யப்பட்டது 2003 ஜூலை மாதம் எட்டாம் தேதி. ஆனால் இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட வர்களின் அழுகுரலை அலட்சியப்படுத்தி விரட் டிய காவல் நிர்வாகம், வேறு வழியே இல்லாமல் கிராம நிர்வாக அலுவலர் மூலமாக புகாரை வாங்கி இருதரப்பு மீதும் 17.07.2003 அன்று வழக்கு பதிவு செய்தது ஏன்? எ திருமா 13-07-2003 அன்று சென்னையில் இப்படுகொலை குறித்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பை ஒட்டி உருவான அழுத்தம்தான் வழக்கு பதிவு செய்யப்படுவதற்கான காரணம் என்பதை யாரும் மறுக்க முடியுமா? நீதிமன்ற தீர்ப்புரை விளக்கங்களில் இது பதிவாகியிருக்கிறது.

கண்ணகி-முருகேசன் வழக்கில் வி.சி.க.வின் பங்களிப்பு என்ன?

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் -பண்ருட்டி -கம்மாபுரம் ஆகிய பகுதிகளின் நிலவியல் தன்மையை நாம் புரிந்துகொள்வது மிக அவசியம். அடர்த்தியான முந்திரிக்காடுகள் நிறைந்த அப்பகுதியில் பொதுவாகவே பட்டியல் வகுப்பைச் சார்ந்த மக்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவுதான். பட்டியல் வகுப்பைச் சார்ந்த மக்கள் படுகொலை செய்யப்படுவதும் கொடூரமான பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்படுவதும், மிக சர்வ சாதாரணமாக அப்பகுதியில் நடந்து கொண்டிருந்தன. பாதிக்கப்பட்ட யாரும் காவல் துறைக்கு போய் புகார் கொடுப்பது என்பதை கன விலும் எண்ணிப் பார்க்க முடியாத காலம் அது.

கருக்கை அம்ச வல்லி, கோஆதனூர் பொன்னருவி, மேலப் பாளையம் சகுந்தலா ஆகிய பல கொலை வழக்குகளிலும், சிறுதொண்ட மாதேவி பாலி யல் அத்து மீறல், காட் டுக்கூடலூர் வன்முறை என முந்திரிக் காடுகள் அடர்ந்த அந்த பகுதிக்குள் இத்தகைய கொடூரங்களுக்கு எதிராக வெளிச்சம் பாய்ச்சியதும்... அவற்றை பொது வெளிக்கு கொண்டுவந்து அம்பலப்படுத்தியதும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான். கண்ணகி- முருகேசன் கொலை வழக்கிலும் விடுதலைச் சிறுத்தைகளின் தலையீட்டால்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்திற்கு வெளியே பொதுச்சமூகத்தில் ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான காத்திரமான போராட்டங்களை நடத்தியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான்.

வி.சி.க. ஆளும் கட்சி கூட்டணியாக இருக்கும் சூழ்நிலையில் இதுபோன்ற சம்பவங்களுக்கு தீர்வு காண என்ன செய்யப்போகிறது?

t

சாதி ஆணவப் படுகொலைகளை வெளிப் படையாக ஆதரித்தும், பட்டியல் இன மக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பு பிரச்சாரத்தை முன்னிறுத்தியும், சனாதன பாசிச சக்திகள் செயல்பட்டு வருகிறார்கள். இதை தடுப்பதற்கு தமிழக அரசு முழுமுயற்சி எடுக்கவேண்டும். ஆணவப் படுகொலைகளை முற்றும் முழுவதுமாக தடுப்பதற்கு தனிச் சட்டம் இயற்றவேண்டும். சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிப்பதற்கென தனிப்பட்ட சிறப்பு திட்டங்களை தந்தை பெரியார் வழியில் செயல்படும் அரசு தனிப்பட்ட சிறப்பு திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். விடுதலை சிறுத்தைகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழகத் தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தை உருவாக்கிய தி.மு.க. அரசிட மும் முதல்வரிடமும் இந்த கோரிக்கையும் முன் வைக் கிறோம். அதே சமயத்தில், காவல்துறையிலும் உளவுத் துறையிலும் சாதிய மனோபாவம் மேலோங்கி இருப்பதை முற்றும் முழுவதுமாக மாற்ற சிறப்பு பயற்சிகளை வழங்கவும் உரிய கண்காணிப்பை மேற் கொள்ளவும் அரசை நாங்கள் வற்புறுத்துவோம்.

வி.சி.க.வின் அடுத்தகட்ட இலக்கு என்னவாக இருக்கும்?

தமிழகத்தின் மிக முக்கிய சவால் என்பது சனா தன -பாசிச சக்திகளின் ஊடுருவல்தான். அதை அர சியல் களத்திலும் பண்பாட்டு தளத்திலும் தடுத்து நிறுத்துவது விடுதலை சிறுத்தைகளின் தலையாய கடமை. அதன் அடிப்படையில் திராவிட முன்னேற்ற கழகத்தோடும், இடதுசாரி இயக்கங்களோடும், சிறு பான்மை சமூக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இஸ்லாமிய இயக்கங்களோடும் இணைந்து நடைமுறைப்படுத்தவே விரும்புகிறோம்.

nkn161021
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe