தமிழக வாக்காளர்களை நீக்குவதற்கு தேர்தல் கமிஷன் முயற்சி செய்கிறது என்று குற்றச்சாட்டு வைக்கிறார் எம்.பி. ஜோதிமணி.
கடந்த நவம்பர் 2ஆம் தேதி கரூரிலுள்ள எம்.பி. அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, எஸ்.ஐ.ஆர். மோசடி குறித்து அம்பலப்படுத்தினார். அப்போது...
இப்பத்தான் 2024-ல் வாக்காளர் பட்டியல் தேர்தலுக்காக அப்டேட் டாகியிருக்கு. தமிழ்நாட்டுல பஞ்சா யத்து தேர்தல் நடத்தக்கூடிய சூழல் இருந்ததுனால, பஞ்சாயத்து தேர்த லுக்கு நாலஞ்சு மாசத்துக்கு முன்ன வேட்பாளர் பட்டியலை புதுப்பிச்சுக் குடுத்திருக்காங்க. பிறகு சிறப்பு தீவிர திருத்தத்துக்கான தேவையென்ன?
பீகார்ல கிட்டத்தட்ட 65 லட்சம் வாக்காளர்களை அவங்க எடுத்துவிட்டு, பெரிய பிரளயமாகி அந்த வழக்கு இன்னும் நடக்குது! ஒரு படிவத்தை தமிழ்நாட்டுல உள்ள 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்களுக்கு கொடுக்கப் போறாங்க. இந்த படிவத்துல வாக்காளருடைய பெயர், வாக்காளரின் புகைப்பட அடையாள அட்டை எண், முகவரி, பாக எண் பெயர், சட்டமன்ற/நாடாளுமன்றத் தொகுதியின் பெயர், மாநிலம், தற்போதைய புகைப்படம்... ஒரு பார்கோடு இருக்கும். அதுல கேட்கப்படும் விவரங்களை நாம் நிரப்பவேண்டும்.
அதுக்கு கீழ ஒரு டேட்டா குடுத்திருக்காங்க. அது முந்தைய சிறப்பு தீவிர திருத்தத்திலுள்ள வாக்காளர் பட்டியலிலுள்ள வாக்காளரின் விவரங்கள்.
முந்தைய சிறப்பு சீர்திருத்தம் 2002-ல நடந்திருக்குது. அதுல, வாக்காளரின் பெயர், வாக்காளரின் புகைப்பட அடையாள அட்டை இருந்ததெனில், ஒரு உறவினரின் பெயர், உறவு முறை, மாவட்டம், மாநிலம், சட்டமன்றத் தொகுதியின் பெயர், சட்டமன்றத் தொகுதியின் பாகம் எண், வரிசை எண் கேட்குறாங்க.
எதுக்கு 2002-ல ஓட்டு போட்ட ஒருத்தருடைய விவ ரங்கள், அவங்களு டைய உறவு முறையை யெல்லாம் கேக்கு றாங்க? இப்ப 2002-ல உறவினரின் பெயர்னு நாம் ஒருத்தர் பேர கொடுக்கிறோம். நம் அம்மா என்றால், அவங்க 2002-ல உயிரோடு இருந்தாங்க. இப்ப நாம் அவங்க பேரைக் கொடுத்தால், அம்மாவோட விவரங்களை முழுமையா கொடுக்கணும்.
2002-ல நான் ஓட்டு போடுறப்ப எங்க அம்மா உயிரோட இருந்தாங்க. இப்ப நான் 2026-ல ஓட்டு போடுறப்ப எங்க அம்மா இறந்துட்டாங்க. இப்ப நான் என்ன பண்ணணும்னா எங்க அம்மாவுடைய இறப்புச் சான்றிதழ் தரணும். எதுக்கு இந்த வேலை?
ஒரு ஓட்டைச் சேர்க்கிறோம். அதன் அடிப்படை என்ன? ஒருத்தரு அந்த ஊருல, அந்த பூத்துல இருக்காங்களா? அவங்க அந்த பூத்துலதான் குடியிருக்காங்களா? அவங்க லெஜிட்டிமேட் ஓட்டரா? இதைத்தான பார்க்கணும். எதுக்கு இத்தனை டேட்டா கேட்குறாங்க?
