மிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரம் காட்டிவருகிறது. ஒருபுறம் உச்சநீதிமன்றத்தில் இந்த தீவிர திருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு வழக்குத் தொடர்ந்திருப்பதோடு, தேர்தலுக்கு நெருக்கமாக இந்தப் பணிகளில் அவசரம் காட்டவேண்டிய அவசியமென்ன என்ற வினாவையும் தி.மு.க. கூட்டணியினர் மக்கள் மன்றத்தில் முன்வைத்து பல்வேறு கேள்விகளை எழுப்பிவருகின்றனர்.

Advertisment

தி.மு.க.வின் சட்டத்துறை செயலாளரும் எம்.பி.யுமான என்.ஆர்.இளங்கோ 2002, 2005 எஸ்.ஐ.ஆரில் தரவுகள் ஒத்துப்போகாதவர்கள் அவர்களது ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமென எஸ்.ஐ.ஆர். படிவத்தில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் எப்படி தகவல் தெரிவிக்கும்? தொலைபேசியிலா, அஞ்சலிலா, பொதுஅறிவிப்பின் மூலமாகவா? இந்த ஆவணங்களை எங்கு சமர்ப்பிக்கவேண்டும்? ஆட்சியர் அலுவலகத்திலா, தாலுகா அலுவலகத்திலா, வேறு ஏதேனும் இடத்திலா? இதுபோன்ற சந்தேகங்களுக்கான வழிமுறைகளை முன்கூட்டியே தெரிவிக்காமல் தேர்தல் ஆணையம் மௌனம் காப்பது ஏன்?''’என்ற கேள்விகளை எழுப்பினார்.

Advertisment

இன்னொருபுறம், தேர்தல் ஆணையம் இந்தப் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முறையாகப் பயிற்சியளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததோடு, வருவாய்த் துறையினர், தங்களது வழக்கமான பணிகளோடு வாக்காளர் திருத்தப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்துவதற்கு எதிராக ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை மேற்கொண்டனர். 

இதற்கிடையில், எஸ்.ஐ.ஆர். கணக்கீடு படிவத்தை முன்வைத்து ஒரு சந்தேகமெழுந்துள்ளது. படிவத்தோடு சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்களின் பட்டியல் என்று 13 வித ஆவணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் 13-வது ஆவணம் என்னவென்றால், 01-07-2025 அன்று பீகாரிலுள்ள தீவிர திருத்தப் பட்டியலில் இடம்பெற்ற ஆவணத்தின் பிரதியை இணைக்கச் சொல்லியிருக்கிறது. தமிழ்நாட்டு தேர்தலுக்கும் பீகாருக்கும் என்ன சம்பந்தம்?

Advertisment

SIRa

பீகாரிலிருந்து இங்கே வந்து செட்டிலானவர்கள், பீகார் திருத்தப் பட்டியலில் இடம்பெற்ற நகலைக் கொடுத்து, படிவம் 6-ஐ எழுதிக்கொடுத்தால் இங்கே அவர்களுக்கு ஓட்டுரிமை கிடைத்து, தமிழகத் தேர்தலில் வாக்களிக்கமுடியுமோ என்ற சந்தேகத்தை பலரும் எழுப்பிவருகின்றனர். இந்த வருட பீகார் சிறப்புத் தீவிர திருத்தப் பட்டியலில் இடம்பெற்றவர்கள் பெரும்பாலும் பீகார் தேர்தலில் வாக்களித்திருக்க வாய்ப்பிருக்கிறது. அவர்களுக்கு தமிழகத் தேர்தலிலும் வாக்களிக்க வாய்ப்பளிப்பது என்பது அத்துமீறல் ஆகாதா? ஜனநாயகப் படுகொலை ஆகாதா?

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரான பரக்கலா பிரபாகர், எஸ்.ஐ.ஆர். என்பது ரத்தமில்லாத அரசியல் படுகொலை எனச் சொல்லியிருக்கிறார். அந்தப் படுகொலை நிகழாமல் உச்சநீதிமன்றம் காக்குமா?