தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் என்கிற எஸ்.ஐ.ஆர். பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, அங்கன்வாடி ஊழியர்கள் எஸ்.ஐ.ஆர். பணிகளில் உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இதில் நவம்பர் 25 மாலை வரை 6,19,66,147 படிவங்கள் விநியோ கிக்கப்பட்டுள்ளன. அதில் 3,76,37,033 படிவங்கள் திரும்ப வந்துள்ளன. டிசம்பர் 4ஆம் தேதியோடு எஸ்.ஐ.ஆர். பணிகள் முடிவடையும், கால நீட்டிப்பு வழங்கப்படாது என அறிவித் துள்ளார் மாநில தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக்.
தமிழ்நாட்டில் 68,467 வாக்குச்சாவடி நிலை அலுவலர் களும், 2,38,853 பி.எல்.ஓ.க்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள னர். இதுகுறித்து பி.எல்.ஓ.க்களிடம் பேசியபோது, "எங்களுக்கு முறையான பயிற்சி தராமலேயே வேலை பாருங்கன்னு சொல்லிட் டாங்க. எங்களுக்கு தரப்பட்ட வாக்காளர் படிவத்தோடு, 2002-ல் நடந்த சிறப்பு திருத்தப் பட்டியலும் தந்திருந்தாங்க. அதில் வாக்காளரின் புகைப்படம் இல்லை, பெயர் மட்டும் தான் இருக்கு. இந்த 23 வருடத்தில் பலரும் வீடு மாறிப் போயிருக்காங்க. அவுங்களப்பத்தி அக்கம்பக்கத்தல இருக்கறவங் களுக்கும் தெரியல. ஒவ்வொரு பி.எல்.ஓ.விடமும் 200, 300 படிவங்கள் அப்படியே நிக்குது. அது ஏன் நிக்குது? தேடிப்போய் தான்னு அதிகாரிகள் சொல்றாங்க. இதுதான் பெரிய மன உளைச்சலா இருக்கு. தொலைபேசி எண்களும் 2002 வாக்காளர் பட்டியலில் இல்லை. அப்பறம் எப்படி அவுங்கள கண்டுபிடிக்கறது?
அதேபோல், அடுக்குமாடியில குடியிருக்கறவங்க (எலைட் பீப்புள்

அதேபோல், அடுக்குமாடியில குடியிருக்கறவங்க (எலைட் பீப்புள்ஸ்) பெரும்பாலானவங்க படிவங்களை வாங்கிட்டு பூர்த்தி செய்தே தரல. விவரங்களை எங்ககிட்ட கேட்க அவுங்களோட ஈகோ தடுக்குது. எங்க ளோட மேலதிகாரிங்க, அந்த படி வங்களை வாங்கி, இறந்துட்டாங்க, வீடு மாறிப்போய்ட்டாங்க, தகவல் தெரியலன்னு 5 காரணங்களில் ஏதா வது ஒன்றை டிக் செய்து அப்லோட் செய்னு சொல்லி திட்டறாங்க. இதனால் நாங்க சண்டை போட்டு விண்ணப்பத்தை திரும்ப வாங்க றோம். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாங்கி, ஆன்லைன் அல்லது மொபைல் ஆப்பில் நாங்கள்தான் அப்லோட் செய்யணும். நாங்க 100 பேரின் படிவத்தை அப்லோட் செய்தால் 30 படிவங்கள் ரிட்டர்னாகுது. எதனாலன்னும் சொல்றதில்லை. ஒவ்வொரு நாளும் இரவு 2, 3 மணி வரைகூட ஆகுது. விண்ணப்பங்களை அப்லோட் செய்ய பெரும்பாலான பி.எல்.ஓ.க் களுக்கு தெரியவில்லை. இந்த எஸ்.ஐ.ஆர். பணிக்கு பி.எல்.ஓக்களுக்கு 12,500 ரூபாய் தந்திருக்காங்க. ஆனா ஒவ்வொருவருக்கும் 15 ஆயிரம் வரை செலவாகியிருக்கு, அதைவிட அதிகமா மனஉளைச்சல்ல இருக்கோம்'' என்கிறார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/02/sir1-2025-12-02-14-32-33.jpg)