2002-க்கும் 2025-க்கும் இடையில 23 வருஷம் கேப் இருக்கு. இப்ப 2002-ல ஒருத்தரு ஓட்டு போட்டிருந்தா, 2024 பாராளுமன்றத் தேர்தல்லயும் ஓட்டு போட்டிருப் பாங்க. அவர் ஒரு அட்டேட்டடு புகைப்படம் மட்டும் குடுத்தா போதும்னு சொல்றாங்க. இப்ப 2002-ல ஒருத்தரு ஓட்டுப்போடலை. அதுக்கப்புறமா போட்டிருந்தார் அப்படீன்னா... கிட்டத்தட்ட அவங்க என்ன பண்றாங்கன்னா, குடியுரிமைய செக் பண்றாங்க..
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/07/sir1-2025-11-07-13-36-59.jpg)
சாதாரணமா ஒருத்தருடைய ஓட்டை நீக்கவோ, சேர்க்கவோ இன்னைக்கு அவரு என்னவா இருக்காருன்னு பார்த்தா போதும். 2002-ல போய் எதுக்குப் பார்க்கிறீங்க. அதுக்கப் புறம் 2002-ல யார் உறவினரா இருந்தாங்க, அவருடைய விவரங்களையெல்லாம் கேக்குறீங்க? அப்ப வாக்காளர் தீவிர திருத்தம்ங்கிற பேர்ல ஒருவருடைய குடியுரிமையை தேர்தல் கமிஷன் நம் அனுமதியில்லாமல் சட்டத்திற்கு விரோதமாக சோதிக்கிறாங்க. குடியுரிமையை செக்பண்ண வேண்டிய அதிகாரம் ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்குத்தான் இருக்கு. எலெக்சன் கமிஷனுக்கு கிடையாது.
இதுதான் பிரச்சினைக்குரிய விஷயமா பீகார்ல வந்தது. குடியுரிமையை செக் பண்றதுக் கான அதிகாரம் உங்களுக்குக் கிடையாதுன்னு சொன்னதுனால, இப்ப அதைச் சொல்லாம தமிழ் நாடு உட்பட 12 மாநிலங்கள்ல இந்த வேலையைச் செய்றாங்க. இந்த படிவத்தை முறையா நிரப்ப லைன்னு கருதினா, அதை ரிஜெக்ட் பண்ணிடு வாங்க, ரெண்டாவது, இந்த படிவத்தை நீங்க ஜெராக்ஸ் எடுக்கமுடியாது. நீங்க தப்பா எழுதிட் டாலும், ஜெராக்ஸும் எடுக்கமுடியாது... அவங்களும் வேற படிவம் தரமாட்டாங்க.
பொதுவாகவே தேர்தல் ஆணையத்தோட நோக்கம், எவ்வளவு முடியுமோ, அவ்வளவு வாக்காளர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குறதுதான். உரிமையுள்ள வாக்காளர்களை சட்டத்திற்கு உட்பட்டு சேர்க்கணும்கிறதா தெரியலை. இதை தமிழ்நாட்டு மக்கள் தெளிவா புரிஞ்சுக்கணும். இதனாலதான் "இந்தியா' கூட்டணி காங். -தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள், இன்னிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இந்த எஸ்.ஐ.ஆர், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தை கடுமையாக எதிர்க்கிறோம்.
தமிழ்நாட்டுல இருக்கிற 6 கோடியே 36 லட்சம் பேரும் புதுசா இந்த பேப்பரை நிரப்பிக் குடுத்தாதான் ஓட்டு... இல்லன்னா உங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொல்றதுக்கு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இந்திய தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வினுடைய கைப்பாவையாக மாறி, நியாயமான, வெளிப் படையான தேர்தல் நடத்துவதை சிதைச்சுக் கிட்டிருக்காங்க.
ஆக, இது தேர்தலை முறையாக, நேர்மையாக, வெளிப்படையாக நடத்துறதுக்கு வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்கிற ஒரு நிகழ்வல்ல... தமிழ்நாட்டு மக்களை, மிச்சமிருக்கிற 12 மாநில யூனியன் பிரதேச மக்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குறதுக்கான முயற்சி. இந்திய தேர்தல் ஆணையத்தின் இம்முயற்சியை நாம கடுமையா எதிர்க்கணும்.
தொகுப்பு : கீரன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/07/sir-2025-11-07-13-36-43.jpg)