திண்டுக்கல் மாவட்டத்தினைப் பொறுத்த வரை ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் 7,227 வாக்குகளை Shifted எனக் குறித்துவிட்டு, 25,000 வாக்குகளை நீக்கிவிட்டனர். அதுபோல், கோவையிலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் அதிகபட்சமாக கோவை வடக்கில் 66,525 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக வால்பாறையில் 29,691 வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மாவட்டத்தில் ஏறக்குறைய ஐந்து லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்ட தகவலால் அதிர்ச்சியடைந்துள்ளன அனைத்துக் கட்சிகளும்.
என்னுடைய சட்டமன்றத் தொகுதியில் அவசர கதியில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெற்றுள்ளது என கடந்த வாரத்திலேயே மாவட்ட ஆட்சியர் குறித்து பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி. குறிப்பாக, "ஒரே இரவில் என்னுடைய தொகுதியில், சின்னாளப் பட்டி பேரூராட்சியில் மட்டும் 7,227 வாக்காளர்கள் இடம்பெயர்வு, அதுபோக கிட்டத்தட்ட 22,000 நபர்களை நீக்கியுள்ளார்கள். இதுசம்பந்தமாக தேர்தல் ஆணையத்திற்கு நான் புகாரனுப்பியுள் ளேன். இப்பவும் சொல்றேன், பி.எல்.ஓ. வாக்காளர் களைச் சேர்ப்பதற்குப் போகவில்லை. அறையில் அமர்ந்து ஒரே இரவில் நீக்கிவிட்டார்கள். வாக்காளர்கள் கையெழுத்திட்டுக் கொடுத்த மனுவை அப்படியே வைத்துக்கொண்டு ஆட்களை இடம்மாற்றம் செய்துவிட்டார்கள் என்று போட்டுவிட்டார். இப்படி ஒரு அதிசயம் ஆத்தூர் தொகுதியில் நடந்துள்ளது. உடனே சேர்ப்பதாகச் சொன்னார்கள். அது நடக்குமோ, நடக்கலையானு எனக்கு தெரியவில்லை. அதுல எனக்கு நம்பிக்கை யில்லை. வாக்காளர்கள் தொகுதியில் இருக்கிறார் களா என்று பார்த்தார்களா? எந்த ஊரில் சென்று பார்த்தார்கள்? அவங்க எங்கேயும் போகவில்லை. ஏதோ கணக்கு காண்பிக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு வேலை பார்த்துக்கொண் டிருக்கிறார்கள். ஆகவே இந்த சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை ஒன்றிய அரசு உடனே ரத்து செய்யவேண்டும். இதற்குக் காரணமான மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர்மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார் கொதிப்பாக.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/12/sira-2025-12-12-15-51-02.jpg)
இதனையடுத்து சமுதாயக் கூடத்தில் 26 வாக்குச்சாவடி மையங்களை சேர்ந்த பி.எல்.ஓ. பி.எல்.ஓ.2, மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார் மாவட்ட ஆட்சியர் சரவணன். இது இப்படியிருக்க, "நாங்கள் இங்குதான் இருக்கின்றோம். எந்தவொரு கள அலுவலர்களும் எங்களைத் தொடர்புகொள்ள வில்லை. நேரிலும் வரவில்லை. நாங்கள் உயிரோடு தான் இருக்கின்றோம். எங்களது வாக்குகளை இணைத்துக்கொள்ளுங்கள்'' என 7, 18, 6, 12-வது வார்டுகளைச் சேர்ந்த சுமார் 50-க்கும் அதிகமான ஆண், பெண் வாக்காளர்கள் சின்னாளப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
முகமது என்பவர், "எனக்கும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கான படிவத்தை வழங்கினார்கள். அதில் பி.எல்.ஓ.வின் பெயர், எண் இருந்தது. ஒரு சந்தேகத்திற்காக அழைத்துப்பார்த்தால் அந்த எண்ணிற்கான அழைப்பை எடுத்தவர், "ஆமாம். இந்த எண் என்னுடைய மனைவியுடையது. அவர் வேலையைவிட்டு நின்று 6 மாதம் ஆகிவிட்டதே' என்கிறார். இந்த நிலையில் என்னுடைய வாக்கு நட்ண்ச்ற்ங்க் ஆகியுள்ளது. தவறு யார் மீது?''’எனக் கேள்வியெழுப்புகிறார் அவர்.
இதேவேளையில், 18-வது வார்டு, முத்தமிழ் நகர், பழைய மின்சார அலுவலகம் எதிர்ப்புறம், திருநகர் காலனி பகுதியில் வசிப்பவர்கள் பலர் வெளியூர், வெளிமாவட்டங்களில் வசித்துவரு கிறார்கள் எனக்கூறி அப் பகுதியில் வாக்காளர் படிவத்தை விநியோகம் செய்யாமல் இருந்துள்ள னர் கள அலுவலர்கள். இந்த விவகாரத் திற்குப் பிறகு கடந்த 2 நாட் களாக அவர் களைத் தேடிச் சென்று வாக் காளர் சேர்க் கை படிவத் தைக் கொடுத் துள்ளனர்.
இதுபோல 18 வார்டுகளிலும் பி.எல்.ஓ.க்கள் சரிவர தங்களுடைய களப்பணியைச் செய்யாததால் நூற்றுக்கணக்கானோருக்கு தங்களுடைய வாக்குரிமை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
"எங்களிடம் விண்ணப்ப படிவத்தை கொடுக்கவோ, அல்லது வாங்கவோ யாரும் வரவில்லை. தன்னார்வலர்கள்தான் எங்களிடம் வந்து வாக்காளர் படிவத்தைக் கொடுத்தனர். எங்கள் வாக்குரிமையைக் காப் பாற்றுவதற்காக பேரூராட்சி அலுவல கத்திற்கு நேரடியாக பி.எல்.ஓ.விடம் மனு கொடுக்க வந்துள்ளோம்'' என்றனர் வி.எம்.எஸ். காலனி மல்லிகா, சுமதி, மேட்டுப்பட்டி மாலு ஆகியோர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/12/sirb-2025-12-12-15-51-18.jpg)
இதேநிலைதான் கோவைக்கும். கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, தெற்கு, மேட்டுப் பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், பொள் ளாச்சி, வால்பாறை உட்பட்ட 10 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 32 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியால் கோவை மாவட்டத்தில் இறந்த வாக்காளர்கள் 1,13,000 பேர் மற்றும் சம்பந்தப்பட்ட முகவரியில் இல்லாமல் தொடர்புகொள்ள முடியாத வாக்காளர்கள், முகவரி மாறிச் சென்றவர்கள், இரட்டைப் பதிவு என 3,85,000 பேர் என மொத்தம் 5 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்செய்யப்பட்டுள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பாக, கோவையிலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில், அதிகபட்சமாக கோவை வடக்கில் 66,525 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக வால்பாறையில் 29,691 வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நீக்கத்தால் வாக்காளர்களின் எண்ணிக்கை 27 லட்ச மாகக் குறையும்.
அவசர கோலத் தில் நடைபெற்றுள்ள சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு "திருத்தம்' வேண்டுமென்பதே பலரின் கோரிக்கை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/12/sir-2025-12-12-15-50-47.jpg)