எஸ்.ஐ.ஆர். பணியில் தி.மு.க., அ.தி.மு.க.வை சேர்ந்த கிளைக்கழக நிர்வாகிகள் மட்டும்தான் களத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். திருவண்ணாமலை மாநகரத்தை சேர்ந்த ஆளும்கட்சி நிர்வாகிகளிடம் பேசியபோது, "என்னோட வாக்குச்சாவடியில் மொத்தம் 1357 வாக்கு கள். ஒவ்வொரு வீட்டுக்கும் படிவத்தை தரச்சென்றார் பி.எல்.ஏ. அவரால் 850 படிவங்களை மட்டுமே தர முடிந்தது, 500 படிவங்களை தர முடியவில்லை. அதன்பின் பி.எல்.ஓ.வுடன் நான், எங்க வாக்குச்சாவடி முகவர் போனோம். 500 வாக்காளர்களில் பலரை கண்டு பிடிக்கவே முடியல, பலர் வீடுமாறிச் சென்றிருந்தார்கள். அவர்களை அழைத்துப் பேசி விண்ணப்பப் படிவங் களை தந்தோம். பலர் இங்கயும் ஓட்டு இருக்கட்டும், அங்கயும் ஓட்டு இருக்கட்டும்னு சொன்னாங்க. அது தப்புன்னு விளக்கி சொன்னபிறகு, நாங்க இருக்கற இடத்தலேயே ஓட்டு இருக்கட்டும்னு சொன்னாங்க. இந்த வகையில் மட்டும் 220 வாக்குகள் என்னோட வார்டுல நீங்குது. அதோட இறந்தவர்கள் வாக்கு, கல்யா ணம் செய்துக்கிட்டு போனவங்க வாக்கு நீக்கியிருக்காங்க. அப்படியிருந்தும் 100 சொச்சம் வாக்குகளை கண்டு பிடிக்கவே முடியல. இது, வருங்காலத்தில் எம்.எல்.ஏ, எம்.பி., கவுன்சிலர் தேர்தல்ல நிக்கறவங்களுக்கு பெரிய லாபம். எப்படின்னா, ஓட்டுக்கு பணம் கொடுக்குறவங்க, இனிமேல், தொகுதியில இல்லாதவங்களோட ஓட்டுக்கெல்லாம் பணம் தரத் தேவையில்லை, கள்ள ஓட்டும் போடமுடியாது'' என்றார்கள்.
முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் மற்றொரு சந்தேகத்தை எழுப்பினார். அதாவது, "பீகாரிலுள்ள தீவிர திருத்தப் பட்டியலில் இடம்பெற்றவர்களின் ஆவண பிரதியை தமிழ்நாட்டில் இணைத்து புதிய வாக்காளராக இடம்மாறி இங்கே பதிவு செய்துகொள்ளும் வசதி இருக்கிறது. டிசம்பர் 9ஆம் தேதி புதிய வரைவு வாக் காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. அதை வெளியிட்டபின் எப்படியும் உயிரோடு இருப்பவர்களின் பெயர்கள் விடுபட்டிருக்கும். அவர்களை இணைக்க அமைக்கப்படும் சிறப்பு முகாம் களை ஒரு மாதத்துக்கு தேர்தல் ஆணையம் நடத்துகிறது. அப்போது ஆன்லைன் வழியாகவே பீகாரிகளின் பெயர்களை வாக்குச்சாவடிக்கு 10 பேர், 20 பேர் என இணைத்தால் தொகுதிக்கு 3 ஆயிரம், 4 ஆயிரம் வாக்கு கள் புதிதாக சேர்ந்துவிடும். அப்படி சேர்க்க பி.எல்.ஓ. அனுமதியெல்லாம் தேவையில்லை. புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் பெயரோடு இறுதி வாக்காளர் பட்டியல் 2026, பிப்ரவரி 9ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளார்கள். பட்டியல் வெளிவந்தபின்பு 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுவிடும், அதன்பின் பட்டியலிலிருந்து பெயர்களை நீக்கமுடியாது. சென்னை, கோவை, திருச்சி, வேலூர், ஈரோடு, திருப்பூர், மதுரை போன்ற மாநகரங்களை உள்ளடக்கிய தொகுதி களில் இப்படி சேர்க்கப்பட்டவர்கள் வாக் களிக்கும்போது அடையாளம் காண்பது பெரும் சிரமம். அவர்களை தடுக்க முடியாது. இந்த ஆபத்து இருக்கிறது. இதனை பா.ஜ.க.வே திட்டமிட்டு செய்யும். அதற்கு தேர்தல் ஆணையம் உடந்தை யாக இருக்கும். இது விஷயத்தில், எச்சரிக்கை யாக இருக்கவேண்டும். தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் இதனை குறிப்பிட்டு பிற மாநில வாக்காளர்கள் உள் நுழைவதை தடுக்க வேண்டும்'' என்கிறார்கள்.
