இந்தியா முழுவதும் இரண்டாம்கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் செய்யப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் 29ஆம் தேதி மாலை 4 மணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பல தலைவர்கள், பீகாரில் எஸ்.ஐ.ஆர். எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி நடைபெற்றபோது, லட்சக்கணக்கிலான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மேலும், தேர்தல் நெருங்கும் நேரத்தில், குறுகிய காலத்தில் இவையனைத் தும் எப்படி சாத்தியம்? எனக் கேள்வி எழுப்பியதோடு, இது மக்களின் வாக்குரிமையை பறிக்கும் செயல் எனப் பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
1951 முதல் 2004 வரையிலும் 8

1951 முதல் 2004 வரையிலும் 8 முறை சிறப்பு தீவிரத் திருத்தம் செய்துள்ளனர். இறுதியாக 2002 -2004 காலகட்டங்களில் நடைபெற்றது. 21 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் உட்பட 12 மாநிலங்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் நடைபெறுமென்று 27ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார். இதற்கான பணி வரும் நவம்பர் 4ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு அதற்கான வரைவு பட்டியல் டிசம்பர் 9ஆம் தேதி வெளியிடப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்தனர். அதன்படி தமிழகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. அதில், 4ஆம் தேதி முதல் வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி எவ்வாறு செய்வது போன்ற பயிற்சி வகுப்பு தொடங்கும். இப்பயிற்சியில் 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 624 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், 7,234 வாக்குச்சாவடி நிலை அலுவலக மேற்பார்வையாளர்கள், 68,472 வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் தன்னார்வளர்கள் உட்பட 77 ஆயிரம் பேருக்கு, தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டு, இவர்கள் மூன்று முறை வீடுகளுக்கே சென்று பணியில் ஈடுபடுவார்கள். 21 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மேற்கொள்ளும் இந்த பணியின் நோக்கமாக சொல்லப்படுவது, வாக்காளர் பட்டியல் துல்லியமாகவும், பிழையற்றதாகவும் இருப்பதை உறுதிசெய்வது. அதன்படி வீடுதோறும் கணக்கீடு நவம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை நடத்தப்படும். அதில் வீடுகளில் இல்லாதவர்கள், இடம் மாறியவர்கள், இறந்தவர்கள், இரட்டைப் பதிவுகளை அடையாளம் கண்டு, புதிய தகுதியுள்ள வாக்காளர்களைத் தேர்வு செய்வது எனத் தெரிவித்தனர். இதுகுறித்து கருத்து கேட்டபோது, பா.ஜ.க., அ.தி.மு.க.வை தவிர்த்து அனைத்துக்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து முன்கூட்டியே கருத்து கேட்டிருக்க வேண்டும், அப்படி கேட்காமல் திடீரென அறிவித்து, தேர்தலுக்கு குறுகிய காலமே இருக்கும் சூழ்நிலையில் இதுபோன்று செய்வது திட்டமிட்டே உள்நோக்கத்தோடு செயல்படுவதுபோல் தெரிகிறது. பீகாரை போன்று தமிழகத்திலும் வாக்காளர் பட்டியல் நீக்கப்படுமோ என்கிற அச்சமும் எழுகிறது. ஆகையால் இத்திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து எந்த பதிலையும் தெரிவிக்காத தேர்தல் ஆணையம், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், "வாக்காளர் பட்டியலில் ஏற்பட் டுள்ள குளறுபடிகள் குறித்து தேர்தல் அதிகாரி களிடம் புகார்களாகக் கொடுத்திருந்தோம், அதற்கான தீர்வு தற்போது கிடைத்துள்ளது. ஆள்மாறாட்டம் போன்று இன்னும் நடை பெறுகிறது'' எனக் குற்றம்சாட்டி, எஸ்.ஐ.ஆர். செயல்படுத்தப்பட வேண்டும் என்றார்.
தமிழக முதல்வர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், வருகின்ற 2ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவித்து, அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை உச்சத்தில் இருந்துவரும் சூழலில், பொங்கல் போன்ற விழா நெருங்கும் காலத்தில் இதுபோன்று எஸ்.ஐ.ஆர். முறையை செயல்படுத்துவது மிகவும் சிரமம். ஆகையால் ஒத்திவைக்க வேண்டும் எனத் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்துள்ளனர்.
தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் பா.ஜ.க.வால் காலூன்ற முடியாத காரணத்தால், இந்த பணியை கையிலெடுத்துள்ளது என்பதாகவே இதைப் பார்க்க முடிகிறது. மேலும், அனைத்து மாநிலக் கட்சிகளும் எதிர்க்கும்போது அ.தி.மு.க. மட்டும் அதனை வரவேற்பது மேலும் சந்தேகத்தை எழுப்பு கிறது. பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி என்பதால் பீகாரை போன்று இங்கும் நமக்கு வாய்ப்புகிட்டும் என்ற கோணத்தில் அ.தி.மு.க. செவிசாய்க்கிறதோ என்ற கேள்வியும் எழுகிறது. எஸ்.ஐ.ஆர். தொடர்பான அனைத்துப் பணிகளும் தொடங்கியுள்ள நிலையில், அடுத்து என்ன நடக்குமென்பதை பொறுத் திருந்து பார்க்கவேண்டும்.
-சே
படம்: ஸ்டாலின்
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us