தமிழ்நாட்டுத் தேர்தலுக்கு கடும் சோதனைக்காலம்தான்!
படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்
________________
எஸ்.ஐ.ஆர். விண்ணப்பிக்க வந்தபோது மின்சாரம் தாக்கி மூவர் பலி!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/02/sir-box-2025-12-02-14-32-47.jpg)
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ளது சி.சாத்தமங்கலம். இந்த கிராமத் தைச் சேர்ந்தவர் மரிய சூசை. இவரது மனைவி பெலோன் மேரி. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஆறு மகள்களும் உள்ளனர். இதில் கடைசி மகள் தவிர அனைவருக் கும் திருமணமாகிவிட்டது. கார் டிரைவராக வேலை செய்துவரும் மகன் ஆரோக்கியதாஸ், சென்னை அடையாறில் பெற்றோருடன் வசித்து வருகிறார். மரிய சூசை, அடையாறிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு சொந்த ஊரில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள தால் தேர்தல்களின்போது ஊருக்கு வந்து வாக்கு செலுத்தி விட்டு செல்வார்கள்.
கடந்த நவம்பர் 23ஆம் தேதி, எஸ்.ஐ.ஆர். விண்ணப் பத்தை வாங்கி பூர்த்தி செய்து கொடுப்பதற்காக மரிய சூசையும், அவரது மனைவி பெலோன் மேரியும், சென்னையிலிருந்து சாத்தமங்கலம் கிராமத்துக்கு வந்துள்ளனர். வாக்காளர் படிவம் பூர்த்தி செய்யுமிடத்தில் கூட்டம் அதிகமிருந்ததால் இவர்களைக் காத்திருக்கும்படி களப்பணியாளர் கள் கூறியிருக்கிறார்கள். எனவே அப்பகுதியிலிருந்த கிறிஸ்தவ தேவாலயத்தின் முன்பு காத் திருந்தனர். அப்போது மழை விட்டு விட்டுப் பெய்துகொண்டிருந்தது. திடீரென்று அங்கிருந்த புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து மின்சார லைனில் விழுந்ததில் மின்சாரக் கம்பிகள் அறுந்து, விண்ணப்பம் பூர்த்தி செய்யக் காத்திருந்த மரிய சூசை, பெலோன் மேரி, அவரது உறவினர் வனதாஸ் மேரி ஆகியோர் மீது விழுந்துள்ளது. அதில் மின்சாரம் தாக்கி மூவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதே ஊரைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் பலத்த காயத்துடன் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்த கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி. விஜயகுமார் மற்றும் போலீசார், இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரி சோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாக்காளர் விண்ணப் பம் பூர்த்தி செய்யவந்த இடத்தில் மூன்று பேர் உயிரிழந்தது அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-எஸ்.பி.எஸ்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us